Wednesday, April 3, 2013

பகுத்தறிஞ்சி கடவுள் உண்டு கடவுள் இல்லைன்னு எப்படி சொல்லமுடியும்னு கொஞ்சம் சொல்லுங்க. பகுத்தறியாமல் பரலோகம்னு ஒன்னு இருக்குது அங்க கடவுள் குந்திக்குனு நமக்கு படி அளக்குரார்னு ஒரு கூட்டம் நம்புது. இந்த கூட்டம் பரலோகத்தை நேரில் பார்த்தது இல்லை. இங்க குந்திக்குனு நம்பிட்டு இருக்கு. ஆனால் இன்னும் ஒரு கூட்டம் நாங்க பகுத்தறிவு வாதிகள் நாங்கள் பரலோகத்துக்கு விசா வாங்கிட்டு போய் கடவுள் உண்டா இல்லையான்னு தேடிபாத்தோம் அங்க கடவுள் இல்லை. பரலோகம் எம்டியா இருக்குதுன்னு சொல்லிட்டு இருக்கு. இந்த கடவுள் உண்டு கடவுள் இல்லைன்னு சண்டை போட்டுட்டு இருக்கும் கூட்டங்களை உண்மையான பகுத்தறிவு என்ன என்பதை உணராமல் வெகு தூராத்தில் உள்ளனர். புத்தர் கடவுள் உண்டா இல்லையான்னு தேடுவதை விட்டு உன்னை நீ தேடு என்றார். உள்ளதை உய்த்து உணர்ந்து ஆராய்ந்து துன்பத்திற்கு காரணம் என்ன என்று கண்டறிய சொன்னார். உலக உயிர்களுக்கு எல்லாம நன்மை தருபவை எவை தீமை தருபவை எவை என்பதை பகுத்தறிய சொன்னார். புத்தர் சொன்ன பகுத்தறிவு நன்மை எது? தீமை எது என்று பகுத்து அறிவது. 

No comments:

Post a Comment