Saturday, April 13, 2013

சாக்கியகுல கணித மேதைகள் கணித்த நாள் கிழமை ஆண்டு பண்டிதமணி சாக்கியகுல மேதை அயோத்தி தாசர்


சாக்கியகுல கணித மேதைகள் கணித்த நாள் கிழமை ஆண்டு
பண்டிதமணி சாக்கியகுல மேதை அயோத்தி தாசர்

கிழமை வாரம் எனும் பலன் தரும் உலகில் முத்னாளாகும் சூரியனும். இரண்டானாளாகுஞ் சந்திரனும், மூன்றானாளாகும் செவ்வாயும், நான்கானாளாகும் புதனும், ஐந்தானாளாகும் வியாழமும், ஆறானாளாகும் வெள்ளியும், ஏழானாளாகும் சனியும் ஆகிய சூரியன், சந்திரன், பூமி, நீர், காற்று, வெளி, இருள் ஏழு வாரத்தின் சூழலையும், ஏழுவாரத்தில் தோற்றும் பதினைந்து திதிகளின் சூழலையும், பதினைந்து திதிகளின் வடனோக்கு தென்னோக்குகளால் மாறும் பூரண சந்திரன் அபூரண சந்திரன் எனும் இரு பட்சங்களையும், இரு பட்சங்களாகும் நாள் முப்பதில் தோன்றும் முக்கிய நட்சத்திரங்கள் இருபத்தியேழும், இருபத்தியேழு நட்சத்திரங்களில் இரண்டேகால நட்சத்திர பீடங்கொண்ட இராசி பணிரன்டையும் அடிற்றங்கி யாடும் வலவோட்டுக் கிரகங்கள் எழும். இடவோட்டுக் கிரகங்கள் இரண்டும். ஆக ஒன்பதுக் கிரகங்களையும் மழைக்காலம், வெய்யல் காலம, பணிக்க்காலமாகும் முக்காலங்களையும் சோதிகளின் இடங்களை கொண்டே  சோதித்து கணிதங்களில் நிறுத்தி கணிதமாகும் பெருக்கினாலும் குறிக்கினாலும் உண்டாகும் குனிப்பால் மழையின் திக்குகளையும், கலங்களையும், காற்றின் திக்குகளையும், அதன் கலங்களையும் உலகத்தாருக்கு விளக்கி தேச சுபாசுபங்களைப் போதித்ததுமன்றி உலகின் ஆறாவது தோற்றமாகிய மநுக்களின் பிண்டோற்பவக் காலவரையில் குழவியின் சிரவுதயம் எந்த விராசியில் உதித்ததோ அதையே லக்கிடமாகவும், ஒன்பது கிரகங்களின் நிலைகளைக்கொண்டு குழவிக்கு நேரிட்ட செல்கால் பலன்களையும் திடமாகக் கூறும் வல்லபத்தினால் சாக்கையனெனும் காரணப்பெயரையும் பெற்றான். அவன் தாய் தந்தையர் கொடுத்த பெயர் (கலியன்) ஈகையிலும் கணிதத்திலும் பேர்பெற்றிருந்ததுமன்றி வாகு வல்லயமென்னும் ஆயுதங்களைக்கொண்டு புஜபலாபராககிரமத்தினால் சகல அரசர்களையுஞ் செயித்து வட அயோத்திபுரி என்னும் மகததேசத்திற்குத தலைத்தார் வேந்தனென்னும் சக்கிரவர்த்தியாக விளங்கினபடியால், வாகுவென்னும் ஆயுதவல்லபத்தால் கலிவாகு சக்கிரவர்த்தி என்னுந் தீவிர பெயர் உண்டாயிற்று. அவன் ஏக சக்கிரவர்த்தியாக ஆண்ட இவ்வுலகிற்கு கலியுலகமென்று வகுத்ததுமன்றி அவன் தலைத்தார் வேந்தன் என்னும் சக்கிரவர்த்தி பீடத்திற்கு வந்தது முதல் கலியுலக வருஷமென்னும் ஓர் கணித நிலையையும் வகுத்து வைத்தான். அவன் வம்மிச வரிசையோர் கணிதத்திலும் சிறப்புற்றிருந்தும்ன்றி வாகுவென்னும் ஆயுதவல்லபத்தால் கலிவாகு, குலவாகு, கணவாகு, வீரவாகு, இட்சுவாகு என்னும் ஒன்பது சக்கிரவர்த்திகள், கலியுலகமென்னும் தங்கள் மூதாதை கணித்த வருஷத்தைகொண்டு சகல கணிதங்களையும் வரிவடிவின்றி ஒலிவடிவாம் சுருதியில் நிலைக்கச் செய்யும் ஆறாவது சங்கத்தோர் தோன்றினார்கள்.

