Sunday, February 17, 2013

அண்ணல் அம்பேத்கர் படம் போட்ட நூறு பனியனை ஜாதி இந்துக்களுக்கு விற்க முயன்றார் ஒரு தலித். ஒரு ஜாதி இந்து ஒரு பனியனை விலை கொடுத்து வாங்கினார். நம்ம தலித்துக்கு ரொம்ப சந்தோசம். இப்படியும் நல்ல ஜாதி இந்துக்கள்  இருக்கிறார்களே என்று அவர் மகிழ்ந்து அந்த ஜாதி இந்துவை அழைத்து வந்து சேரி மக்களுக்கு எல்லாம் அறிமுகப்படுத்தி வைக்கிறார். வந்தவர் நாம எல்லாம் ஒன்னு நாம பிரிஞ்சி இருக்க கூடாது என்று ஆசை வார்த்தைகள் பேசியதில் நம் சேரி மக்கள் மயங்கினர். போவதற்கு முன்னர் கொண்டு வந்து இருந்த நூறு ராமசாமி பனியனை நம் மக்களுக்கு விற்று விட்டு சென்றார் அவர். நாம ஒரு பனியனை வித்துட்டு பெருமை பட்டுக்கொள்கிறோம். அவர்களிலும் நல்லவர்கள் உள்ளனர் என்று ஆனால் நாம் அவர்கள் நூறு பனியனை வாங்கிகொண்டு ஒரு பனியனைதான் அவர்களிடம் விற்க முடிந்தது. இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி வியாபாரம் செய்து நஷ்டப்படுவோம்? 

No comments:

Post a Comment