Tuesday, April 2, 2013


#சாக்கிய பறையனாருக்கு பவுத்தமும் தெரியாது அதில் உள்ள பிரிவுகளை பற்றியும் தெரியாது.#

உண்மைதான் சாக்கிய பறையனாருக்கு பவுத்தம் தெரியாது புத்தம்தான் தெரியும். சாக்கிய பறையனருக்கு தேரவாதம் என்றால் என்ன மகாயானம் எனும் பவுத்த பிரிவுகள் தெரியாது  ஆனால் புத்தர் போதித்த சாக்கிய தம்மம் தெரியும். ஹினயானம், மகாயானம், தேரவாதம், வஜ்ரயானம் என்பதெல்லாம் மக்களை பிரிக்க பிரிவினைவாதிகள் ஏற்படுத்திய பிரிவுகள். புத்தர் காட்டிய தம்மம் என்பது மக்களை இணைக்கும் மக்களை மற்ற உயிர்களோடு இணைக்கும் வழி. சாக்கிய தம்மம் என்பது மானுடத்தை அடிப்படையாக கொண்டது. அங்கு இன, மொழி, நிற வேறுபாடுகள் இல்லை. உலகில் உள்ள ஆறுகள் எல்லாம் கடலில் கலக்கும்போது அதன் அடையாளத்தை இழந்து கடலாக மாறுவது போல உலக மக்கள் எல்லாம் தம்மத்தில் கலக்கும்போது அவர்களிடையே உள்ள வேறுபாடுகளை இழந்து மனித நேயம் மிக்க மக்களாக  ஆகின்றனர் என்கிறார் புத்தர்.  தேராவாதம் மகாயானம் வஜ்ராயானம் என்று மக்களுக்கு புரியாத வகையில் புத்தர் தம்மத்தை சொல்லிகொடுக்கவில்லை. மக்களுக்கு புரிந்த எளிய நடையில் அவர் தம்மத்தை சொல்லிக்கொடுத்தார். தம்மம் என்றால் என்ன? என்று கேட்டவருக்கு மூற்று வரிகளில் தம்மம் என்றால் என்ன என்று சொல்லிக்கொடுத்தார் புத்தர். 

"தீமையை தவிர், 
நல்லதை கடைபிடி, 
மனதை தூய்மையாக வைத்திரு, இதுதான் உலகில் தோன்றும் புத்தர்களின் அறிவுரை.  இதுதான் புத்தம் இதுதான் புத்த தம்மம். 

No comments:

Post a Comment