Friday, April 19, 2013

#முதல் முதலில் நாத்திகம் பேசியவர் கெளதம புத்தர் என்கிற வரலாற்றை மறந்து வழிபாட்டு முறைகளில் கவனம் செலுத்துவான் ..# 

நாத்தீகம் என்றால் என்ன? புத்தர் நாத்தீகம் பேசினாரா? ஆதிகம்  நாத்தீகம் என்பது கடவுள் உண்டு இல்லை எனும் தத்துவங்கள். அதை பேசி நேரத்தை வீணாக்காமல். ஒழுக்கம், அறிவு, அன்பு, சமதானம், சமத்துவம், சமதர்மம் பற்றி பேசுவதே புத்தம். புத்தர் பல இடங்களில் கடவுள் உண்டு இல்லை என்ற கேள்விக்கு பதில் அளித்ததே இல்லை. அது நமது வேலை இல்லை. என்று சொல்லியுள்ளார். அதே போல புத்தர் போதிச்த்த்வர் அம்பேத்கர் பேசிய பல விஷயங்களை நாத்தீகர்கள் ஏற்றுக்கொள்வது இல்லை. அது நாத்திக நம்பிக்கைக்கு எதிராக உள்ளது. புத்தம் நாத்தீகம் இல்லை. புத்தரும் போதிசத்துவரும் ஆத்தீகர்களும் இல்லை நதீகர்களும் இல்லை. உலகில் ஆத்திகம் நாத்தீகம் எனும் இரண்டு தத்துவங்கள் மட்டுமே உள்ளது என்று நம்புவது பிற தத்துவங்களை இரட்டிப்பு செய்வது  கூட ஆதிக்க மனோ நிலை. 


# பௌத்தத்தில் குறைகள் இருக்கலாம்...#

என்ன குறை என்று சொன்னால் நல்லா இருக்கும்.  குறை இருந்தால் அது புத்தம் இல்லை. ஓ நீங்க பெளத்தத்தை சொன்னீங்களா?

#அண்ணல் அம்பேத்கர், மதத்தை பற்றி குறிப்பிடும்பொழுது கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவாளர்களுக்கு மதம் தேவையில்லை என்பதையும் சேர்த்தேதான் சொன்னார்...# 

அவர் பகுத்தறிவாளர் என்று யாரை சொன்னார். எங்கே சொன்னார் என்று சொனால் நல்லா இருக்கும்.

#மதம் மாறிய பின்னும், சாதியை பலர் தொடரத்தான் செய்கின்றனர்...#

ஏட்டளவில் எழுத்தளவில் மதம் மாறுவதும். மதம் மாறிய பின்னரும் இந்துவாகவே இந்து சமூகத்தில் உள்ளவர்கள் ஜாதியை வருணமுறைகளை கடைபிடிப்பது தவிர்க்க முடியாது. மேலும் ஒரு சில தனி மனிதர்கள் மதம் மாறுவதால் உடனடியாக ஹிந்து மதம் ஒழிந்து விடும் ஜாதி ஒழிந்து விடும் என்று எதிர்பார்க்க முடியாது. இது லாங்க புராசஸ். இந்த தனி மனிதர்கள் தொடர்ந்து மாறும்போது இன்று பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் சிருபன்மையினராக மாறுவார்கள். இன்று பெரும்பான்மையானவர்களின் நம்பிக்கையாக உள்ள வருணதர்மமும் ஜாதியும் சிறுபான்மையினர் நம்பிக்கையாக மாறும். இதற்க்கு சிறுது காலம் தேவை. ஆனால் மதம் மாற்றம் மட்டுமே இதை செய்ய முடியும். நாத்தீகர்கள் என்று சொல்லிக்கொண்டு இந்து மதத்தை கட்டிப்பிடித்து காப்பதை விட; பெரும்பான்மையான இந்துக்களை விட்டு விலகாமல் பெரும்பான்மையாக இருப்பதை விட; தங்களை இந்து அல்லாத ஒரு தனி மதமாக நாத்திக சிறுபான்மை சமூகமாக அறிவித்தால் இந்து மதம் ஆட்டம் காணும். நாம் மதம் மாறினால் சிறுபான்மையினராக ஆகிவிடுவோம் அதற்க்கு பிறகு இந்து மதத்தை குறை சொன்னால் அது பிற மதத்தை குறை சொல்வது போல ஆகிவிடும் என்று சொல்லிக்கொண்டு நேரத்தை வினாக்காமல் மதம் மாறுவது அவசியம். இந்து மதத்தை விட்டு வெளியே வரும் ஒவ்வொரு மனிதனும் அந்த மதத்தின் வேர்க்காள்களை பிடுங்கிக்கொண்டு இருக்கிறர்கள். பலன் உடனே இல்லை என்றாலும் விரைவில் வரும். நாத்தீகம் பெரும்பான்மை சமுகம் திராவிட இனம் தமிழ் சமூகம் என்று எதையாவது சொல்லி இந்து மதத்தில் ஒட்டிக்கொண்டு இருப்பவர்கள் விழுதுகளாகி இந்துமதத்துக்கு பேருதவி செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்து மதத்தில் இருந்து கொண்டே இந்து மதத்தை வேரறுக்க முடியாது அது விபச்சாரத்தில் இருந்து கொண்டே விபச்சாரத்தை ஒழிப்பது மது அறிந்தி கொண்டே மதுவை ஒழிப்பது தீவிரவாதம் செய்து கொண்டே தீவிரவாதத்தை ஒழிப்பது ஜாதி சங்கம் வைதுக்கொண்டே ஜாதியை ஒழிப்பது. 

