Saturday, April 20, 2013

பறை தேசி பர தேசியாகவில்லை. பர தேசிதான் பாற தேசியாகி பின்னால் பறை தேசியானது. தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சியில் "ர" என்பதே பின்னால் "ற" ஆனது.  தமிழின் தாய் மொழி யான பாலியிலும் தாய் எழுத்தான பாலி பிரமியிலும் "ற" கிடையாது.  பர ஜாதியே பின்னால் பற ஜாதியாகி, பின்னர் பறை ஜாதியானது. பர என்பதற்கு ஆதியில் அர்த்தம் உயர்ந்த என்று பொருள். பர பிரம்மம் பர லோகம் பரம சிவன் பரஞ்சோதி என்று இந்த வார்த்தை ஆதியில் மிக உயர்வாக  இருந்தது. அய்யா என்பது பர அய்யா என்று சொல்லும்போது உயர்ந்த அய்யா என்று அர்த்தம் பர அய்யர்  என்றால் உயர்ந்த அய்யர். ஆதியில் ஜாதி என்றால் பிறப்பு பர ஜாதி என்றால் நல்ல பிறப்பு/ உயர் பிறப்பு.  ஆனால் இப்போது எல்லாமே தீண்டத்தகதவர்களின் வார்த்தையாக ஆகி விட்டது. பர என்றால் வெளி ஆகி. பர தேசி என்றால் வெளி நாட்டவர் ஆகி பர ஜாதி என்றால் வெளி ஜாதியினர் ஆகி பர அய்யா என்றால் வெளி நாட்டை / வெளி தேசத்தை / வர்ணத்துக்கு வெளியானவர்கள் / சாதிக்கு வெளியானவர்கள் என்று அழைக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment