Tuesday, February 26, 2013

பூலான் தேவின்னு ஒரு அம்மா. அவுங்க ஜாதிய கொடுமைகளை நேரில் அனுபவிச்சாங்க. அந்த கொடுமைகளில் இருந்து தப்பிக்க வழி இல்லாமல் குற்றவாளியா மாறினாங்க. பல கொலை கொள்ளை என்று வாழ்ந்தார்கள். அரசு தண்டிக்காத ஜாதி குற்றவாளிகளுக்கு அவுங்களே தண்டனை கொடுத்தாங்க. அவுங்களை கடைசி வரை கொள்ளைகாரி என்றே  சொன்னார்கள். அவுங்களை பிடிக்க முடியாமல் அரசு தவித்தது. கடைசியில் அந்த அம்மாவே தான் பின்பற்றும் செயல் சரி இல்லை என்று வந்து சரண்டர் ஆனாங்க. அவுங்க பட்ட கஷ்டத்தையும் அவுங்க குற்றவாளியா ஆன காரணத்தையும் அலசி ஆராய அரசு 11 வருசம் எடுத்துக்கொண்டது. கடைசியில் அவர்களை விடுதலை செய்தது. விடுதலை ஆன பிறகு தான் போனது சரியான வழி இல்லை என் நோக்கம் பழி வாங்கும் நோக்கம் அல்ல என்னை  காத்துக்கொள்ள வேறு வழி இல்லை என்று பிரச்சாரம் செய்தார்கள். இப்படி தன் சொந்த வாழ்வில் கொடுமைகளை அனுபவித்தவர் தன்னுடைய சூழ்நிலையால் குற்றவாளியாக மாறியவர். அவரையே நாம் மகான் மேதகு என்று சொல்வதில்லை. அவர் போன்ற நிலை நமது பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்று தான் நினைக்கிறோம். அவர் பட்ட கஷ்டம் ஏதாவது பிரபாகரன் பட்டு இருப்பாரா? அந்த அம்மாவை விடுங்கள். சாதரணமா நம்ம சேரியில் இருக்கும் எவராவது ஒரு தலித் பட்ட கஷ்டத்தில் எதையாவது பிரபாகரன் பட்டு இருப்பாரா? பின் எது அவரை பயங்கர வாதியாக ஆக்கியது. காட்ல சாதரணமா சில்லி குற்றங்கள் செய்து பூலான் தேவி கொள்ளைக்காரி? உலக மகா கடத்தல்கரன் மேதகுவா? 

No comments:

Post a Comment