Monday, April 8, 2013


இரண்டு நாளைக்கு தருமபுரி பத்தி பேசுவது. நான் பறையன் நான் தலித்துன்னு இங்கு மக்களை திரட்டுவது. மூணாவது நாளைக்கு தமிழ் தேசுயம் பேசுவது. அங்கு தமிழ் தேசிய போட்டியில் ஜெயிக்க முடியலனா வாங்க வந்து நமது சமூக தலைவருக்கு தோல் கொடுங்கன்னு ஈழ விடுதலைக்கு எங்களை கூப்பிடுவது. நல்ல அரசியலப்பா உங்க அரசியல். 

#அய்யா புத்தர் பறையரா ?? அவர் சத்திரியர் தானே?#

பறையர் என்றாலே பவுத்தர்கள் என்பது பறையர்களின் வரலாற்றை அறிந்த அயோத்திதாசரும் ஆனனல் அம்பேத்கரும் சொல்கிறார்கள். புத்தர் அரசர் இல்லை அவர் ஆண்டி. ஆண்டியை ஷத்திரியர் என்று சொல்ல கூடாது. சித்தார்த்தர் புத்தர் ஆகும் முன்னர் அரசனுக்கு மகனாக பிறந்தார். அவர் பிறந்தது அரச குடும்பத்தில் அரச குலத்தில் ஷத்திரிய வருணத்தில் இல்லை.  சாகியர்கள் சமணசமூகத்தை (ஜெயினர்கள் இல்லை) சார்ந்தவர்கள். பார்ப்பன சமூகத்தில்தான்  வருண முறை இருந்தது சமண சமூகத்தில் வருண முறை கிடையாது. சாக்கிய சங்கம் என்பது அன்றைய பாராளு மன்றம். சாக்கிய சமூகத்தில் பிறந்த அனைவரும் 16 வயது ஆனவுடன் சங்கத்தில் உறுப்பினர் ஆகலாம். அப்படி சாக்கிய பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் சித்தார்த்தரின் தகப்பனாரை அரசராக தெரிந்தெடுத்தனர். அவர்கள் பிறப்பின் அடிப்படையில் அரசனை தேர்ந்தெடுக்கவில்லை. 

#அம்பேத்கர் மஹர் சங்கத்தில் தானே இருந்தார் . அவர் பட்டியல் இன மக்கள் விடுதலை என்று தானே பேசினார் , பறையர் என்று பேசவில்லையே எங்குமே !!#

அண்ணல் அம்பேத்கர் சாகும் வரை மகார் சங்கத்தில் உறுப்பினர். அவர் மதம் மாறும்போது கூட மஹார் சங்கத்தில் கலந்து ஆலோசித்துதான் மதம் மாறினார். அவர் பறையர் பற்றி பேச வில்லையா? அவர் மஹார் என்று பேசியது யாரை பற்றி? அவர்கள் பறையர்கள் தானே? மஹார்கள் பறையர்கள் இருவரும் ஒருவரே ஒரே சமூகத்தவரே என்று அண்ணல் தீண்டத்தகாதவர் யார் எனும் புத்தகத்தில் சொல்லியுள்ளார். மாஹரும் பறையர்களும்  மொழியால் வேறுபட்டு இருந்தாலும் ஒரே சமூகத்தவர் என்பது மானுடவியல் மாணவர்களை கேட்டால் சொல்லுவார்கள்.  தமிழகம் ஆந்திரா கர்நாடகா எல்லைகளில் உள்ள பறையர் ஹோலையர் மகார்  மாலா மக்கள் பற்றிய ஆராய்ச்சி செய்த மானுடவியல் அறிஞர்களை கேளுங்கள் அவர்கள் சொல்லுவார்கள் இந்த சமூகங்கள் ஒரே சமூகம் என்று. தமிழக எல்லைகளில் தெலுகு பேசும் மாலாக்களை சூத்திர தமிழர்கள் தெலுங்கு பறையர்கள் என்று சொல்வது போல சூத்திர தெலுங்கர்கள் ஆந்திர மகாராட்டிர எல்லைகளில் மகார்களை மராட்டிய மலாக்கள் என்கின்றனர். இப்படியே எங்கள் சமூக அமைப்பு  இந்தியா முழுக்க உள்ளது. அணைவரும் பறையர்கள்தான்.  பறையர்கள் ஒருங்கிணைவது போல பள்ளர்களும் சக்கிளியர்களும் ஒருங்கிணையட்டும். நாங்கள் அவர்களை எதிர்க்கவில்லையே? அவர்கள் உரிமைக்கும் சேர்த்தே குரல் கொடுக்கிறோம். தேவை ஏற்படும்போது சாக்கியர்கள் (தலித்துக்கள்) என்று ஒரு அணியில் திரளுவோம்.  

