Tuesday, April 16, 2013

போதிசத்துவர்  பிறந்த நாள் அன்று மீனாம்பாள், பவுத்தபெரியார் சுந்தரராசனார், சாக்கிய செல்வர் சக்திதாசன், சேப்பான், அன்புபொன்னோவியம்,  வை பாலசுந்தரம், அம்பேத்கர் பிரியன்,  பூவையார், சே கு தமிழரசன் என்று எத்தனையோ தலைவர்கள் பேசியதை கேட்டு இருக்கிறோம். போதிசத்துவர் பாற்றி அவர்கள் பேசியவை இன்றும் நமது உணர்வில் எழுச்சியை ஏற்ப்படுத்திக்கொண்டு இருக்கிறது. ஆனால் போதிசத்துவர்  பிறந்த நாள் அன்று ஒருத்தர் பேச்சை கேட்டேன். அந்த பேச்சு முழுவதும் அவர் புகழ். வார்த்தைக்கு வார்த்தை திருமா திருமா என்று அவர் புகழையே பாடிக்கொண்டு இருந்தார். அடுத்து அவர் பாடியது  "தலித் அல்லாத ஜாதி இந்துக்களின் புகழ். கேசை வாதாடிய வழக்கறிஞர் ஒரு ஜாதி இந்து நீதிஅரசர் ஒரு ஜாதி இந்து விருது வாங்க வநதவர்கள் ஜாதி இந்துக்கள் என்று ஜாதி இந்துக்களின் புகழை பாடினார். நான் பறையன் இல்லை தலித் இல்லை தமிழன் என்று சொல்லிக்கொள்வதில் அவருக்கு ஆப்படி ஒரு பிரியம். கடைசியில் முடிக்கும்போது ஒரே ஒரு முறை போதிசத்துவரின்   பெயரை சொன்னார். அது கூட முதலில் "பெரியார் (மிகுந்த மரியாதையுடன்) அப்புறம் "அம்பேத்கர்" என்று எதோ இவுங்க வீட்டு வேலைக்காரன் பெயரை சொல்லுவது போல. இவருதான்  போதிசத்துவரை பரப்பினாராம்.  எப்படி பரபினார்  என்று  80, 90 களில் பிறந்த குழந்தைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. 60, 70 களில் பிறந்தவர்களுக்கு தெரியும் ஆளுயர போதிசாத்துவர் படங்களை எல்லாம். ஸ்டாப் சைசுக்கு ஆக்கி சாதித்தவர் இவர்தான். படத்தை மட்டும் ஸ்டாம்ப் சைசு ஆக்க வில்லை போதிசத்துவர் பற்றிய பிரச்சாரத்தையும் ஸ்டாம்ப் சைஸாக்கி பிரபாகரன் ராமசாமி பிரச்சாரத்தை பெரிசாக்கி சாதித்தவர் இவர்தான். தெருவில் நடக்கும்போது ஒரு இஸ்லாமியன் "சலாம் மாலேக்கும்" என்று சொன்னால் கூட அவனை மதித்து நாம் "மாலேக்கும் சலாம்" என்று சொல்லிவிட்டு போவோம். ஆனால் நாம ஆயிரம் முறை ஜெய் பீம் என்று சொன்னால் கூட  இந்த புலி ஜால்ரா வாயில் ஜெய் பீம் என்று வரவே வராது. ஜெய் பீம் ன்னு சொல்லுறது பெரிய மாற்றம் கொண்டு வர போவதில்லை என்று வாதாடலாம். ஜெய் பீம் அப்படின்னு சொல்லாம இவரு அப்படி என்ன பெரிய மற்றதை சாதிக்க போகிறார். பாசத்தோடு ஒரு தலித் சகோதரன் ஜெய் பீம் அண்ணே என்று சொல்லும்போது திருப்பி ஜெய் பீம் என்று சொன்னால் இவர் வாயில் இருந்து முத்துக்கள் விழுந்துவிடுமா இல்லை. மறு நாளே தமிழ் செத்து போயிடுமா? இல்லை இவர் ஜால்ரா அடிக்கும் தமிழ் ஆண்டைகள் இவரை தமிழ் நாட்டை விட்டே விரட்டி விடுவார்களா? 

No comments:

Post a Comment