Monday, April 8, 2013


#புத்தர் இந்துவாகத்தான் இருந்தார்.#

ஐயா சாமி என்ன இப்படி கதை சொறீங்க. புத்தர் காலத்தில் இந்து என்று ஒரு மதம் இருந்ததா? இந்து எனும் ஒரு வார்த்தை இருந்ததா? சித்தார்த்த கோதமர் ஆறு வயசில் புத்த விஹார் சென்று வணங்கியதாக  புத்த இலக்கியங்கள் சொல்லுகிறது. சித்தார்த்தர் பிறக்கும் முன்னர் இருந்த புத்த விஹாரங்கள் அகழ்வாராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. சித்தார்த்தர் துறவு போக காரணமான நான்கு காட்சிகளில் ஒன்று பிக்கு (புத்த துறவி), சித்தார்த்தர் புத்தர் ஆவார் என்று அவர் குழந்தையாக இருக்கும்போதே கணித்து சொல்லப்பட்டது. சாக்கிய சமூகத்தில் புத்தர் ஆவது மக்களின் குறிக்கோளாக இருந்து உள்ளது. சித்தார்த்தரின் மாமனார் பெயர் சுப்ப புத்தா. இதுக்கு மேலேயும் பல செய்திகள் சாக்கியர்கள் பூர்வீக பவுத்தர்கள் அவர்கள் சித்தார்த்தர் பிறக்கும் முன்னரே புத்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்ல ஆதாரங்களாக உள்ளன. 

 தமிழும் சமஸ்கிருதமும் பாலி மொழியில் இருந்து தோன்றிய மொழிகள் என்று பண்டிதர் அயோத்திதாசர் சொல்கிறார். 

No comments:

Post a Comment