Sunday, April 7, 2013

#சென்னைச் சேரிகள்#

ஐயா சாமி. சென்னை சேரிகள் அல்ல. போர்ச்சுகீசியர்கள் வந்த போது முழு சென்னையும் சரிதான். ப்ளாக் டவுன் (பர சேரி) என்று அழைத்தனர். பாண்டி கூட இப்போதும் சரிதான். புதுசேரி. 

#"மிக்சர்" பாஷைதான் தமிழ் நாட்டுச் சேரி பாஷை!#

சரியாக சொன்னீர்கள் மிக்ஷர் பாஷை என்று. ஆனால் மூலம் தமிழில் இல்லை பாலி என்பது எங்கள் வரலாற்று ஆராய்ச்சி கண்டு பிடிப்பு. 


#பாளியாக இருந்தால் "சிங்களத்தின்" வாசனை இருக்கும். அதன் சுவடு கூட இந்த மெட்ராஸ் பாஷையில் கிடையாதே!#

இது உங்கள் கற்பனை. பாலி மொழி சிங்களத்தொடு தொடர்பு உடயது என்பது இலங்கை தமிழ் சித்தாந்தம். தமிழும் பலி மொழியின் குழந்தை என்பது எங்கள் பண்டிதர் அயோத்திதாசரின் சித்தாந்தம். 


#அசோக சக்கரவர்த்தியின் "பாளி" மொழிக்கும் இந்த தமிழ் நாட்டு சேரி பாஷைக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை!#

அசோகர் காலத்தில் இந்த சோ காலத் தமிழ் நாடு தமிழ் நாடாக இருக்கவில்லை. இங்கு வழ்ந்த மக்கள் தமிழ் பேச வில்லை என்பது வரலாறு. பாலி மொழி கல்வெட்டுக்களை எல்லாம் எடுத்து இது தமிழ் பிராமி என்று வரலாற்றை பொய்யாக கட்டமைத்துக்கொண்டு இருக்கிறார்கள் ஆட்சியாளர்களும் பலகலை கழக தமிழ் பண்டிதர்களும். அசோகர் காலத்தில் தென்நாடு முழுவதும் இலங்கை முழுவதும் பாலி மொழிதான் பேசப்பட்டது. பாலி மொழி தான் இங்கு ஆட்சி மொழியாகவும் கலை இலக்கிய பண்பாட்டு மொழியாகவும் கல்வி கூடங்களில் பாட மொழியாகவும் இருந்தது. இதற்க்கு ஆதாரமாகா நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்கள் பாலி மொழியில் உள்ளன. அது போல தமிழ் மொழியில் எழுதப்பட்ட 20 வார்த்தைகள் கொண்ட ஒரே ஒரு வாசகம் இருந்தால் கொண்டு வாருங்கள் அசோகர் காலத்தில்  தமிழ் இருந்தது என்று ஒத்துக்கொள்கிறோம். அது கூட வேண்டாம் அசோகர் காலத்தில் நீங்கள் கண்டு பிடித்து இவை எல்லாம் தமிழ் பிராமி எதுதுக்கள், இவை எல்லாம் தமிழ் வார்த்தைகள் என்று சொல்கிறீர்களே அதில் தமிழ் என்ற வர்தையோ அல்லது தமிழன் எனும் வார்த்தையோ இருந்தால் கொண்டு வாருங்கள் அசோகர் காலத்தில் தமிழ் இருந்தது என்று ஒத்துக்கொள்கிறேன். அது கூட வேண்டாம். அசோகர் காலத்தில் கண்டறிந்த கல்வெட்டுக்களில் எங்காவது "ழ" எனும் எழுத்து இருந்தால் கொண்டு வாருங்கள் அந்த காலத்தில் தமிழ் மொழி இருந்தது தமிழர்கள் என்று ஒரு இனம் தமிழ் நாட்டில் இலங்கையில் இருந்தது என்று ஒத்துக்கொள்கிறேன். 

