Thursday, April 11, 2013

ராஜபக்ஷே ஒரு நாட்டின் அதிபர். பிரபாகரன் தீவிரவாதி. ராஜபக்ஷே கொலைகாரனோ தீவிரவாதியோ வன்முறையாலனோ இல்லை. எனவே ராஜபக்சேவை பிரபகனோடு இணைத்து பேசுவது முட்டாள்தனமானது. ராஜபக்ஷேவை எதிர்க்கலாம் கேள்வி கேக்கலாம். அது மன்மோகன் சிங், கருணாநிதி, சோனியா, ஜெயலலிதா, திருமா, மாயாவதி   இவர்களை கேள்வி கேட்பது போல. இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் வண் கொடுமைகளுக்கு இந்திய அரசும் தமிழக அரசும் உ பி அரசும் பொறுப்பு ஏற்க்க வேண்டும் மனித உரிமை மீறல்களை காக்க வேண்டியவர்கள் பொறுப்பற்று இருக்க கூடாது என்று ஆட்சியாளர்களை அரச பிரதி நிதிகளை  நாம் கேள்வி கேக்கலாம். ஒரு தலித்தாக ஒரு ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களின் பிரதி நிதியாக ராஜபக்ஷே எனும் ஆட்சியாளரை கேள்வி கேட்கலாம். இந்தியா எப்படி தலித் மக்களுக்கு எதிரான வணகொடுமைகளை இன கொடுமையா  ஏற்றுக்கொள்ள மறுக்கிறதோ அது போலத்தான் இலங்கை அரசும் தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகளை மறுத்து வருகிறது. இந்தியாவை நாம் கேள்வி கேட்பது போலத்தான் கடந்த 60 ஆண்டுகள் இலங்கை அரசையும் கேள்வி கேட்கிறோம். ஆனால் ராஜபக்சே எதிர்ப்பு எனும் பெயரில் நடக்கும் பவுத்த விரோத இந்து ஆதரவு பிரச்சாரங்களை நாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. பவுத்த அரசு பிரதிநிதியை கொலைகாரன் போல சித்தரிப்பது ஒரு இந்து தீவிரவாதியை கஞ்சா கடத்தல் காரனை மாவீரன் மகான் போல சித்தரிப்பது எல்லாம் இந்துத்துவ அரசியலே. உலக நாடுகள் எல்லாம் இன்று பிரபாகரனை தீவிரவாதி என்கிறது. தீவிரவாதியிடம் போய் மனித உரிமை பேச முடியாது ஆனால் ஒரு நாட்டின் பிரதிநிதி மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரச பிரதிநிதி அந்த நாட்டின் ராணுவம் செய்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு  ஏற்க்க வேண்டும் என்பதே இன்று உலக நாடுகள் ராஜபச்கேவிடம் கேட்பது. ஒரு அரச பிரதிநிதி மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு ஏற்க்க வேண்டும் என்பதும் ஒரு பொரிக்கி கஞ்சா வியாபாரி ஆயுதம் கடத்தி தீவிரவாதம் செய்தவரை எதிர்ப்பதும்  ஒன்று அல்ல. கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் நாட்டில் புத்தம் பரவாமல் இருக்க மிக முக்கிய கரணம் சிங்களவர் எதிர்ப்பு இலங்கை பவுத்தர்கள் எதிர்ப்பு எனும் பெயரில் புத்தம் மத எதிர்ப்பு தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. பண்டிதர் போதிசத்துவர் அம்பேத்கர் வழியில்  நடக்கும் பவுத்தர்கள் அணைவரும் தன் பவுத்த சகோதர சகோதரிகளுக்கு எதிராக நடத்தப்படும் இந்துத்துவ பிரச்சாரத்தை எதிர்க்க வேண்டியது அவசியம். இலங்கையில் இன வெறியர்களோ மதவெறியர்களோ இல்லை என்பது நமது வாதம் இல்லை. இந்தியாவில் கூட இனவெறி மத வெறி ஜாதி வெறி பிடித்த பவுத்தர்கள் உள்ளனர். அதற்காக இலங்கையில் உள்ள பவுத்தர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் என்று பொய்யை பரப்புவதை நாம் ஏற்க்க முடியாது. ஆயிரம் வருடம் திரி பீடகத்தை காத்து கொடுத்தவர்கள் இலங்கை பவுத்தர்கள். இந்தியாவில் இந்து வெறியர்களால் புத்தன் போதி அடைந்த போதி