Saturday, April 13, 2013

ஏப்ரல் 14 என்பது நமக்கு கிடைத்த மாபெரும் விடுதலை திருநாள். ஒவ்வொரு வருடமும் ஆயிரகணக்கான லட்சக்கனக்கண் கோடிக்கணக்கான மக்களை போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கரின் வழியில் அழைத்து செல்லும் நாள். நாம் எல்லோரும் நம்பிக்கொண்டு இருக்கிறோம், இன்றுதான் போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தார் என்று. நானும் பல வருடம் அப்படித்தான் நம்பிக்கொண்டு இருந்தேன். ஆனால் உண்மையில் அம்பேத்கர் ஏப்ரல் 14 அன்று பிறக்கவில்லை. அவர் என்று பிறந்தார் என்று அவருக்கே தெரியாது. இருந்தாலும் ஏப்ரல் 14 தான் நமது புத்தாண்டு திருநாள் நாம் மீண்டும் விடுதலை உணர்வோடு பிறக்கும் நாள். ஏப்ரல் 14 தான் நமது விடுதலை திருநாள். இந்த நாள் தான் பெரும்பாலான நம்மை போதிசத்துவர் வழியில் அழைத்து செல்லும் நாள். இதுதான் உலகம் முழுக்க உள்ள 30 கோடி சாக்கிய மக்களின் இன்பத்திருநாள். போதிசத்துவர் இன்னைக்கு பிறக்கவில்லை அதனால இதை கொண்டாட வேண்டாம் தை முதல் நாளே டுமிழர் திருநாள் என்று சில அட்டக்கதிகள் நம்மிடம் வந்து சொன்னாலும் சொல்லுவார்கள். போதிசத்துவர் இன்று பிறந்தாரா? இலையா என்பது முக்கியம் அல்ல கடந்த காலத்தில் இந்த ஏப்ரல் 14 நாம மக்களை எவ்வாறு ஒருங்கிணைத்து உள்ளது எவ்வாறு எழுச்சி பெற வைத்தது என்பதே முக்கியம். இது போதிசத்துவரின் பிறந்தநாள் என்பதை விட நம்மை விடுவிக்கும் விடுதலை திருநாள். பிறந்த நாள் இறந்த நாளில் நம்பிக்கை இல்லாதவர்களும் கொண்டாடும் புனித திருநாள். 

No comments:

Post a Comment