Wednesday, April 10, 2013


#உங்கள் நோக்கம் என்ன?#

"கலகம்". கலகம் நடக்காமல் கருத்து பரிமாற்றம் நடைபெறாது. கருத்து பரிமாற்றம் இல்லாமல் புது கருத்துக்கள் உருவாகாது. புதிய கருத்துக்கள் உருவாகாமல் கருத்து புரட்சி வராது. கருத்து புரட்சி வராமல் சமூக புரட்சி வராது. 

#குழந்தைகளை போராளிகளாக பயன்படுத்துகிறார்கள் என்ற கூக்குரல் எழும் இந்திய நாட்டின் அதிகார வர்க்கத்திலிருக்கும் எவனுக்கும் இந்த படம் நெருடலாக இருக்காதே......அது ஏன்?#

இந்த பையன் தன்னை அழிதுக்கொல்லாமல் மத்தவங்கள எப்படி அழிக்கிறதுன்னு கத்துக்கறான். ஆனால் தலித் குழந்தை கையில் துப்பாக்கியை கொடுத்து தன்னையே எப்படி அழிச்சிக்கிறதுன்னு சொல்லிக்கொடுக்கிறது உங்கள் போராளி கூட்டம். 

மத்த குழந்தைகள் கையில் துப்பாக்கியை கொடுத்தது கூட தவறுதான். அதை விட பெரிய தவறு தலித் குழந்தைகள் கையில் கொடுத்தது. 

#புலிகள் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு..  #

ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்கீங்க ஆனா என்னன்னுதான் சொல்ல மாட்றீங்க.

குழந்தைகள் படிக்கலாம் தீவிரவாதம் செய்ய கூடாது. குழந்தைகள் படிக்கலாம் ராணுவத்தில் சேர கூடாது. குழந்தைகள் படிக்கலாம். ஹெவியான தொழில்கள் செய்யக்கூடாது என்று குழந்தைகளின் உரிமைகள் சொல்கின்றன.  


திசை திரும்பலியே, உங்கள் பதிவில் உள்ள கருத்துக்குத்தானே மாற்று கருத்து வைக்கிறேன்.

#அதே ராஜபக்சவும், அவரது குடும்பத்தினரும் தென்னிந்தியாவின் ‘இந்து‘ கோயில்களுக்குச் சென்று கடவுள்களை விழுந்து விழுந்து வணங்குவதையும், கதிர்காமத்தின் முருகனை வருடாவருடம் சென்று வணங்குவதையும் நீர் அறியவில்லையா?#

அடுத்தவங்க கோயில இடிச்சா தப்பு. அடுத்தவங்க கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டா தப்பா? 


மனித உரிமை பேசுறவன் மனித உரிமை மீருறான். அதனாலே நானும் மீறுகிறேன் என்கிறீர்களா? உங்க லாஜிக்கே சரி இல்லியே.  

No comments:

Post a Comment