மரம் வெட்டி சாய்க்கப்பட்டு அழிக்கப்பட்டது. அதை ஆயிரம் ஆண்டுகள் காப்பாற்றி மீண்டும் அதை நமக்கு கொடுத்தவர்கள் அவர்களே. அது போல புத்தரின் அஸ்த்தி  எல்லாம் அவர்களால் பாதுகாக்கப்பட்டு இன்று நமக்கு திருப்பி கொடுக்கப்பட்டது. போதிசத்துவர் அம்பேத்கர் உருவாக்கிய தீக்ஷா  பூமியில் உள்ள புத்தரின் அஸ்த்தி கூட இலங்கை பவுத்தர்கள் நமக்கு கொடுத்தது. இன்னைக்கு தம்மம் ஆயிரம் ஆண்டுகள் காக்கப்பட்டு நமக்கு திருப்பி தரப்பட்டது எனில் அதற்க்கு இலங்கை பவுத்தர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இலங்கை பவுத்த பிக்கு தாக்கப்பட்ட அன்று சென்னை  மஹாபோதி தலைமை பிக்கு மஹாநாமா அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசினோம். இந்தியாவில் உள்ள கோடிகணக்கான அம்பேத்கர்வாதிகள் உங்கள் பக்கம் இருக்கிறோம் பயப்படாதீர்கள் என்றும் சொன்னோம். அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். நாட்டை விட்டு இங்கு வந்து தனது தம்ம பணியை செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை காக்க வேண்டியது அவர்களுக்கு துனையாக இருக்க வேண்டியது சாக்கிய பவுத்தர்களின் கடமை. ஆயிரம் ஆண்டுகள் இந்துக்களின் கையில் சிக்கி இருந்த மாஹபோதி புத்த விகாரை மீட்கவே அனகரிக்கா தம்மபாலா தலமையில்  நிறைய புத்த பிக்குகள் இந்தியா வந்து மாஹாபோதி விஹார்களை நிறுவினர். அவர்கள் ஆரம்பித்த புத்த விகார மீட்பு இயக்கம்தான் இன்று நாம் நடத்திக்கொண்டு இருக்கிறோம். எனவே இலங்கை இந்திய புத்த குடிகளின் நல்லிணக்கம் ஒற்றுமை மிகவும் அவசியம். இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் பவுத்தம் பரவ வேண்டும் எனில் இலங்கை பவுத்ததுக்கும்  இலங்கை பவுதர்களுக்கும் எதிராக இந்துக்கள் குறிப்பாக நாத்திக நார வாய இந்துக்கள் செய்யும் பொய் பிரச்சாரத்தை எதிர்த்து நாம்  எதிர் பிரச்சாரம் செய்ய வேண்டி உள்ளது. மேலும் இலங்கை பவுத்தர்களுக்கு இந்தியா புனித ஸ்தலம். பணம் படைத்தவர்கள் விமானம் மூலம் புத்தகயா வந்து போய்க்கொண்டு இருக்கிறாகள். ஆனால் அங்கு உள்ள ஏழை எளிய பவுத்தர்கள் கடல் வழியாக வர வேண்டும் எனில் அவர்களுக்கு நமது அரவணைப்பும் பாது காப்பும் அவசியம். இலங்கை பவுதர்களை தனிமை படுத்துவது நம்மிடம் இருந்து பிரித்து பார்ப்பது அவர்கள் சிங்களவர்கள் நாம் தமிழர்கள் என்பது எல்லாம் இந்துக்களின்  அரசியல். ராஜபச்சே எனும் பவுத்தர் சிங்களவர் என்று சொல்லும் அதே தமிழ் தேசிய கூட்டம்தான் போதிசத்துவர் அம்பேட்கர் அவர்களை மராத்தியர் என்கிறது. மீண்டும் மீண்டும் இந்து ஆதிக்க அரசியலுக்கு அடிமை ஆகாமல் உரக்க சொல்வோம் நாம் பவுத்தர் என்று. பவுத்தம் ஏற்ப்பது மூலம் நாம் பன்னாட்டு சமூகமாக மாறுகிறோம் என்று நம் போதிசத்துவர் சொன்னார். நாம் தனி ஆட்கள் இல்லை உலகில் உள்ள பவுத்தர்கள் எல்லோரும்  நம்மோடு வந்து இணைய வேண்டும் அதே போல் நாமும் அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். உலகில் உள்ள இந்துக்கள் எல்லோரும் ஈழம் இழவம் என்று குரல் கொடுக்கும்போது நாம் நமது பவுத்த குடிகளுக்கு குரல் கொடுப்பது மிகவும் அவசியம். ஜெய் பீம் ஜெய் புத்தம். சாக்கிய தம்மத்தை மீட்டெடுப்போம். 

No comments:

Post a Comment