அவன் அரசுக்கு வந்த காலத்தில் தேசமெங்கும் மழை பெய்து பயிர்களோங்கி குடிகளும் சிறப்புற்று அரசனும் சன்மானிக்கப்பெற்றான். அதை உணர்ந்த கலவாகு மேஷராசியிறக்கு சூரியன் வந்த காலத்தில் அரசை ஏற்ற்படியால் அதையே முதல் மாதமாக்கி மீனத்தில் சூரியன் வருங்காலத்தைக கடைமாதமாக்கி ஒரு வருஷமென வகுத்து அவ்வருஷத்தில் தான் கண்ட சுப பலன்களால் அதையே தன்னரசுக்கு முதல் வருஷமாகக் கொண்டு  பாலி பாஷையிற் பிரபவ வருஷமென்னும் பெயரைகொடுத்தான்.

அதை அனுசரித்து பின்வரும் வருஷங்களில் கிரகசஞ்சார பேதங்களால் உலகத்தில் உண்டாகும் சுபாசுப குணங்களை அனுசரித்து நிறைவேறிவரும் பலன்களுக்கு தக்கவாறு விபவ, சுக்கில, பிரஜோத்பத்தி, ஆங்கிரிஸ், எனும் பெயர்களை கொடுத்துவந்தான் .

இவ்வகையாக அவ்வவ் வருஷ குணாகுனங்களுக்குத்தக்க பெயர்களைக்கொடுத்துக்கொண்டு அவன் அரசுக்கு வந்த அறுபதை அக்ஷய வருஷம் என்னும் பெயரை கொடுத்து அதே வருஷத்தில் மரணம் அடைந்தான்.

இக்கணிதங்களை அனுசரித்து வந்த சக்கைய  குலத்தார் கலிவாகுச் சக்கிரவர்த்தி அரசுக்கு வந்த அறுபது வருஷத்திற்கு மேல் அறுபத்தொன்று, அறிபத்திரண்டென்னும் நீண்ட கணக்காக்கி அவனது அறுபது வருஷ அரச வாழ்க்கை கியாபகத்தில் மாறாமலிருப்பதற்கு கனிதா சிந்தனை சுருதி சிந்தனையில் பதித்து வந்தார்கள்.  

மணிமேகலை

கதிரோன் தோன்றுங் கலையாங்கவ
னவிரொளி காட்டும் மதியே போன்று
மைதிருள் கூர்ந்த மனமாசு கழு உம்,
புத்த ஞாயிறு  தோன்றுங்காலை
திங்களு ஞாயிறுந் தீங்குறா விளங்க.

யிருதினவேணி வெறிகதி ரிடபத்.
தொருபதின் மேலும் ஒரு மூன்று சென்றபின்.
மீனத்திடனில்லை மீனத்த்கவையில்,
போதித்தலைவனோ பொருந்திய போழ்தத்து.

சாக்கையராளுந் தலைத்தார் வேந்தன்
ஆக்கயுற்று நித்தன னாங்கவன் றானேன்.
தன்னான் சாக்கையர் தவள மால் வரை
மண்முகனெடு மாவரசிடநிலை

பொன்னின் கோட்டது பொற்குளம்புடையது
தன்னலம் பிறர்தொழ தான் சென்றெய்தி
யீனாமுன்னா இன்னுயிர்க்கன்று
நான் முலை சுரந்து நன் பலூட்டலும்.

கலிவாகு சக்கிரவர்த்தியின் அரசாங்க கலியுகத்தின் நீண்ட கணக்கு 1616 இல் சக்கைய குல வீரவாகு வம்மிச வரிசையில் மண்முகவாகென்னும் அரசனுக்கும் மாதேவி என்னும் இராக்கினிக்கும் சித்தார்த்தி வருஷம் வைகாசி மாதம் 13 ஆம் நாள். பௌர்ணமி திதி கேட்டை நட்சத்திரம் மீனலக்கினம் ஆதிவாரம் அதிகாலையில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

No comments:

Post a Comment