Saturday, February 9, 2013

 இது தனி மனிதர் சொன்னது அல்ல தமிழ் தமிழ் நாட்டின் சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம். பிரபாகரன் இந்திய அரசால் தமிழக அரசால் தேடப்பட்ட ஓரு கிரிமினல். அவருக்கு மாலையும் மரியாதையும் செய்யும் கூட்டம்தான் அப்சல்காணையும் கசாப்பையும் கிரிமினல் என்கின்றனர். (((((((முதலமைச்சர் ஜெயலலிதா 16-4-2002 அன்று, அ.தி.மு.க. ஆட்சியிலே, தமிழகச் சட்டப் பேரவையிலே   இலங்கைப் பிரச்சினை பற்றி ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:- இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சார்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் தலைவர் பிரபாகரனும், இந்திய மண்ணில் காலூன்றுவது ஒரு போதும் ஏற்கப்பட மாட்டாது, அனுமதிக்கப்பட மாட்டாது.
பிரபாகரனை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு ஸ்ரீலங்கா அரசோடு சட்டப்படியாகவும், தூதரக நடைமுறைப்படியும், அனைத்து விதமான முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், பிரபாகரனை அவர் புரிந்த குற்றங்களுக்காக இந்தியாவில் உள்ள நீதி மன்றத்தில் உரிய விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்றும் தமிழக சட்ட மன்றப் பேரவை மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.
ஸ்ரீலங்கா அரசினால் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரகாரனை பிடித்து நாடு கடத்த இயலவில்லை என்றால், ஸ்ரீலங்கா அரசின் அனுமதி யோடு, இந்திய இராணுவத்தை ஸ்ரீலங்கா அரசின் உதவிக்கு அனுப்பி, பிரபாகரனை சிறை பிடிப்பதற்கு உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழக சட்டமன்றப் பேரவை கேட்டுக் கொள்கிறது.!))))))))))))))))))

No comments:

Post a Comment