Wednesday, April 3, 2013


# கவின் மலர் : எதுவுமே செய்யாமல் இருப்பவர்கள், ஏதாவது செய்பவர்களைப் பார்த்து இப்படி செஞ்சிருக்கலாம்..அப்படி செஞ்சிருக்கலாம்...என்று குறை சொல்வது இயற்கை. மேலும் ஒரு படி மேலே போய் அவதூறு செய்வது இயற்கை அல்ல. அது காழ்ப்புணர்ச்சி. #

தப்பு தப்பா செய்யுறதா விட எதுவும் செய்யாமல் இருக்கலாம். புத்தர் சில நேரங்களில் சில கேள்விகளுக்கு பதிலே சொல்ல மாட்டாராம். அவர் முகத்தை சிறிதுநேரம் பார்த்து இருந்து விட்டு அவர் இதைத்தான் சொல்ல வருகிறார் என்று மக்கள் அவர்களது தேவைக்கேற்ப புரிந்து கொள்வார்களாம். சமூகத்தில் செயல்பட்டார்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சிந்தனையாளர்கள் விமர்ச்சகர்கள். ஒரு சிலர் மட்டுமே இரண்டும் செய்ய முடியும். யோசிக்காமல் இடும் கட்டளையை செய்யுள் செயல்வீரர்கள் உள்ளனர். எதுவும் செய்யாமலே யோசிக்கும் சிந்தனையாளர்கள் உள்ளனர். மார்க்ஸ் என்ன செய்தார். ஜஸ்ட் யோசித்தார்.  இன்னைக்கு நிறைய பேர் யோசிப்பது இல்லை மாடு மாதிரி உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் பேராச்சும் யோசிச்சு விமர்சனங்கள் செய்யட்டும். விமர்சனங்கள் வரவேற்க்கப்பட வேண்டும். விமர்சனம் எனும் பெயரில் சிலர் தூற்றுவதை செவிடர் காதில் சங்கு என்று சொல்லி இக்னோர் பன்ன வேண்டியதுதான். ஒரு முறை புத்தர் பிச்சை எடுக்க சென்ற போது ஒரு உழவர் கேட்டாராம். நான் உழுகிறேன், களை எடுக்கிறேன், நாத்து நடுகிறேன் அதில் வரும் நெல்லை அறுவடை செய்து சாப்பிடுகிறேன். நீ எதுவுமே செய்யாமல் பிச்சை எடுத்து சாப்பிடுகிறாயே என்று கேட்டாராம். அதற்க்கு புத்தர், நான் கூட உழுகிறேன், களை எடுக்கிறேன், நாத்து நடுகிறேன் அதில் வரும் நெல்லை அறுவடை செய்து சாப்பிடுகிறேன் என்று சொன்னாராம். அவர் உழுகிறேன், களை எடுக்கிறேன், நாத்து நடுகிறேன் அதில் வரும் நெல்லை அறுவடை செய்து சாப்பிடுகிறேன் என்று சொன்னது சமூகத்தில் உள்ள தீய சிந்தனைகள, தீய செயல்களை களை எடுத்து நல்ல சிந்தனைகளை நல்ல செயல்களை நாத்து நட்டு அதில் வரும் சமூக நன்மைகளை அறுவடை செய்வதை  பற்றி. சமூகத்தில் பலர் பல விதமாக சமூக பணிகளை செய்கின்றனர். அறுவடை செய்யும் நெல் உழவர்களுக்கு எவ்வளவு உரிமையானதோ அதே அளவு சமூகத்தில் மற்ற பணி  செய்பவர்களுக்கும் அது உரிமையானது. பிக்குகள் எதுவும் செய்யாமல் சோம்பேறிகளாக பிச்சை எடுத்து சாப்பிடுவதில்லை. அறத்தை (தம்மத்தை) மக்களுக்கு கொண்டு செல்லும் பணியை செய்து அதற்க்கான கூலியை பிச்சையாக பெறுகின்றனர். இன்னைக்கு சிந்தனையாளர்கள், விமர்சகர்கள், ஊடகவியலாளர்கள் அந்த பணியைத்தான் செய்கிறார்கள். அவர்கள் அந்த பணியை சரியாக செய்கிறார்களா? இல்லையா என்பது மேலும் விமர்ச்சனத்துக்கு உரியது. அதே சமயம் அந்த துறையே பயனற்றது என்று சொல்வது ஏற்புடையது அல்ல. செயலும் சிந்தனையும் சமூக முன்னேற்றத்திற்கு அவசியமான இரண்டு கண்கள்.  