#வேதங்களின் அதிகாரத்தை மறுப்பதும், சந்தேகிப்பதும்தான் நாத்திகம்...வேதங்களை வரி தவறாமல் பின்பற்றுவது ஆத்திகம்.....நாஸ்தி என்பது அழிவென்று பொருளிலும்...ஆஸ்தி என்பது ஆக்கம் என்ற பொருளிலும் இங்கே வெளிப்படுகின்றது..#

வேதங்கள் புத்தர் காலத்தில் இருந்ததா? என்பதே கேள்விக்குறி. அந்த விவாதம் இப்போது வேண்டாம். அப்படியே இருந்தது அதை எதிர்த்தார் என்றே வைத்துக்கொள்வோம்.  அதனால் அவர் நாத்திகரா? பகுத்தறிவுவாதி நாத்திகவாதி இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். புத்தர் பகுத்தறிவாளர். அவர் எதையும் பகுத்தறிந்து ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னார். கடவுள் உண்டா? இல்லையா என்பதை வேத பிராமிணர்கள் கூட விவாதித்து உள்ளார்கள். வேதத்தில் கூட நாத்தீகம் பேசிய ஆன்மா இல்லை மறு பிறப்பு இல்லை என்று பேசிய பிராமிணர்கள் உள்ளனர். புத்தர் வேதத்தை எதிர்த்தார் என்றால் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள நாத்திகவாதத்தையும் எதிர்த்தார்  என்று தானே அர்த்தம். போதிசத்துவர் அம்பேத்கர் தனது நூலில் புத்தர் ஆன்மா "உண்டு" என்று சொல்லும்  நிஹிலிச தத்துவத்தையும் பேசவில்லை "ஆன்மா இல்லை" அதனால் மறு பிறப்பு இல்லை  என்று சொல்லும் அணிஹிளிசம் தத்துவத்தையும் பேசவில்லை என்கிறார். "ஆன்மா இல்லை ஆனால் மறு பிறப்பு உண்டு" "இந்த உடலும் மனமும் மரணத்துக்கு பிறகும் தனது செயலை தொடர்கிறது" என்பதே புத்தர் சொன்னது என்று புத்தர் மறு பிறப்பு தத்துவத்துக்கு விஞ்ஞான பூர்வமான விளக்கம் தருகிறார். நாத்தீகவாதிகள்  புத்தர் போதிசத்துவர் சொன்ன மறுபிறப்பை ஒப்புக்கொள்கிறார்களா? அதை எடிட் செய்து விட்டு புத்தரையும் போதிசதுவரையும் நாத்தீகர் என்று சொல்லக்கூடாது.

No comments:

Post a Comment