Friday, April 19, 2013


#நாத்திகம் என்பது நீங்கள் புரிந்து கொள்வது மட்டுமல்ல...இறைமறுப்பும்..நாத்திகம் நேர்நிகர் சமானம் அல்ல.#

அதையே தான் நானும் சொகிறேன். நாத்தீகம் என்பது நீங்கள் புரிந்து கொண்டு இருப்பது போல அல்ல புத்தமும் நாத்தீகமும் நேர்நிகர் சமானம் அல்ல. 

வேதத்தில் நாத்தீகம் பேசப்பட்டு உள்ளது அது வெறும் இறை மறுப்பு மட்டும் அல்ல அதையும் மீறியதுதான். அதுபோன்ற தத்துவங்களை எல்லாம் கூட புத்தர் நிராகரிக்கிறார். 

"வேதங்களின் அதிகாரத்தை மறுப்பதும், சந்தேகிப்பதும்தான் நாத்திகம்.."

வேதத்தை மறுக்கும் இஸ்லாமியர் கிறிஸ்துவர் எல்லாம் நாத்தீகர்களா?

#நாத்திகரும் கூட....ஆனால், நாத்திகத்தின் எல்லைக்குள் அவர் முடங்கி கிடக்கவில்லை.# 

உங்கள் வாதம் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. அது எப்படி அவர் ஒரே சமயத்தில் "நாதீகரும் கூட" வாக இருக்க முடியும்.   

நல்லா ராமசாமியை உள்வாங்கி உள்ளீர்கள். அவரை போலவே நாத்தீகம் நல்லா பேசுறீங்க.



முதல்ல நாத்திகம்னா என்ன என்று ஒரு அளவுகோல்  வைத்து விட்டு வாதம் செய்தால் நல்லது. புத்தம் என்றால் சீலா (ஒழுக்கம்) சமாதி (மன பயிற்ச்சி) பண்ணா (அறிவு/ ஞானம்). இவை எண்மார்க்கத்தில் அடங்கும். சீலா (நல்ல பேச்சு / நல்ல செயல் / நல்ல தொழில்) சமாதி (நல்ல முயற்ச்சி செய்து மன பயிற்ச்சியில் ஈடுபடுதல் / நல்ல உணர்வோடு கவனத்தோடு இருத்தல்  / மனதை ஒரு நிலையில் வைத்து இருத்தல். பண்ணா (சமூகத்தை பற்றிய மற்றும் மனம் உடல் பற்றிய நல்ல  புரிதல் / நல்ல சிந்தணை / நல்ல அறிவு). பஞ்ச சீலத்தை கடை பிடித்தல், எண் மார்க்கத்தை கடை பிடித்தல், புத்தரின் பத்து குணங்களை நமக்குள் வளர்த்தல் இவைதான் புத்தம். இதை புரிந்து கொள்ளாமல் புத்தர் ஆத்திகம் பேசினார் நாத்தீகம் பேசினார் என்று கடவுள் உண்டு கடவுள் மறுப்பு ஆத்மா உண்டு ஆத்மா இல்லை சொர்க்கம் உண்டு சொர்க்கம் இல்லை எனும் விவாதங்களும் விதண்டாவாதங்களும் புத்தத்தில் பிரிவினைகளை உருவாக்கிறது. 

ராமர் இல்லையாம் ஆனால் ராமர் காலம் இருந்ததாம். ராமன் ஒரு  பொய்யாம். திராவிட ராவணன் ராமனை எத்ரித்தானாம். சூப்பர் பகுத்தறிவுடா அப்பு உங்கள் பகுத்தறிவு. 
 

No comments:

Post a Comment