Monday, February 18, 2013

((((((("ஒரு மொழி பேசுபவருக்கு  ஒரு மாநிலம்" என்பது ஒரு மொழி பேசும் எல்லா மக்களையும் ஒரு மாநில அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவது. இதுதான் பம்பாயோடு கூடிய  ஒருங்கிணைந்த மகாராஷ்டிரா வேண்டும் எனும் போராட்டம். இது ஒரு அபத்தமான திட்டம். இத்திட்டம் முழுமையாக  கை விடப்பட வேண்டும்.  உலகில் பிற பகுதிகளில் உள்ளது போல, ஒரு மொழி பேசும் மக்கள் பல மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும் ~ பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர்)))))))))))))))) அண்ணல் அம்பேத்கர் காலத்தில் மராட்டிய தேசியம் பேசியவர்கள் மஹாராஷ்டிரா மராட்டியர்களுக்கே, மராட்டி பேசும் மக்கள் எல்லாம் ஒருங்கினைக்கப்பட்டு ஒரே மாநிலமாக இருக்க வேண்டும் என்று கேட்டனர். தமிழ் மொழி பேசுபவர்களுக்கு தமிழ் நாடு  வேண்டும் என்று ராமசாமி ராஜகோபால் போன்றவர்கள் கேட்டது போல அங்கேயும் கேட்டனர். அண்ணல் அம்பேத்கர் அதை முழுமையாக எதிர்த்தார்.  அண்ணல் அம்பேத்கர் ஒரு மொழி பேசும் மக்களை இணைத்து ஒரே மாநிலம் ஆக்க கூடாது. மகாராஷ்டிரா என்பது வரலாற்றில் எப்போதும் ஒரு தேசமாக இருந்தது இல்லை இது மூன்று தேசமாக இருந்தது என்று ஒருங்கினைக்கப்பட்ட மகாரஷ்டிரா திட்டத்தை எதிர்த்தார். சோ கால்டு "தமிழ்" நாடு சேர சோழ பாண்டிய நாடுகளாக பிரிந்து இருந்தது போல மகாராஷ்ட்டிராவும் மூன்று நாடுகளாக இருந்தது என்று வரலறு சொல்கிறதுஅண்ணல் அம்பேத்கர் மகாராஷ்டிரா தமிழ் நாடு என்று ஒரு மொழியை பேசும் எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒரு மொழிக்கான ஒரு மாநிலம் என்று இருக்க கூடாது என்று எச்சரித்தார். ஒரு மொழிக்கு ஒரு மாநிலம் என்பதை எதிர்த்த அண்ணலின் படத்தை போட்டு தமிழ் தேசியம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சொல்றவன் கூமுட்டையா இல்லை அதையும் கேட்டுக்கொண்டு ஆமாம்  சாமி போடும்  தொண்டர்கள் கூ முட்டைகளா

No comments:

Post a Comment