Wednesday, February 6, 2013

புத்தர் வள்ளுவர் பண்டிதர் அண்ணல் அம்பேத்கர் மாதிரி பெரிய ஞானிகளை மேதைகளை அறிவாளிகளை பண்பாளர்களை வாழிகாட்டிகளாக கால காலமாக ஏற்றுக்கொண்டு வழி நடந்த சமூகம் நம் சமூகம். எத்தனையோ கொடுமைகள் ஒடுக்கு முறைகள். ஆனாலும் தமது சமூக பண்புகளில் இருந்து பிறழாமல் வாழ்ந்த சமூகம். அங்கும் இங்கும் தனி மனிதர்கள் தவறுகள் செய்து இருக்கலாம் ஆனால் ஒரு சமூகமாக இவர்கள் எப்போதும்  இழிவாக நடந்து கொண்டது இல்லை. வன்முறை தீவிரவாதம் ஆதிக்கம் அடக்குமுறை ஆளுமை என்று நாம் அடுத்த சமூகத்தை நசுக்கியது இல்லை. அப்படிபட்ட சமூகம் இன்று குற்றப்பரம்பரையினறால் ஒழுக்கமற்றவர்களாக குற்றம் சுமத்தப்படுகிறது. பண்பாடற்ற ஒழுக்கமற்ற கடத்தல்காரன் கொள்ளை கூட்ட தலைவன் வன்முறையாளன் தீவிரவாதி எல்லாம் இன்று நாமது சேரிகளை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறார்கள். நமது குழந்தைகளுக்கு வழி காட்டியாக போதிக்கப்டுகிறார்கள். ஆயிரம் ஆயிரம் வருடங்களாக அன்பும் கருணையும் அறமும் ஊறிய ரத்தம் நமது ரத்தம். அப்படிப்பட்ட சமூகத்துக்கு இன்று  தீவிரவாதம் கள்ளக்கடத்தல் ஆயுத கடத்தல் வன்முறை   எனும் குற்றங்களை வாழ்வியலாக கொண்ட மனிதர்  வழிகாட்டியாக காட்டப்டுகிறார். நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது நாளை இந்த சமூகத்தில் தோன்றும் குழந்தைகள் எத்தகைய மனோ நிலையை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆயுதம் ஏந்து அடுத்தவனைக்கொல் என்றா நம் பிள்ளைகளுக்கு நாம் சொல்லி கொடுப்போம். யோசியுங்கள்!!!!!

No comments:

Post a Comment