Sunday, February 10, 2013


((((((((பெரியார் பற்றிய எதிர்மறை அரசியல் கருருத்துக்களை ஒரு ஆய்வின் அடிப்படையில் வைத்தீர்களனால் மேற்கொண்டு பெரியாரை ஆழமான அரசியல் வாசிப்புக் உட்படுத்தலாம் தோழரே)))))))))))
ஆய்வுக்கான கேள்விகள்: 
1) தலித்தல்லாத ஆதிக்க சமூகத்தை சேர்ந்த ராமசாமி அவர்களை தலித் மக்களின் அடையாளமாக கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? 
2) தலித்தல்லாத  ஆதிக்க சமூகத்தை சேர்ந்த ராமசாமி அவர்களை தலித் மக்களின் அடையாளமாக கொண்டுவருவதால் தலித் இயக்கத்தில் என்ன மாறுதல்களை ஏற்படுத்த இயலும்?
3) தலித்தல்லாத  ஆதிக்க சமூகத்தை சேர்ந்த ராமசாமி அவர்களை தலித் மக்களின் அடையாளமாக கொண்டுவருவதால் உளவியல் ரீதியாக தலித் மக்களுக்கு என்ன மாறுதல் அல்லது தலித் மக்களிடையே என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
 4தலித்தல்லாத  ஆதிக்க சமூகத்தை சேர்ந்த ராமசாமி அவர்கள்  பார்பனர் அல்லாதார் இயக்கம் நடத்திய காலத்தில் அவரது இயக்கத்துக்கும் அன்றைய கால கட்டதில் தமிழகத்தில் செயல் பட்ட தலித் அமைப்புக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருந்த உறவு என்ன?
5) ராமசாமி அவர்கள் தலித் மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்கு ஆற்றிய பங்கு என்ன?
6) ராமசாமி அவர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் அதற்க்கு பின்னரும் தலித் மக்களின் உரிமைகளுக்காக தமிழ் நாடு அரசிடம் வய்த்த கோரிக்கைகள் என்ன? அவர் அந்த கோரிக்கைகள் செயல்பாட்டுக்கு கொண்டு வர எடுத்த முயற்சிகள் என்ன? 
7) ராமசாமி அவர்கள் காலத்தில் தலித் மக்கள் இயக்கம் பல்வேறு தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களை தமிழகத்தில் நடத்தியது அதில் ராமசாமி அவர்களின் பங்கு என்ன?
8) அன்றைய தலித் இயக்கங்கள் நடத்திய எந்த போரட்டத்திலாவது ராமசாமி அவர்கள் பங்கு பெற்றாரா? 
9) வெள்ளாள மற்றும் பிற  சூத்திர ஜாதிகளின் பண்ணையார் - ஜாதி ஆதிக்க  அரசியல் பற்றி ராமசாமி அவர்களின் நிலைப்பாடு என்ன? 
10) வெள்ளாள மற்றும் பிற  சூத்திர ஜாதிகளின் ஆதிக்கத்தை எதிர்த்து தலித் இயக்கங்கள் போராடிய போது ராமசாமி அவர்களின் நிலைப்பாடு என்ன? அவர் தலித் இயக்கங்களின் பக்கம் இருந்தாரா?
11) ராமசாமி அவர்கள் பேசியா நாத்தீகம் தலித் மக்களின் வாழ்வியலோடு ஒத்து போகுமா? அது சமூகத்தில் எந்த வித மாற்றத்தை கொண்டு வந்தது / கொண்டு வரும்? 
12) ராமசாமி அவர்கள் பேசிய "நாத்தீகம்" "மத எதிர்ப்பு" என்பது எப்படி தலித் மக்களை மத மற்றம் பற்றிய சிந்தனையை வரவேற்குமா? அல்லது மத எதிர்ப்பு எனும் பெயரில் அவர்களின் மத மாற்ற சிந்தனையை மட்டு படுத்துமா?
13) தலித் மக்கள் ஆசியா முழுக்க பறந்து விரிந்து உள்ள சமூகம் அந்த சமூகம் ராமசாமி பேசிய "திரவிடம்" எனும் அடையாளத்துக்குள் வர முடியுமா? தலித்  மக்கள் பல மொழி பலம் இனம் அடங்கிய ஒரு சமூக குழு. "திராவிடம்" என்பது தலித் மக்களை எந்த விதத்தில் அவர்களை ஒருங்கிணைக்கும். 
14) மொத்ததில் ராமசாமியிசம் என்பது இன்றைய தலித் இயக்கத்துக்கு ரெலவன்சா? 
இந்த ஆய்வுக்கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் எனில் மேலும் கேள்விகளோடு ஆய்வை தொடரலாம். 

No comments:

Post a Comment