 

நான் இங்கு பறையர் ரெஜிமெண்ட் பற்றி பேச வில்லை. பறையர் பண்னையால்கள் எல்லாம் இணைந்து வெள்ளாள மிராசுதார்களை எதிர்த்து பெரிய தம்பி பறையனார் தலைமையில் நடத்திய புரட்சியை பற்றி பேசுகிறேன். 

#சரி அப்படியே இருக்கட்டும் , இப்போ அருந்ததியர்களையும் , பள்ளர்களையும் " பறையர் " என்று சொல்லி உங்களால் ஒன்று படுத்த முடியுமா ?? வரலாறு ! வரலாறு என்று சொல்லி எல்லாம் அரசன் , எல்லாம் ஆட்சி செஞ்சவன் என்று மக்களை குழப்பி எப்பா ........ஒன்னு மட்டும் நல்ல புரிது . இனி சேரிகளின் எழுச்சி என்பது கேள்வி குறி தான் !!#

நாங்க அரசன் ஆண்ட பரம்பரை என்று இங்கு சொல்லவில்லையே. எதுக்கு இப்படி விரக்தி ஆகிறீர்கள். நான் இங்கு சொல்லவந்தது  எங்கள் விடுதலை என்பது ராமசாமியோ அல்லது தமிழ் தேசிய ஜாராக்களோ போட்ட பிச்சை அல்ல 1785 ஆண்டே எமது மக்கள் ஜாதி  தமிழர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து புரட்சி செய்து உள்ளனர் என்று சொல்கிறேன். அதுக்கு என் இப்படி வயிற்று எரிச்சல் படுகிறீர்கள். உங்களுக்கு பயந்து எங்கள் வரலாற்றை பேசாமல் இருக்க முடியாது தமிழரே. 


#இந்திய தண்டனை சட்டம் உருவாக்கிய மெக்காலே கூட பறையர்கள் என்று சொல்லி எழுதயுள்ளார் , அம்பேத்கர் மஹர் சங்கத்தில் இருந்தார் , மஹர் சமுகத்தில் இருந்த 18 பிரிவுகளை அழைத்து சமபந்தி நடத்தியவர் , மஹர் - சம்மர் என்ற உட் சாதி பிரச்சனை தலைவிரித்து ஆடியது போல பல விசியங்கள் நீங்களும் அறிந்ததே . பல்வேறு வரலாற்று இருட்டடிப்புகள் நடந்து விட்டது என்பது உண்மை யாரும் மறுக்கவில்லை , ஆனால் இன்று " நாம் பறையர்கள்" என்று பரப்புரை செய்து அதில் எப்படி வெற்றி பெற முடியும் . என்பது தான் என் கேள்வி .#

உங்கள் கேள்வியே அதற்க்கு பதில். அண்ணல் அம்பேத்கர் மகார்களை வைத்தே அவரது இயக்கத்தை நடத்தினார். அவர் மற்றவர்களை சேர்க்க மாட்டேன் என்று சொல்லவில்லை. ஆனால் அவர் பலம் மகார்கள் என்று அவர் தெரிந்து வைத்து இருந்தார். அதனாலதான் அவர் தொடர்ந்து மகார் மக்களை ஒருங்கிணைப்பதில் அதிக கவனம் செலுத்தினார். முதலில் எமது  மக்களை ஒருங்கிணைத்து அவர்களை முன்னேற்றும் பணியில் ஈடு படுகிறேன். பிறகு தேவை படும்போது மற்ற ஒடுக்கப்பட்ட மக்களோடு இணைகிறேன் என்பதே அண்ணலின் வழி முறை. அவர் சம்மர்களுக்கோ மாங் சமூகத்துக்கோ எதிரி இல்லை. ஆனால் மகர்கள் அவருடைய பலம். அதுபோலத்தான் தற்போது தமிழ் நாட்டில் பறையர் அமைப்புகள் பறையகளின் எழுச்சிக்காக செயல் பட்டு வருகின்றன. 

