Sunday, February 3, 2013

கமல் : நாத்தீகம் பேசும் இந்திய தேச மாத்ர (தாய் மண்) பக்தியும் தாய் மொழி பற்றும் மிக்க ராஷ்ட்ரிய சுயம் சேவக்







படம் பார்க்காமலே கமலுக்கு ஜால்ரா தட்டிய ஜாதி மத பேதமற்ற நாத்தீக இதுக்களே. கமல் தான் ஒரு நேர்மையான நல்ல இந்து என்பதை படம் முழுக்க கட்டியுள்ளார். நல்லா காரி காரி துப்பிக்குங்க.

அமெரிக்காவில் உள்ள பார்பான தமிழர்களின் மனதை குளிரவைக்கும் "அற்புதமான" படம். ஜெய் ஹிந்த்!

கமல் மீண்டும் தான் நாத்தீகம் பேசும் இந்திய தேச மாத்ர (தாய் மண்) பக்தியும் தாய் மொழி பற்றும் மிக்க ராஷ்ட்ரிய சுயம் சேவக் என்பதை நிருபிக்க எடுத்திருக்கும் படம். 

இந்த படத்துல ஒரு இசுலாமியர்தான் ஹீரோ. ஆனால், அவர் கலாம் மாதிரி ஹிந்து தேசப்பறுள்ள ஹிந்து இசுலாமியர். அவர் ஜெய் ஹிந்துன்னு சொல்றாரு, அடி தாங்க முடியாம கிருஷ்ணான்னு சொல்றாரு, என்னடா முஸ்லீம்ன்னு சொல்ற அடிச்சா  கிருஷான்னு  கத்துறேன்னு கேட்டா நான் நல்ல கலைஞன் என்கிறார், அப்படின்னா அல்லாவு அக்பர்னு சொல்லவா என்று காமடி பண்ணுகிறார், முஸ்லீமா வேலை தவறாமல் தொழும் இவர் திடீர்னு நாத்தீக பாணியில் எந்த கடவுள் வந்து காப்பாத்துவார்ந்னு நாத்தீகம் பேசுகிறார். அரபி பேச மறுக்கும் கற்றுக்கொள்ள மறுக்கும் தாய் மொழி தமிழ் பற்றுள்ள இசுலாமியர். ஆனால் ஆங்கிலம் பேசி அமெரிக்காவை கலக்கும் தமிழ் (ஹிந்து) இசுலாமியர். இந்தி உருது அரபி எதிர்ப்பு தமிழ் ஆங்கில பற்றுள்ள டிபிகல் "தமிழன்".  ஆர்மி மேன்  ஆனால் பிரதமர் கிட்ட ஆங்கிலத்தில் பேசுகிறார். தமிழன் இந்தியில் பேசிட்டா தமிழ் (இந்து) ரசிகர்கள் அடிப்பாங்க இல்லையா? இவர் தமிழ் நாட்டில் உள்ள டிபிகல் நாத்தீக தமிழ் இந்து இந்தியன்

பார்ப்பன பெண்களை இழிவுபடுத்தி எந்த கட்சியும் இல்லை. மாறாக, அமெரிக்க பார்ப்பன தமிழ் கூட்டத்தை தேவர் மகனில் தேவர் சமூகத்தை போற்றி பாடியது போல இந்த படம் அமெரிக்க பார்ப்பன தமிழ் சகோதர சகோதரிகளை போற்றி பாடும் படம். பாப்பாத்தி இந்த சிக்கனை சாப்ட்டு பார்த்து காரம் உப்பு உள்ளதா என்று சொல்லு என்று ஒற்றையில் சொல்லவில்லை. "பாப்பாத்தியம்மா" இந்த சிக்கனை சாப்பிட்டு பார்த்து காரம் உப்பு உள்ளதா என்று சொல்லு அப்படி சொல்லும்போது அவர் குரலில் அப்படி ஒரு பாசம் கரிசனம். எதோ அவுங்க ராஜலக்ஷ்மியம்மாவிடமே பேசுவது போல அப்படி ஒரு கரிசனம். அமெரிக்காவுள இருந்தாலும் தமிழ் பிராமண பெண்கள் கற்புக்கரசிகள் என்று இப்பவும் புருசனோடு சேர்ந்து சாக தயாராக உள்ள பெண்கள் என்று "சதி" யை நினைவு படுத்தும் பார்ப்பனபெண் கதாநாயகி.  கணவன் தன்னை சரியாக கவனிப்பதில்லை என்பதால் தனது பாஸிடம் கள்ள காதல் தொடர்பு கொண்டு இருந்தாலும் செக்ஸ் இல்லாத காதலாம். காதல் பண்ணுவாங்களாம் ஆனா செக்ஸ் வச்சா "கற்பு" போயிடுமாம். செக்ஸ் வச்சா என்னன்னு புரட்சியா பேசுவாங்கலாம் ஆனால் ஆக்ச்சுவலா செக்ஸ் வைக்க மட்டாங்கலாம். ஒழுக்க சீலர்களாம். அப்பப்பா டிபிகல் தமிழ் கற்புக்கரசிகள்தான். கடைசி வரைக்கும் டிபிக்கலா ஒரு இன்னொசென்ட் தமிழ் பார்ப்பன பெண்ணாக கதாநாயகி. அப்புடியே அமெரிக்க பார்ப்பன தமிழ் கூட்டத்துக்கு  அப்படி ஒரு போற்றி பாடடி.

