Friday, February 22, 2013

ராஜபக்ஷேவை எதிர்க்கும்  ஒழுக்க சீலர்கள் நல்லவர்கள் வல்லவர்கள் நடுநிலையாளர்கள் ஜனநாயகவாதிகள் நேர்மையாளர்கள் நீதியாளர்கள் கடவுள் பக்தி கொண்டவர்கள் கடவுள் இல்லை என்று நம்பினாலும் பகுத்து அறிந்து நல்லது கேட்டது என்பதை தெளிவா சொல்றவங்க எல்லோருக்கும் நான் கேட்கும் கேள்வி. கடந்த முப்பது வருடங்களா  ஒரு நாட்டை எதிர்த்து ஆயுத போர். அந்த நாட்டில் இல்லாத பல போர் தந்திரங்கள் உக்திகள். பலம் வாய்ந்த விமானகள். கப்பல்கள். பீரங்கிகள். ஆயிரக்கணக்கான போர் வீரர்கள். இவர்களை வழி நடத்த அமைப்புகள் துறைகள் என்று ஒரு ஏகாதிபத்திய நாட்டுக்கு சமமான அணைத்து சாரம்சங்கள் கொண்ட அரசு வன்னிக்காட்டில். முப்பது ஆண்டுகள் ஒரு நாட்டின் ராணுவத்தால் அடக்க முடியாத அளவுக்கு ஆளுமை. கடைசியில் உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து ஒடுக்க வேண்டிய நிலை. அப்படி உலக நாடுகள் எல்லாம் சேரவில்லை எனில் கடைசி காலத்தில் வெற்றியை எட்டும் நிலை என்று எல்லோராலும் பேசப்படும் அளவுக்கு பலம் வாய்ந்த ஒரு அரசியல் அமைப்பு. இந்த புகழ் எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது. நிச்சயம் இது சாதாரண விஷயம் இல்லை. சொல்லும்போதே பிரம்மிக்க வைக்கிறது. இது என்ன சினிமாவா? நாவலா? கதையா? இல்லை நிஜமா? ஆனால் பதில் கிடைக்காத ஒரு விஷயம். இவளவையும் செய்ய பொருளாதாரம் தேவை மெத்த படித்த அறிவாளிகள் தேவை. அது இவர்களுக்கு எங்கே இருந்து வந்தது. முப்பது ஆண்டுகள் இவ்வளவு பேருக்கு வெறும் சோறு போடணும்னா கூட முடியாது இவர்கள் சோறு துணி மணி ஆயுதம் என்று அனைத்தையும் சப்ளை பண்ணி இருக்கிறார்கள். முஸ்லீம் தீவிரவாதம் என்று உலகம் முழுக்க தீவிரவாதம் பேசப்படுகிறது. அங்க பாம் வச்சான் இங்க பாம் வச்சான்னு  மத்தவங்கள பாத்து பொங்கி எழும் ஹிந்துக்கள் பொங்கி எழும் தமிழர்கள் ராஜபக்ஷேவின் ராணுவம் மனித மாண்பே இல்லாமல் பொதுமக்களை கொன்று விட்டது எனவே ராஜபக்ஷேவை உலக நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் உலக நாடுகள் எல்லாம் அவரை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று கேட்கும் மனித மாண்பு மிக்கவர்களிடம் கேட்கிறேன். புலிகளுக்கு யார் பணம் கொடுத்தது? நூறு  கோடி இரு நூறு கூடி இல்லை ஆயிரம் ஆயிரம் கோடிகள். கொட்டி கொட்டி கொடுத்தது யார்? எப்படி இந்த பணம் இலங்கைக்குள் வந்தது? ஆயுதங்கள் எப்படி இலங்கைக்குள் வந்தது? தனி மனித ஒழுக்கம்! சமூக ஒழுக்கம்! பன்னாட்டு சட்டம்! பன்னாட்டு நீதி மன்றம்! என்று பேசும் ஜனநாயக வாதிகளை கேட்கிறோம். இவர்கள் எங்கு கொள்ளை அடித்தார்கள்? யார் கொள்ளை அடித்த பணத்தை இவர்கள் பயன் படுத்தினார்கள்? நூரு ரூபாய் திருடினாலே வாய் பிளக்கிறோம். ஆனால் இவ்வளவு பணம் இவர்களுக்கு எங்கே இருந்து வந்தது. இந்த மாதிரி கொள்ளையர்கள் கடத்தல்காரர்கள்தான் இன்று உலகத்தை நடுங்க வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். எங்கியோ ஒரு மூலையில் சின்ன சின்ன தவறு செய்யும் ஒடுக்கப்பட்ட மக்களை எளிதில் பிடித்து தண்டிக்கிறோம் அவர்களின் இழி செயலை போஸ்டர் போட்டு விக்கிறோம். இந்த மாதிரி உலகமாகா கேடிகளை கடவுளாக்கி மேதகு உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் யாரோடும் ஒப்பிட்டு பேச முடியாத மாண்பாளர் என்று போற்றி பாடிக்கொண்டு இருக்கிறோம். இதுதான் இன்று இந்த சமூகதின் ஒழுக்க நிலை. 

No comments:

Post a Comment