Tuesday, February 5, 2013

 நான் இந்த சந்திப்பை  கொச்சை படுத்தவில்லையே. உயர்ந்த பொறுப்பில் உள்ள  இரண்டு நாட்டு அரசு பிரதிநிதிகளின் சந்திப்பு என்று பெருமையாக தானே சொல்கிறேன். ((((((ராஜபக்ஷே நல்லவரா வல்லவரா ஆதிக்க மனோபலம் உள்ளவரா என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் ஆனால் அவர் இலங்கை அரசின் சட்டப்படியோ இந்திய அரசு சட்டப்டியோ பன்னாட்டு அரசின் சட்டப்படியோ இன்னும் குற்றவாளி என்று நிருபிக்க படவில்லை. அவர் ஜெயலலிதா போல ஒபாமா போல மன்மோகன் சிங் போல திருமாவளவன் (எம் பி) போல மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு நாட்டின் பிரதிநிதி. அவரை அவரது ஆட்சியை அவரது ஆட்சியில் நடந்த குற்றங்களை குறைகளை எதிர்ப்பது என்பது இந்திய மக்கள் ஜெயா திருமா மன்மோகன் சிங்கை எதிர்ப்பது மற்றும் அடுத்த முறை அவர்களை ஆட்சிக்கு பதவிக்கு வரவிடாமல் செய்வதற்கு ஒப்பாகும். ஆனால் புலிகளின் நாயகன் பிரபாகரன் அப்படியா? அவர் மக்களால் தமிழ் தேசிய தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டரா? மக்கள் அவருக்கு ஓட்டு போட்டார்களா? அவர் ஆட்சி நடத்தியது பன்னாட்டு அரசு ஏற்றுக்கொண்டதா? அவரது ஆட்சியில் நடந்த வரவு செலவுகள் மக்கள் முன்னர் விவாதத்துக்கு வந்ததா? திருமா ஒரு அரசு பிரதிநிதியாக சென்று ராஜபக்ஷேவிடம் பேசியது அவரிடம் கை குளுக்கியது தவறா? இல்லை திருமா உட்பட தமிழ் தேசியவாதிகள் எல்லோரும் இலங்கை சென்றது இந்திய அரசும் இலங்கை அரசும் பன்னாட்டு அரசும் குற்றவளியாக தேடிக்கொண்டு இருக்கும் ஒருவரை சந்தித்தது அவரிடம் உறவு வைத்து வந்தது தவறா?))))))

No comments:

Post a Comment