Wednesday, April 10, 2013


#@சாக்கிய பறையனார், பார்ப்பனர்களை பற்றி விமர்ச்சித்தால் உடனே விடுதலை புலிகளை கைகாட்டுவதான் பார்ப்பனர்களின் வீரம். இப்படி பூணல் இட்டு அவனை ஒரு பார்ப்பன வெறியனாக, மதவெறியனாக மாற்றுவது சரியா என்பதுதான் பதிவின் கேள்வி.#

இது சரியான கேள்வி. இதைத்தான் நானும் என்னுடைய கமென்டில்  போட்டு உள்ளேன். இந்த குழந்தை தன்னை அழித்துக்கொள்ளாது, இப்படி குழந்தையா இருக்கும்போதே அடுத்தவங்களை எப்படி அழிப்பது எனும் பார்ப்பனியத்தை கற்றுக்கொள்கிறது என்று. நல்லா என் கருத்தை ஓரு முறைக்கு இரண்டு முறை படித்தால்தான் புரியும். பார்ப்பனர்களை அவர்கள் செய்யும் பார்ப்பனிய அட்டுழியங்களுக்கு கேள்வி கேட்டால் நானும் உங்கள் கூட இருப்பேன். சூத்திரர்களுக்கு, பார்ப்பன-சூத்திர தீவிரவாதிகளுக்கு, பார்ப்பன-சூத்திர வணமுறையாளர்களுக்கு வக்காலத்து வாங்குவதைத்தான் எதிர்க்கிறேன். நாங்கள் பார்ப்பனர்களிடம் கேள்வி கேட்பது ஏன் உங்கள் குழந்தைகளுக்கு  மட்டும் இப்படி பூணூல் போட்டு படிக்க வைத்து விட்டு எங்கள் குழந்தைகளை  துப்பாக்கி தூக்கவும், மலம் அல்லவும், சுமை தூக்கவும், கருங்கல் உடைக்கவும், களிமண் பானை செய்யவும், பிச்சை எடுக்கவும், காகிதம் பொருக்கவும்  வைக்கிறாய் என்று. 

அடுத்து புலிகளை பற்றி கருத்து. நாம கடினமான வேலை செய்யும்போது கூட நமது குழந்தைகளுக்கு பாதிப்பு வந்து விட கூடாது என்று அவர்களை அதிலிருந்து விளக்கி விட்டு நாம் நம்மை முழுமையாக ஈடு படுத்திக்கொள்வோம். ஆனால் புலிகள் என்ன செய்தார்கள் வயிற்றுக்கு அரை வயிறு காஞ்சிக்கு வழி இல்லாத தலித் குழந்தைகளை எல்லாம் பிடித்து வந்து தீவிரவாதத்தில் ஈடு படுத்தினர். லட்சக்கனக்கான இளைஞர்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் இருக்கும்போது பச்சை குழந்தைகளை தீவிரவாதத்துக்கு பயன்படுத்தினர். பிரபாகரன் மகனுக்கு குய்யோ முய்யோ என்று கத்திய கூட்டங்கள் எல்லாம் கடந்த 30 ஆண்டுகள் வேடிக்கை பார்த்தன. ஆயிரக்கனக்காண குழந்தைகள் காட்டிலும் மேட்டிலும் சிக்கி கஷ்டப்பட்டனர்.தப்பித்து வந்த குழந்தைகள், எப்போது புலிகள் மீண்டும் வந்து நம்மை பிடித்துக்கொண்டு போவார்களோ என்று நடுங்கின. உலகில் உள்ள எந்த நாடும் 18 வயதுக்கு குறைந்த குழந்தைகளை ராணுவத்தில் சேர்ப்பதில்லை. உலக நாடுகள் எல்லாம் மனித உரிமைகளை மீருவதில்லை என்பது வாதம் அல்ல. அவர்கள் மனித உரிமை மீரல்களை கேள்வி கேட்கும் நீங்கள் வெளிப்படையாக மனித உரிமை மீறல்களை நியாயப்படுததிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதே எனது கருத்து. புலிகள் தவிரவாதம் செய்ய காரணம் என்ன என்று தேடி அதை தீர்ப்பது அதை எதிர்ப்பது நியாயம். ஆனால் அதை காரணம் காட்டி புலிகள் செய்தது எல்லாம் நியாயம் அவர்கள் புனிதர்கள் என்று சொல்வது முட்டாள் தனம். 

No comments:

Post a Comment