இந்த படம் முழுக்க முழுக்க ரேசியல் இசுலாமி எதிர்ப்பு பேசும் வெள்ளை அமெரிக்கர்களையும், மூணு நாலு ஜெனரேஷனா அமெரீக்காவில் உட்கார்ந்து கொண்டு இந்திய இந்துத்துவாவுக்கு பண உதவி செய்து இசுலாமி வெறுப்பை தூண்டி விடும் இந்து பார்ப்பன கூட்டத்தையும் மகிழ்ச்சி படுத்த எடுக்கப்பட்ட படம். இந்த படத்துல ஹீரோ தமிழ் நாட்டை சேர்ந்த "அரை" இசுலாமியர். அப்பா காஷ்மீரி அம்மா தமிழச்சி? அம்மா இந்துவா முஸ்லீமான்னு தெரியல.  ஒருவேளை அடுத்த பாகத்தில் சொன்னாலும் சொல்வார். அடுத்த பாகத்தின் பெயர் "விஸ்வரூபம் II  இந்தியா".  ஜெனராலா இந்திய தேசிய ஆர்மி படங்கள் காஷ்மீரைதான் குறி வைக்கும். ஆனால் கமல் கொஞ்சம் வித்தியாசமான் இந்திய ஹிந்து தேசியவாதி. கொஞ்சம் காந்தியம் கஞ்சம் ஆர் எஸ் எஸ் கொஞ்சம் ராமசாமி நாத்தீகம்  கலந்த இந்து கலவை. அதனால, பகிஸ்தானியர் எல்லாம் ஒரு காலத்தில் இந்துக்கள். தமிழர்கள் ஸ்டைலில் சொல்லனும்னா ஆரியர்கள் வரும் முன்னர் வாழ்ந்த திராவிட இந்துக்கள்.  அதனால ஒரு திராவிடனா, தமிழனா, இந்தியனா மற்ற தமிழ் இந்து முட்டாள்களை போல இவர் தனது பூர்வீக  இந்துக்களான பாகிஸ்தானிய சகோதர்களை  கொச்சைப்படுத்தவில்லை. கைபர் போலான் கனவாய்க்கு அப்பால் உள்ள ஆப்காணிய ஆரிய முஸ்லீம்களை டார்கெட் செய்கிறார். கொடூரமான ஆப்கானிய இசுலாமியர்களுக்கு எதிராக போராடுகிறார். இவரும்  இவரோடு முஸ்லீம் வேடத்தில்  உள்ள ஹிந்துக்கள்  மட்டுமே வன்முறைக்கு எதிராக துடிக்கிறார்கள். ஆப்காணிய தீவிரவாதிகளை ஒழிக்க போராடும் அமெரிக்க வெள்ளைகாரர்கள் இந்திய (தமிழ்) போராளிகள். இவர் ஆப்கானிய இசுலமியர்களை மட்டும் கிரிமினல்ஸ் ஆக்கல அமெரிக்க கறுப்பர்களையும் சேர்த்து கிரிமினல் ஆக்குகிறார். அமெரிக்காவில் இன்று கறுப்பர் மக்களுக்கு இசுலாம் என்பது இந்தியாவில் சாக்கிய மக்களுக்கு புத்தம் போன்றது. வெள்ளை அமெரிக்கர்கள் அரேபிய ஆப்கானிய மக்களை மட்டும் வெறுக்கவில்லை. அமெரிக்காவில் உள்ள கறுப்பர் இன மக்களையும் வெறுக்கின்றனர் ஒதுக்குகின்றனர். அதில் கமலும் அவரது பார்ப்பன தமிழ் கூட்டமும் கூட்டு சேர்ந்து உள்ளது. இந்த படத்தில் முடிவா நைஜீரியாவை சேர்ந்த கருப்பு இன இசுலாமியர் கையில் வெடி குண்டை கொடுத்து அனுப்புகிறார். எல்லா தீவிர வாதிகளுக்கும் நடுவுல அமெரிக்காவுல இருந்தும் பார்ப்பனியவாடை இல்லாத "தமிழ்" பேசும் ஒருவர். பேரு தீபக் தீவிரவாதிகளுக்கு துணை செய்து பெரும் பணக்காரரா உள்ளார். அவர் வாயில் இருந்து வரும் டிபிகல் வார்த்தை "உங்கம்மால".  ஒரு வேலை அவரும் பார்ப்பனிய தமிழை மறந்த அமெரிக்க பார்பனரா கூட இருக்கலாம். நாமே வேறு எந்த கற்பனையும் செய்து கொள்ள வேண்டாம்.  

