Tuesday, February 12, 2013

(((((((தலித் அல்லதா புத்தர் நமக்கு எதுக்கு?? தலித் அல்லாத புத்தரை ஏற்கும் போது ஏன் பெரியாரை புறக்கணிக்க வேண்டும்??)))))) சித்தார்த்த கோதமரின் குடியாம் ஆதி குடிகள் சாக்கியர்களே தீண்டா குடிகள் ஆக்கப்பட்டார்கள். அவர்களே இன்று தலித்துக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் என்பது சாக்கியர்களின் வரலாறு. ஆதாரம் செங்கம் கல்வெட்டுகளில் உள்ள சாக்கிய பறையனார் எனும் வாசகங்கள். சிலபதிகாரத்தில் பறையர் ஊரை சேர்ந்த சாக்கிய கூத்தையர்கள் என்று வரும் வாசகம். நிகண்டுகள், திவாகரம் மற்றும் பண்டிதர் அயோத்திதாசர் கூறும் ஆதாரங்கள். அண்ணல் அம்பேத்கரின் வரலாற்று ஆய்வு நூலான தீண்டப்படாதார் யார் எனும் நூல். வள்ளுவர் மாமன்னன் நாந்தன் பண்டிதர்  தாத்தா  அண்ணல் போல் சித்தார்த்த  கோதமரும் தலித் மக்களின் மூதாதையரே. ஆனாலும், அவர் தலித் மக்களின் மூதாதையர் என்பதால் மட்டும் அவரை நாம் எற்றுக்கொள்ளவில்லை. அவர் மானுடத்தை போதித்தார் மானுடத்தை காத்தார்  என்பதால் மட்டுமே அவரை நமது வாழ்வின் வழி காட்டியாக ஏற்றுக்கொள்கிறோம். நீங்கள் சொல்வது போல அவர் சாக்கிய  சமூகத்தை சாராதவர் என்றாலும் அவரை நாம் ஏற்றுக்கொள்வோம் அதற்க்கு காரணம், அவரின் இனம் அல்ல அவரின் குணம். ராமசாமியை எதிர்க்கும் நாம் புத்தரை ஆதரிக்க காரணம் அவர் "திராவிடம் எனும் இனப்பெருமை" பேசவில்லை "வட நாட்டு எதிர்ப்பு" "திராவிட நாடு" "மலையாளிகள் எல்லோரும் பார்பனர்கள் போல அயோக்கியர்கள்" என்று சொல்லவில்லை. ராமசாமியை போல ஆரியர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் திராவிடர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று சொல்லவில்லை. அதற்கு மாறாக பிறப்பின் அடிப்படையில் இனம், ஜாதி, வருணம், மதம் போன்ற கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களை கொண்ட மானுடத்தை புத்தர் போதித்தார். ஒருவன் எந்த இனத்தில் பிறந்தாலும் எந்த ஜாதியில் பிறந்தாலும் எந்த மதத்தில் பிறந்தாலும் அவன் பிறப்பு அவன் செயல்களை நிர்ணயிக்காது மாறாக அவனது குணமே அவன் செயல்களை நிர்ணயிக்கும் எனும் தம்மத்தை அவர் போதித்தார். மானுடத்தை போதித்த புத்தரை ஏற்கும் எவரும் ராமசாமி வழியில் "திராவிடர்"  "தமிழர்"  என்று மக்களை மொழி இனம் எனும் பெயரில் கூறு போட மாட்டார்கள். சாக்கிய தம்மம் என்பது மொழி, இனம், ஜாதி, மதம், நாடு எனும் எல்லைகளை வரையறைகளை கடந்த ஒன்று. 

No comments:

Post a Comment