#பல்லவர்களின் கல்வெட்டுக்கள் பாளி( ப்ராக்ரிட்) மொழியில் தொடங்கி சமஸ்கிருதம், கிரந்த(தமிழ், சமஸ்கிருத, பாளி கலப்பு) மொழிகளுடன் முடிவுறுகின்றன. சுத்தமான தமிழில் பல்லவர்களின் கல்வெட்டுக்கள் கிடையாது. தமிழ் நாட்டின் "முதல்" அரசர்களான பல்லவர்கள் தமிழ் மொழியில் கல்வெட்டுக்களை எழுதாத காரணம் என்ன?#

பல்லவர்கள் காலத்துக்கு முன்னர் கலப்பரையர்கள் காலம் என்று ஒன்று உள்ளது. அது முழுக்க முழுக்க பலி மொழியை ஆட்சி மொழியாக கொண்ட ராஜ்ஜியம். அந்த காலத்தில்தான் காஞ்சியில் பாலி மொழ்சி பல்கலைக்கழகம் சிறப்புற்று இருந்தது. அந்த காலத்தில் உலகம் முழுக்க இருந்து பல மாணவர்கள் வந்து கல்வி பயின்று சென்றனர். அந்த காலதிலும் அதற்க்கு  முன்னரும் தமிழ் இருந்ததா? என்பது என் கேள்வி. முற்கால சோல  (அதோ சோழர் இல்லை) பாண்டிய சாக்கிய புத்தாஸ் (சத்ய புத்திரர்கள் என்றும்  சொல்வர்) பின்னால் வந்த சேர சோழ பாண்டியர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. முன்னால் வாழ்ந்த சோல பாண்டிய சாக்கிய புத்தர்கள் தமிழர்கள் இல்லை. அவர்கள் சாக்கிய மொழி பேசிய சாக்கியர்கள். அவர்கள் காலத்தில் தமிழ் இருந்தது என்பதற்கு இதுவரை ஒரு கல்வெட்டு ஆதாரமும் தமிழ் அறிஞர்களாள் தர முடியவில்லை. 


#தமிழ் மொழி 20000  வருடத்துக்கு முன்னர் பேசப்பட்டு உள்ளது#

இந்த டுபாக்கூரு தமிழ் வரலாற்றை பிஞ்சு குழந்தைகளுக்கு சொல்லுங்க ஏத்துக்கும். எனக்கு வேண்டாம். 
  

#ஹஹா ஹாஹ சென்னை தமிழுக்கு இங்கிலீசு எவ்வளவோ மேலு#

ஹஹா ஹாஹ வந்துட்டாங்கியா நம்ம பாஷைய நக்கல் அடிக்க. அம்மா தாயே அது சென்னை தமிழ் இல்லை. மெட்ராஸ் பாஷை. சேரி பாஷை. ஸ்லம் பாஷை. உங்க சுந்தர டுமில் எங்க வாயிலேயே நுழையாது தாயே. அதுக்கு நாங்க பட்லர் இங்கிலீசே பேசிட்டு போயிடுவோம். 

நீங்க தமிழுக்கு எதிரியா?

தமிழர்கள் அவித்து விடும் பொய் மூட்டைகளுக்கு எதிரி. 

neenga paali moziya thana uyarthi pesureenga ,athu yen?

நீங்க பாலி மொழியை தானே உயர்த்தி பிடிக்கிறீர்கள் அது ஏன்?

இந்த மண்ணின் பூர்வீக குடிகளின் மொழி பாலி. இந்த மண்ணின் பூர்வீக குடிகள் வீழ்த்தப்பட்டு தீண்டதகாத மக்களாக ஆக்கப்பட்டபோது அவர்கள் மொழி தீண்டப்படாத மக்களின் மொழியாக ஆனது. அது இந்த மண்ணில் இருந்தே அழிக்கப்ட்டது. மீண்டும் அதை  மீட்டு கொண்டுவருவதும். அதன் வரலாற்றை சொல்லுவதும் நமது கடமை. இதைத்தான் அண்ணலும் பனிதரும் செய்தனர். 


நம்ம ரத்தம் பாடுது. தாலைய்ல  இருந்து நுனி கால் வரை அப்படி ஜில்லின்னு ஒரு உணர்வு. நம்ம பாட்டுமா!