#1785 ஆம் ஆண்டே வெற்றி பெற்று விட்டோம் என்றால் இன்றைக்கு ஏன் அய்யா சேரிகள் இருக்கு.#

1785 ஆம் ஆண்டே வெற்றி பெற்று விட்டோம் என்று சொல்லவில்லை. எங்கள் விடுதலை இயக்க வரலாறு  நீண்ட வரலாறு என்கிறோம். 


#ராமசாமி தலித் அல்லாதவர் என்பதால் வயிற்று எரிச்சல் கொண்டு பேசுவது போல உள்ளது.#

ஆமாம் வயிறு எரிகிறது தான் யாரோ பெத்த பிள்ளைக்கு யாரையோ அம்மா  என்றால் பெத்தவளுக்கு வயிறு எரியத்தானே செய்யும். ஆண்டான்டு காலம் அடி பட்டு உதய் பட்டு போராடி உரிமைகள் வாங்கி கொடுத்தா யாரோ வந்து உரிமை கொண்டாடினா வயிறு எரியத்தானே செய்யும். 

#ராமசாமி மோசம் நான் பூலே பத்தி மட்டும் ஏன் திட்ட மாற்றீங்க?#

தமிழ் நாட்டில் ராமசாமி என்பது திராவிட அரசியல். இங்கு பூலே இல்லவே இல்லை. திரரவிட இயக்கம் பூலேவை கொண்டுவந்து எங்கள் மீது திணித்தால் அப்போது அவரையும் எதிர்ப்போம்.  

#உங்களை நான் சாதி வெறி தலைக்கு ஏறிய சாதியவாதியாக தான் பாக்குறேன்.#

தமிழ் தேசிய திராவிட ஜால்ராக்கள் இப்படி தான் சொல்வார்கள். எல்லோரும் பறையர் எனும் அடையாளத்துக்குள் வந்து பறையர் விடுதலை பற்றி பேச ஆரம்பித்து விட்டால். அங்கு தமிழ் தேசியத்துக்கும் திராவிடத்துக்கும் மாரடிக்க ஆள் இருக்க மாட்டார்கள் எனும் பயம் உங்களுக்கு. 


#நாகரிக, நகர தமிழனிடம் ஒரு கேள்வி???!!! "நீ பேசுகிற கொச்சை தமிழை தவிர ... வேறு என்ன அடையாளம் உன்னிடமிருக்கிறது?? நீ ஒரு தமிழன் என்பதற்கு!!!???#

அது இன்னாப்பா அது கொச்சை தமிழ் அப்புறம் எச்சை தமிழ். 


# பவுத்தம் தழுவிய பின் அண்ணல் எடுத்துக்கொண்ட 22 உறுதிமொழிகளில் முதல் நான்கை கீழே கொடுக்கிறேன். இந்து கடவுள் படங்களை வணங்கலாமா என்று அப்புறம் சொல்லுங்கள் .#

இந்து கடவுள்களை எந்த பவுத்தர்கள் வணங்கி கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள். 


#இந்துக்கடவுலரை பவுத்தர்கள் வணங்கினாலும் ஒன்றும் பெரிய தவறில்லை என்ற பொருள்பட நீங்கள் எழுதியதால் நானும் எழுதினேன்.#

இந்து கடவுளை வணங்குவது தப்பா இல்லையா என்பதை விட ஐந்து ஒழுக்கம் என் மார்க்கம் புத்தரின் பத்து குணங்கள்  முக்கியம் என்று சொன்னேன். கடவுள் உண்டு எனும் ஆதிகம் அண்ணல் அம்பேத்கரின் கொள்கைக்கு எவ்வளவு எதிரானதோ அவ்வளவு நாத்தீக கொள்கையும் மத மறுப்பு கொள்கையும் எதிரானது என்று எழுதினேன் 

#உங்கள் சாதி பயணம் எதையும் மாற்றாது.#

பாறையர் என்பது ஜாதி இல்லை. 


தமிழ் தேசிய திராவிட சூத்திர ஆண்டைகளை விட நம்ம சமூகதில் பிறந்து விட்டு தமிழ் தேசியத்துக்கும் திராவிடத்துக்கும் ஜால்ரா அடிக்கும் இந்த ஜால்ராக்களின் தொல்லை தாங்கலடா சாமி. 


