Sunday, February 17, 2013

நூறு ஆண்டுக்கு முன்னர் பறையர் சங்கமாக ஆரம்பிக்கபட்ட தலித் இயக்கம் பரிணாம வளர்ச்சி பெற்று ஆதி திராவிடர் சங்கம் (1920 களில்), பின்னர் ஒடுக்கபட்ட மக்களின் சம்மேளனம் (1930 களில்), ஷெடுல்ட் கேஸ்ட் பெடரேஷன் (1950 களில்) தலித் இயக்கம் (1970 களில்) என்று மாறி பின்னர் அண்ணல் அம்பேத்கர் மக்கள் இயக்கமாக (1980 களில்) மாறியது. அதன் அடுத்த கட்டமாக சாக்கிய தம்மம் சேரி மக்களின் (1990 களில்) வீடுகளை நோக்கி போக ஆரம்பித்த காலத்தில் தமிழ் தேசியம் வந்து அதை தட்டி பறிக்க முயற்சித்தது.   இன்னும் முயற்சித்துக்கொண்டு இருக்கிறது. திட்டமிட்டு தமிழ் தேசிய வாதிகள் அண்ணல் அம்பேத்கரை மராட்டியர் புத்தம் என்பது வட நட்டு மதம் என்று 1980 / 1990 களில் பேச ஆரம்பித்தனர். அகில இந்திய அளவில் தலித் இயக்கம் அம்பேத்கர் இயக்கம் சாக்கிய தம்மம் பரவுவதை தடுக்க இந்துக்கள் உருவாக்கிய ஆயுதமே இந்த தமிழ் தேசியம். 1980 / 1990 களில் தமிழ் தேசியவாதிகள் அண்ணல் அம்பேத்கர் இயக்க தொண்டர்களிடம்  பறையர் சங்கம் பறையர் உணர்வு பற்றி பரப்பினார்கள். இன்று அதே பறையர் சங்கம் பறையர் உணவு தமிழ் தேசிய உணர்வுக்கு எதிராக உள்ளது என்று கூப்பாடு போடுகின்றனர். பறையர் என்ற உணர்வும் பறையர் சங்கம் எனும் அமைப்புகளும் அகில இந்திய அளவில் உருவாகும் தலித்திய அமைப்புகளை உடைக்கும் என்று எதிர்பார்த்தனர். மாறாக பறையர் எனும் உணர்வு திராவிட தமிழ் தேசிய மாயைகளை உடைத்து தலித் மக்களின் உண்மை நிலையை சிந்திக்க வைத்து அவர்களை அகில இந்திய / ஆசியா முழுக்க உள்ள தலித் மக்களோடு இணைக்கும் பாலமாக உருவாகி வருகிறது. தான் யார் என்று சிந்தனை இல்லாமல் திராவிட தமிழ் தேசிய மாயையில் இருந்த மக்களை தங்கள் நிலை பற்றி உணர வைக்கும் அடையாளம் பறையர் என்பது. பறையர் எனும் ஆயுதம் தங்களை போல ஆசியா முழுதும் உள்ள சேரிவாழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள உதவும் ஆயுதமாக உள்ளது

No comments:

Post a Comment