சென்னை அருங்கட்சிக்கு போய் கேளுங்க அசோகர் காலத்திலும் கலப்பறையர் காலத்திலும் எழுதப்பட்ட கல்வெட்டுகளை கொடுப்பார்கள். 



தென்னிந்தியாவின் கல் வெட்டுகள் பற்றி அப்பாதுரை எழுதிய புத்தகம் அங்கு உள்ளது அதை வாங்கி படியுங்கள். 

பாலி இப்போ எந்த மாநிலத்தில் பேசுகிறார்கள்? 

நாமதான்  மீண்டும் பேச ஆரம்பிக்கணும். அண்ணல் அம்பேத்கரா அதற்க்கு இலக்கணம், அகராதி எல்லாம் எழுதி கொடுத்துட்டு போயி இருக்கார். 

பாலி மொழியை மீண்டும் கொண்டு வர முடியுமா? 

நூறு வருடத்துக்கு முன்னர் இஸ்ரேலியர்கள் சிதறிக்கிடந்தனர். அவர்கள் இன்று ஒரு தேசமாக மீண்டும் உருவாக்கி உள்ளனர். அப்படி ஒரு நாடு உருவாகும்போது நாம் ஏன் நமது பூர்வீக மொழியை மீனும் படித்து திரும்ப கொண்டு வர முடியாது.   


தமிழ் பேசாதவர்கள் மன்னர்களாக இருந்தார்கள். அவர்கள் கல் வெட்டுக்களை எழுதினார்கள். அதே காலத்தில் அங்கு வாழ்ந்த பாலி மொழி பேசிய மக்கள் கல்வெட்டு எழ்தினார்கள்.  தமிழ பேசிக்கொண்டு இருந்த மக்கள் என்ன புல்லையா புடிங்கிட்டு இருந்தார்கள். 

ஜனவரி 14, 1969 அன்று தமிழ் நாடு என்று பெயர் வைக்கப்பட்டது. அதுக்கு முன்னர் தமிழ் நாடு என்று எங்கேயும் இருந்ததாக எனக்கு தெரியவில்லை. 


நான் புதுசா சொல்லலை. நமது முப்பாட்டனார் பண்டிதர் அயோத்திதாசர் சொல்கிறார். அன்னல் அம்பேத்கரா இலக்கணம் அகராதி எழுதி அதை மீண்டும் உயிர்ப்பித்து கொடுத்தார். 

நாம் புத்தரின் பிள்ளைகள். அப்படி மற்றவர்களை ஒடுக்கும் சுகமாக மாற மாட்டோம். இஸ்ரேலியர்களும் ஒரு காலத்தில் வெளி சாதியினராக த்தான் இருந்தார்கள். இன்று ஒரு தனி நாட்டை உருவாக்கி உள்ளனர் என்பதற்காக சொன்னேன். 

தமிழ் எப்படி வந்தது? 

சிங்களம் தெலுகு, கன்னடம், மலையாளம் எல்லாம் எப்படி வந்ததோ அப்படித்தான் தமிழும் பின்னால் வந்தது. 

நாம் எதற்கு பாலி மொழியை ஏற்க்க வேண்டும்?

பாலி மொழி நமது பூர்வீக மொழி என்கிறார் பண்டிதர் அயோத்திதாசர். நாம் முப்பது கோடி மக்கள். நாம் பல மொழி பேசும் மக்களாக உள்ளோம். உலகம் முழுக்க  உள்ள தலித் மக்களை இணைக்கும் பாலமாக அண்ணல் அம்பேகர் உள்ளார். அவர் மராத்தி மொழி பேசிய குடுமபத்தில் பிறந்து இருந்தாலும் நம் சமூக மொழியாக மராத்திய மொழியை அவர் நிர்ணயிக்க வில்லை. பாலி மொழியையே நமது சமூகத்தை இணைக்கும் மொழியாக நிர்னயிக்கிறார். அதற்குத்தான் இலக்கணமும் அகராதியும் எழுதுகிறார். அந்த மொழியை மக்கள் படிக்க நான் இந்திய அரசியல் சாசனத்தில் அனைத்து வழிகளையும் செய்து உள்ளேன் என்று சொல்கிறார். (நோட் : அது அரசியல் சாசனத்தில் வரவில்லை???)


