Tuesday, February 19, 2013

திருமாவை தலித் மக்கள் விமர்சிப்பதற்கும் தமிழர்கள் விமர்சிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. திருமா, "என் சொந்தங்களே" "என் சொந்தகளே", என்று தமிழர்ளிடம் கை கூப்பி வேண்டிகொண்டு இருக்கிறார். ஆனால், அவர்கள் இவரை தங்களில் ஒருவராக ஏற்காமல் துரோகி எனும் முத்திரை குத்தி தூக்கி எரிந்து கொண்டு இருக்கிறார்கள். தமிழன் என்று சொல்லி நம்மிடம் இருந்து  விலகி  போகும் இவரை நாம் உறவு கொண்டாடி வாருங்கள் என்று கை கூப்பி வரவேற்கிறோம். ஆனால், தலித்துக்கள் ஜாதிய வாதிகள் அவர்களோடு நான் சேர மாட்டேன் நான் பொது நீரோட்டத்தில் கலக்கிறேன் என்று நம்மிடம் இருந்து விலகி போய்க்கொண்டு இருக்கிறார். தமிழர்களை சொந்தங்கள் என்று சொந்தம் கொண்டாடியது போல் ஆசியா முழுக்க உள்ள நமது தலித் சொந்தங்களை எப்போதாவது அவர் தனது சொந்தங்கள் என்று பேசி இருக்கிறாரா? யாரோ ஜாதி இந்து நமது கஷ்டத்தை பார்த்து மனிதாபிமான அடிப்படையில் நமக்கு உதவி செய்வதாக சொல்கிறார். என்ன மனிதாபிமானம் இந்த எழுச்சி தமிழருக்கு.  இவர் ஒரு முறை ஈழ தமிழர் என்று சொல்லாமல் இலங்கை தமிழர் என்று கவனக்குறைவாக சொல்லி விட்டாராம். அதுக்கு தமிழர்கள் இவரை தாக்கு தாக்குன்னு தாக்கி. உடனே இவரிடம் இருந்து பதில் விளக்கம் அப்பப்பா. அவர்களிடம் இவர் கெஞ்சுவதும் அவர்கள் முஞ்சுவதும். நல்ல தமிழ் தேசிய விளையாட்டுப்பா. கனவில் கூட இவர் பிரபாகரனை ஒருமையில் பிரபாகரன் என்று சொன்னது இல்லை சொல்ல மாட்டார். சொன்னால் அந்த  தமிழ் தேசிய புலி கூட்டம்  இவரை கடித்து குதரும் என்பது இவருக்கு தெரியும். மேதகு, தலைவர் என்று  அடை மொழி. பத்து முறை அந்த பெயரை உச்சரித்தாலும்  அடை மொழி இல்லாமல் உச்சரிக்க மாட்டார். ஆனால் அண்ணல் உட்பட்ட தலித்  தலைவர்களின் பெயரை மிக சாதரணமாக உச்சரிப்பார் எப்போதாவது ஒரு முறை புரட்சியாளர் மற்றபடி அம்பேத்கர்தான். தமிழர்களிடம் அவர் காட்டும் விசுவாசம் மதிப்பு மரியாதை பயம் உறவு கொண்டாடும் விதம். அதுவே  நம்மிடம் அவர் பேசும் விதம் ஆளுமை அதிகாரம் ஒட்டாமல் நடந்து கொள்ளும் விதம் நம்மை மிகவும் கீழானவர்கள் போல பார்க்கும் விதம் நம் மீது அவர் காட்டும் கருணை கழிவிரக்கம் நமக்கு அறிவுரை சொல்லும் விதம் நமக்குள்ளே இருக்கும் தாழ்வு மனப்பான்மையை போக்க அவர் கொடுக்கும் லெக்ச்சர். அப்பப்பா ஒரு ஜாதி இந்து நம்மிடம் உறவாடும்போது காட்டும் அத்தனை குனாதிசையங்களும்  இவருக்கு இருக்கு. ராமசாமிகளும் காந்திகளும் தான் நினைவுக்கு வருகின்றனர். நமக்கு  தலைவர்களாக  ராமசாமிகளும் காந்திகளும் தேவை இல்லை. நமக்கு தலைவர்களாக தாத்தாவும் அண்ணலும் வர வேண்டும். நம்மை அவர்களது சொந்தங்களாக பார்க்க வேண்டும். நம்மில் ஒருவராக பழக வேண்டும். 

No comments:

Post a Comment