 #கம்ப்யூட்டர கண்டுபிடிச்சவனும் நம்ம சாதி இல்லை! பேஸ்புக்க கண்டுபிடிச்சவனும் நம்ம சாதி இல்லை அப்புறம் ஏன் யா இங்க சாதி பெருமை பேசி திரியிறீங்க?#

கம்ப்யூட்டர கண்டுபிடிச்சவனும் தமிழன் இல்லை! பேஸ்புக்க கண்டுபிடிச்சவனும் தமிழன் இல்லை அப்புறம் ஏன் யா இங்க தமிழன் பெருமை பேசி திரியிறீங்க?

#ஈழ விடுதலைக்காக தமிழ் நாட்டில் மாணவர்கள் புரட்சி #

தமிழ் நாட்டில் மாணவர்கள் புரட்சி பண்ணி முதலாளித்தவ சமூகத்தை பொதுவுடைமை சமூகமா ஆக்கிட்டாங்கலாமே. அடங்கொய்யாலே, ஆட்சியாளர்கள் ஆளும் வர்க்கம் ஆடுனா ஆடிட்டு அடங்குன்னா  அடங்கிட்டு நல்லா புரட்சி பண்நீங்கடா. சீக்கிரம் பயோ டேட்டா அனுப்புங்க. அம்மா அடுத்த தேர்தலுக்கு முன்னர் வட்ட மாவட்ட செயலாளர்களை மாற்ற திட்டம் வைத்து இருக்காங்கலாம். குறைஞ்சது ஜெயா டி வி யில லைட்பாய் வேலையாவது கிடைக்கும். 


இதைப்போலத்தான் தொடர்ந்து அவர் ஏழை மக்களை உழைக்கும் மக்களை தலித் மக்களை பெண்களை கொச்சை படுத்தும்படி படங்களை போட்டு வருகிரார். அவர் செய்வது தவரு என்று சுட்டி காட்டிய பொது நிறைய திராவிட சிகாமணிகள் அவருக்கு வக்காலத்து வங்கின. 


#குஷ்பு, கனிமொழி அவர்களை குறித்து பதிவு போடும் போது நீங்கள் பெண் இல்லையா என்ன? இந்த நடிப்பா நாங்க பல படத்தில் பார்த்து விட்டோம்!#

குஷ்பு கனிமொழி குறித்து போடும் பதிவுகளை எதிர்ப்பதை விட்டு விட்டு மற்றவர்களை எதுக்கு அசிங்க படுத்துகிறீர்கள். உங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? குஷ்புவையும் கனிமொழியையும் அசிங்க படுத்தி ஸ்டேடஸ் போட்டவங்களை கேட்பதை விட்டு விட்டு இங்க வந்து கேட்டா எப்படி. தப்பு யார் செஞ்சாலும் தப்புதான் குஷ்பு, கனிமொழி  போன்றவர்களை பாலியல் வக்கிரத்துக்கு பயன்படுத்தி  அசிங்க படுத்தினாலும் தப்புதான் மற்ற பெண்களை பயணப்படுத்தினாலும் தப்புதான். அன்சாரியை கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லுங்கள். 

என் வீட்டு பெண்ணை ஈவ் டீசிங் செய்தால் உன் வீட்டு பெண்ணை ஈவ் டீசிங் செய்வேன்னு கிராமத்தில் அல்லக்கைகள் சொல்லுறது போல இருக்கு. 


முதலில் அன்சாரி செஞ்சது நியாயமா இல்லையான்னு முடிவு பான்ணுங்க. யாருக்கு எப்போ சில விஷயங்கள் தப்பா தோணுதோ அப்போதான் கேப்பாங்க. 25 வருஷத்துக்கு முன்ன அப்படி நடந்துச்சே எங்க போனீங்கன்னு கேட்டா. அவுங்க பிறந்தே இருக்க மட்டாங்க. குஷ்புவையும் கனிமொழியையும் கேவல்ப்படுத்திய கேவல ஜன்மங்களை தண்டிப்பதற்கு பதில் நீங்கள் கேவலமாக நடந்து கொள்ளாதீர்கள். 

குஷ்புவா, கனிமொழியா, சோனியாவா, ஜெயாவா என்பது கேள்வி அல்ல சிலர் முக புத்தகத்தில் பெண்களுக்கு தலித் மக்களுக்கு எதிராக வன்கொடுமைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அது அன்சரியாக இருந்தாலும் வேறு எந்த சாரியாக இருந்தாலும் எதிர்பது அவசியம். உங்கள் தோழர் உங்கள் கட்சிக்காரர் என்று வக்காலத்து வாங்க வேண்டாம். அன்சாரி பல இடங்களில் தலித் மற்றும் ஏழை எளிய மக்களை கொச்சை படுத்தியதை அவருடைய கவனத்திற்கு கொண்டு சென்றோம். அவர் தொடர்ந்து இதை செய்து கொண்டு இருக்கிறார். தவரை புரிந்து கொண்டு திருத்தி கொள்வது அவசியம். தவரை  நியாப்படுத்த வேண்டாம். 

No comments:

Post a Comment