~சாக்கியர்களின் பூர்வீக மொழி சாக்கிய நிறுத்தியா~

#பெரியாரையும், இடஒதுக்கீட்டையும் எதிர்க்கும் மூடர்கள்#

இட ஒதுக்கீட்டை எதிர்க்க வில்லை. ராமசாமிதான் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தார் எனும் பொய் பிரச்சாரத்தைத்தான் எதிர்க்கிறோம். 

#தமிழ் புலவர்கள் பொய்யர்கள் என்றால் துறை மார்களின் பள்ளிகளில் படிக்க வேண்டியதுதானே.#

 அந்த துரைமார்கள் இந்தியாவுக்கு வரலன்னா. எடுகேஷன் சிஸ்டமே உங்களுக்கு வந்து இருக்காது நைனா. திண்ணை பள்ளிகள் கூட இல்லாமல். கையில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு கோமணம் கட்டிக்கொண்டு குடுமி வைத்துக்கொண்டு மாடு ஆடு பண்ணிதான் மேச்சுட்டு இருந்து இருப்பேங்க. ஆங்கிலம் வேண்டாம் என்று இப்ப இத்தாலியில் இருந்து தமிழில் எழுதும் அந்த கல்வியை கொடுத்தது அந்த துரைமார்கள்தான். 

ரவிகுமார் இப்பத்தான் தமிழ் தேசியவாதி. முன்னால நல்லாத்தான் இருந்தார். என்ன செய்வது பணமும் பதவியும் யாரையும் விளைக்கு வாங்கும். 


#தம்பி ஹிந்துத்துவத்தை விட கேவலமாக இருக்கு உங்கள் புழுகு... உங்களுக்கு மூளை இருக்கா#

தம்பி நாங்க எழுதுனா புழுகு நீங்க எழுதுனா வரலாறா? 


பர்மா காரன் எதுக்கு கோச்சுக்க போறான். அவனுக்கு நாம் நன்றி கடன் பட்டு இருக்கோம். இத்தனை காலம் நமது பூர்வீக மொழியை காப்பாத்தி கொடுத்து இருக்கான். 




மேலே சொன்னது நான் இல்லை. பண்டிதர் அயோத்திதாசர் சொன்னதை ரவிகுமார் எழுதி உள்ளார். நூறு வருஷத்துக்கு முன்னர் பண்டிதர்  அவர் இஸ்டைலில் சொல்லி உள்ளார். ஆனால் அவர் சொன்ன உண்மைகளுக்கு இன்று நிறைய ஆதாரங்களும் அறிவியல் பூர்வமான சான்றுகளும் எங்களிடம் உள்ளது. 


~ இரட்டை நாக்கு சிறுத்தைகள் ~

இரண்டு நாளைக்கு தமிழர்களை எதிர்த்து தலித்துக்களா குரல் கொடுப்பாங்க. இரண்டு நாளைக்கு தலித்துக்கள் எதிர்த்து தமிழர்களா குரல் கொடுப்பங்க. 


சகடமாம் சமஸ்கிருதமும் திராவிடமாம் தமிழும் மகடமாம் பாலி மொழியில் இருந்து பிறந்ததே என்று பண்டிதர் அயோத்திதாசர் கூறுகிறார்.  



தாத்தா பேரன்களும் பேத்திகளும் பூர்வ மொழியை மீட்டு வருகின்றனர். நாக்பூரில் நிறைய பாலி வகுப்புக்கள் நடக்கின்றனர். விரைவில் தமிழ் நாட்டிலும் உருவாக்குவோம். 


#தமிழ் தேசிய திராவிட ஜால்ராக்கள். #

எல்லா காலங்களிலும் இது போன்ற அடிமைகள் இருந்து இருக்கின்றனர். நமது தாத்தா காலத்தில் நமது தந்தை காலத்தில் இப்ப நம்ம காலத்தில். தாத்தா போன்ற சுய கவுரவம் உள்ளவர்கள் தந்தை காலத்தில் சுயமரியாதை உள்ளவர்கள் இருந்தது போல  இப்போதும் உள்ளனர். 

No comments:

Post a Comment