Monday, April 8, 2013

வெறும் பார்ப்பனர்களை மட்டும் எதிர்ப்பவர்களுக்கு அம்பேத்கரிசம் புரியாது. இந்து மதத்தையும் அதன் பல்வேறு பரிமானங்களான பரப்பான-சூத்திர ஆதிக்கத்தையும் ஆத்திக-நாத்திக வாதத்தையும் எதிர்ப்பதே அம்பேத்கரிசம். அண்ணல் அம்பேத்கரா பார்ப்பனர்களை மட்டும் எதிர்க்கவில்லை. அவர் காலத்தில் இருந்த சூத்திரர்களின் ஆதிக்கத்தையும் எதிர்த்தார். ஜாதி இந்து ஆதிக்கம் என்பது பார்ப்பனர் ஆதிக்கம் மட்டும் இல்லை சூத்திரர் ஆதிக்கமும்தான். அண்ணல் பார்ப்பனியத்தை எதிர்த்தது போல திராவிடவதத்தையும்  தமிழ் மொழி வாதத்தையும் எதிர்த்தார். அண்ணல் அம்பேத்கர் புத்தம் தம்மம் வேண்டும் என்று மட்டும் சொல்லவில்லை. அதோடு சேர்த்து பவுத்த மதமும் வேண்டும் என்றும் சொன்னார். மதம் மக்களுக்கு அவசியம் மதம் சார்ந்த அடிப்படை சடங்குகள் மதம் பிரச்சாரம் மத மாற்றம் மதம் ஸ்தாபனங்கள் மதம் பரப்பும் பிரசங்ககிகள் சடங்கு செய்யும் குருமார்கள் அவசியம் என்றும் சொன்னார். இந்து மத கடவுள்களை வனங்க வேண்டாம் என்று சொன்ன அதே அண்ணல் அம்பேத்கர்தான் பிரம்மா வந்து புத்தரை வணங்கி தம்மத்தை மக்களுக்கு பரப்புங்கள் என்று மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறார் என்று எழுதுகிறார். இந்துக்கள் படைபுக்கடவுளாக போற்றும் பிரம்மா இல்லை என்று அவர் சொல்லவில்லை. இந்துக்களின் படைபுக்கடவுளான அந்த பிரம்மா கூட எமது புத்தனை வணக்குகிறான் என்பதே அம்பேத்கரிய அரசியல். அண்ணல் அம்பேத்கர் நாத்தீகம் பேச வில்லை. அவர் ஆன்மா இல்லை ஆனால் மறு பிறப்பு உண்டு என்கிறார். ஆத்திகம் பேசுபவர்கள் ஆத்மா மறு பிறப்பு எடுக்கிறது என்று சொல்கிறார்கள். நாத்தீகர்கள் ஆன்மா இல்லை எனவே இறப்புக்கு பினனர் எதுவும் இல்லை என்கிறார்கள். அண்ணல் அம்பேத்கர் ஆன்மா இல்லை அதே சமயம் இறப்புக்கு பின்னர் எதுவும் இல்லை எனும் நாத்திக கருத்து தவறானது என்கிறார். மறு பிறப்பு உண்டு அதை நான் அறிவியல்  பூர்வமாக நிருபிக்க தயார் என்று சொல்கிறார். அம்பேத்கர்கவாதிகள் ராமசாமியை எதிர்ப்பது ஜாதி வெறியோ அல்லது அவர் மீது கொண்ட காழ்ப்புனர்சியோ இல்லை. அது தத்துவ ரீதியான கருத்தியல் ரீதியான கொள்கை  ரீதியான எதிர்ப்[பு. 



No comments:

Post a Comment