Monday, April 8, 2013

இடஒதுக்கீட்டில் படிக்க இடம் கிடைத்த்து அங்கனூர்ல இருந்து சென்னைக்கு வந்தவுடன் நான் பறையன் இல்லை பறையன் எனும் அசிங்கத்தில் இருந்து முன்னேறி தமிழன் திராவிடன்  ஆயிட்டேன் இப்போ நான் மொழி போர் தியாகி ஈழ போராளி . எனது தலைவர்கள் ராமசாமி நாயக்கனும் தமிழ் இழவு தலைவர் பிரபாகரனும்  என்று சொல்லி திமுகா  மாணவர் அணி செயலளார் ஆகிடுறோமே. அப்புறம் எப்பவாச்சும் வாய்ப்பு கிடச்சா தலித்துக்களை ஒருங்கிணைத்து தி மு கா வுக்கு பெர்மநென்ட் எஸ் சி எஸ் டி பிரிவு ஆரம்பிக்க வேண்டியதுதான்.


#இப்பொழுது அனைத்து இடங்களிலும் பறையர்கள் தங்கள் சாதியை மறைக்காமல் கூறுகிறார்கள். இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்களின் எழுச்சியும் ஒரு காரணம் என்கிற உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.$

அவர்தான் நான் பறையன் இல்லை. தமிழன் என்கிறாரே. பறையன் என்பது ஜாதி அப்படி நான் ஒருபோதும் போட்டுக்கொள்ள மாட்டேன் என்கிறாரே. அப்புறம் அவர் எப்புடி இதுக்கு காரணம். 


இதற்க்கு காரணம் திருமா எனும் தமிழ் தேசிய ஜால்ரா இல்லை. நமக்காக இயக்கம் கட்டி நமது அடையாளத்தை உரக்க சொன்ன நமது தத்தா இரட்டை மலை சீனிவாச பறையனார். 

நான் பறையண்டா என்று மார் தட்டி நமது அடையாளத்தை உரக்க சொல்லும் பறையர்களே நம் இனத்துக்கு தேவை அரசியல் ஆதயத்துக்கு நமது அடையாளத்தை அழிக்கும் அசிங்கங்கள் தேவை இல்லை. உண்மையான ஜாதி ஒழிப்பு என்பது நாம் பறையன் என்று மார் தட்டி சொல்லும்போது நம்மை மனிதனாக அடுத்தவன் சரி சமமாக மதிக்கும் காலம்தான். ஜாதி ஒழிப்பு என்பது நாம் நமது அடையாளத்தை மறைத்து வாழ்வது அல்ல. 

திருமாவை எனக்கு 1991 இல் இருந்து தெரியும் பல முறை சந்தித்து  உள்ளேன். எங்கள் முதல் சந்திப்பே கான்ரடிக்டரிதான். காலையில் பறையர் பேரவை மாலை தமிழ் தேசியம். அதுதான் தமிழ் தேசிய வாதிகள் தலித் பிரச்சனையை கையில் எடுத்த காலம். அன்றும் நான் பறையன் தான் இன்றும் நான் பறையன்தான். இதுவரை திராவிடமும் தமிழ் தேசியமும் என்னை சீண்டியது இல்லை திருமாவை இயக்க ரீதியாக எதிர்த்து உள்ளேன். நேரில் தமிழ் தேசியத்தை எதிர்த்து அவரிடம் பேசியும் உள்ளேன். பொது இடத்தில் அவரை தாக்கி வாதம் செய்து உள்ளேன். அதே சமயம் அவர் விபத்துக்குள்ளாகி உடல் நிலை  சரியில்லாமல் மலர் மருத்துவமனியில் இருந்தபோது நட்பு நிமித்தமாக சந்தித்த அனுபவமும் உண்டு. அவரை தனி மனிதராக நான் எதிற்க்கவில்லை. என்னுடைய எதிர்ப்பு என்பது கருத்தியல் ரீதியானது. 

No comments:

Post a Comment