#அண்ணலை முன்னிறுத்தி பார்பனிய பௌத்தம் பேச வந்துவிட்டார்கள்.#

எது பார்ப்பனிய பவுத்தம்னு விளக்கமா சொன்னா திரித்திக்குவோம். அண்ணலின் வாயில் ராமசாமியின் எச்சிலை துப்பி அதுதான் அண்ணல் சொன்ன பவுத்தம்னு சொல்ல கூடாது. அண்ணல் சொன்ன பவுத்தம் என்ன நாங்கள் அங்கே அதுக்கு எதிர்ப்பா பேசுறோம்னு சொல்லுங்க. 


#ஜாதி பெயரை எவன் போட்டாலும் ... அதன் உள் அர்த்தம்.. மூளை கோளாறு உள்ளவன் அல்லது மன நோயாளி என்பதே... அது பறையனா பார்ப்பானா ... யாராக இருந்தாலும்...நிலை ஒன்று தான்.#

பறையன் என்பது ஜாதி அல்ல. உங்களுக்கு மன நோயென்று நினைக்கிறேன் அதான் இப்படி ஒரு கமெண்டை போடுகிறீர்கள் நல்ல மருத்துவரை பாருங்கள். 



தன்னை தவிர வேறு யாருக்கும் பேச கூடாது என்று சொல்லவில்லை. தன்னை தவிர மற்றவன் எல்லாம் உயர்ந்தவன் என்று தலையில் தூக்கி வைத்துகொண்டு ஆடிவதை தான் சரியில்லை என்று சொல்கிறேன். 

அப்படித்தான் நாத்திக கூட்டம் அசிங்க படுத்திக்கொண்டு இருக்கிறது. நாத்தீகம் பேசலை எனில் அதுக்கு பேரு பார்ப்பனிய பவுத்தம். 


அப்படி பட்ட எண்ணம் எங்களுக்கு எப்போதும் இருந்தது இல்லை. நாங்கள் எந்த ஜாதி இந்துவுக்கும் ஜால்ரா அடித்தது இல்லை. 


பாவம் ரொம்ப விரக்தி ஆகி இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. நல்ல மருத்துவரை பாருங்கள்,


#நீங்க சாதி பாசம் கொண்டவங்க நாங்க அப்படி இல்லை.#

பறையர் என்பது ஜாதி இல்லை. எனக்கு என் சமூகத்தின் மீது பாசம் தான். 

பிரம்மனை நம்பினால் தவறில்லை #

அப்படி சொன்னதா நீங்க புரிஞ்சிக்கிட்டா நான் என்ன செய்வது. 


இந்துக்கள் உங்களை கூட ஏற்ற்றுகொள்வர்கள். என்னை போன்றவர்களி ஏற்க்க மாட்டார்கள். இந்து மதத்தை எல்லா விதத்திலும் எதிர்ப்பவர்கள் நாங்கள். இந்து மதத்தை தமிழர் திராவிடர் எனும் பெயரில் கூட ஏற்க்க முடியாது என்பதே எங்கள் வாதம். 



அதுக்கு அப்புறம் என்ன எழு தியுள்ளேன் என்பதையும் சொல்லுங்கள். 

என் குடும்பத்தின் மீது எனக்கு பாசம். அதுக்காக மற்ற குடும்பங்களை வெறுக்கிறேன் என்று அர்த்தம் இல்லையே.


சரி அப்படியே புலம்பிட்டு இருங்க. நீங்க கீழ் பாக்கம் போக தேவை இல்லை அவர்களே வந்து கூப்பிட்டுட்டு போயிடுவாங்க. எனக்கு வேறு வேலை இருக்கு. உங்க நிலையை நினச்சா மனசுக்கு ரொம்ப கஷ்ட்டமா இருக்கு. இதுக்கு பெயர் அப்சசிவ் டிஸ் ஆர்டர். பாத்து அதிகமா ஆயிடப்போகுது. 



#பிரம்மனை நம்ப மாட்டேன் என்று அண்ணல் சொல்கிறார். ஆனால் பிரம்மன் இல்லை என்று அவர் சொல்லவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள்.#

பிரம்மன் இல்லை என்று அண்ணல் சொல்லவில்லையே. பிரம்மணை வணங்க மாட்டோம் என்றுதானே சொல்கிறார். பிரம்மன் வந்து புத்தரை வணங்கியதாக அவர் எழுதுகிறார் என்றுதானே சொன்னேன். 

No comments:

Post a Comment