படம் முழுக்க ஜிஹாதிகளுக்கு எதிரான குரல். ஜிஹாதிகள் என்றாலே தீவிரவாதிகள் என்று படம் அடையாளப்படுத்துகிறது. இசுலாமில் ஜிஹாதிகள் என்பது முசுலீம் அல்லாதவர்களுக்கு எதிராக  போர் செய்பவர்கள் அல்ல மனதில் தோன்றும் அகவிருளை மனதில் உள்ள காமம், மயக்கம், கோபம், வெறுப்பு எனும் தீய சக்திகளை அகற்ற போராடுபவர்கள் என்றும் ஒரு விளக்கம் உள்ளது. குறைந்தது அந்த உண்மையையாவது அவர் சொல்லி இருக்கலாம். 

இப்படி ஜிஹாதிகளை கேவலப்படுத்தும் கமல் இவ்வளவு தைரியமா இந்து தமிழ் புலிகளின் தீவிரவாதத்தை வைத்து ஒரு படம் எடுப்பாரா? அப்படி எடுத்தால் அவரது இந்து தமிழ் உறவுகள் எல்லோரும் நாக்கில் ஜொள்ளு வடிய வடிய முஸ்லீம்களை தீவிரவாதிகளாக பார்த்து ரசித்ததை போல ரசிப்பார்களா? 


இந்த படத்தில் கமல் தெரிந்தோ? தெரியாமலோ? ஒரே ஒரு உண்மையை காட்டி உள்ளார். ஒரு வேலை அவர் இந்த கட்சியை செட்டிங் போட்டு எடுக்காமல்  நேரடியாக படம் பிடித்து இருப்பார் என்று நினைக்கிறேன். படம் முழுக்க ஆப்கானிய இசுலாமி மக்கள் தீவிரவாதிகள் போலவும் மத வெறியர்கள் போலவும் காட்டிய இவர் ஆப்கானிஸ்தான மக்களின் மத சார்பற்ற நிலை மற்றும் கலையை போற்றும் பண்பை காட்டியுள்ளார்.  ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலை உடைக்கப்பட்டதால் அவர்கள் புத்தத்துக்கு கலை, சிற்பம் மற்றும்  தொல் பொருள்களின் மகத்துவம் அறியாதவர்கள் மிராண்டிகள் தீவிரவாதிகள் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால், ஆப்கானிஸ்தான் ரெஸ்டாரண்டுகளில் அவர்களின் கலை மற்றும் தொல்பொருள் விற்பனை நிலையங்களில் அவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது உடைந்து போன புத்தர் படங்கள்  மற்றும் சிலைகள்தான். அங்கெல்லாம் தாலிபான்கள் உடைத்த புத்தர்  சிலை உருவ படங்கள் தொங்குவதை பார்க்கலாம். இந்த படத்தில் அது கட்சியாக காட்டப்பட்டு உள்ளது. எல்லா ஆப்கானிஸ்தான மக்களும் தீவிரவாதிகளும் இல்லை. எல்லா  ஆப்கானிஸ்தான மக்களும் புத்தம் மற்றும் கலை மற்றும் சிற்பங்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்று இது காட்டுகிறது. தாங்க்ஸ் கமல் தெரியாம உண்மையை பேசியதுக்கு. 

No comments:

Post a Comment