Saturday, April 13, 2013

#தமிழகத்தில் மாணவர்கள் பெரியதொரு எழுச்சியை உருவாக்கினர். அரசியல் அரங்கில் குறிப்பிடதக்க மாற்றங்களையும் வெளிப்படையாக உருவாக்கினர். நாளை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்வு இந்தியா முழுவதும் தலித்துகளால் கொண்டாடப்பட இருக்கிறது. சமீப போராட்டங்களினூடாக பொதுவெளிக்கு போராட வந்த மாணவர்கள்...அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொள்வதும்..தலித்துகளின் வலிகளையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ள முயல்வதும் தமிழ்ச்சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துமென்று நினைக்கிறேன்.. இந்த நிலைத்தகவலை காண்பவர்கள், தத்தமது தொடர்பிலிருக்கும் மாணவர்களிடம் இதை கோரிக்கையாக முன்வையுங்கள்...நானும் என் தொடர்பிலிருக்கும் சில மாணவர்களிடம் அதை கோரிக்கையாக வைக்கிறேன்..# 

மாணவர்கள் என்ன தனி அரசாங்கம் நடத்திட்டு இருக்காங்களா. நாம் அவர்களிடம் கோரிக்கை வைக்க. கருணை மிக்க கணம் பொருந்திய மாணவ கண்மணிகளே உங்கள் கண் பட்டாள் அம்பேத்கர் மணிமண்டபம் சுபீட்சம் அடையும் வாருங்கள். வந்து உங்கள் கால்களை மணிமண்டபத்தில் வையுங்கள். உங்கள் காலடி பட்டால் சேரி மக்கள் எல்லாம் விடுதலை அடைந்து விடுவார்கள். சூடு சுரணை இல்லாமல் அந்த கூட்டதில் ஒன்டியிருக்கும் ஒன்னு ரெண்டு தலித் மாணவர்களுக்கு  இன்னைக்கு சுரணை வந்தால் நல்லா இருக்கும். 


புத்தர் பிறந்த ஆண்டு எங்களுக்கு புதிய ஆண்டு இல்லை. சாக்கிய சந்திரவாகு அரசன் உருவாக்கிய ஆண்ண்டுதான் எங்களுக்கு புத்தாண்டு. அதன் அடிப்படியில் சித்தரை முதல் நாள் அல்லது ஏப்ரல் 14 (சில வருடம் மாறி வரும்) ஆகிய நாட்களே புத்தாண்டு.  

#மாணவர்கள் சாதி கடந்து ஒருங்கிணையணும், தலித்துகளின் வலியை புரிந்து கொள்ள வேண்டுமென்று எழுதினால்..#


கோபபடாதீங்க மகிழ். இது உளரல் இல்லை. அவுங்க கிட்ட கோரிக்கை வைக்கனும்னு சொன்நீங்களே. அதான் கேட்டேன். 

தமிழ் நாட்ல நானே தலைவன்னு ஒருத்தர் சொல்லிட்டு திரிஞ்சாறு.

டிஸ்கசன் தேவை தான். நல்ல வழி முறை. சமமானவர்களிடம் உரையாடலாம்.

சுலைமான் சையத் என்பவர் தமிழர் இல்லை இஸ்லாமியர் என்று நாம் தமிழர்கள் சொல்லுவார்கள் அதுக்கு நம்ம புரட்சி தமிழர்கள் ஜாலரா தட்டுவார்கள்.

No comments:

Post a Comment