Friday, February 1, 2013

சென்னைக்கு பிழைக்க வந்த எல்லோரும் அவர்களின் ஆதிக்க மொழியைத்தான் இங்குள்ள உழைக்கும் மக்களின் தலையில் தினிக்கிறார்களே ஒழிய உழைக்கும் மக்களின் மொழியை யாரும் ஏற்றுக்கொள்வது இல்லை பேசுவது இல்லை. இவர்கள் சென்னையில் பல வருடங்களாக இருப்பார்கள் ஆனாலும் இவர்களுக்கு மெட்ராஸ் பாஷை புரியவே புரியாது என்பார்கள். மெட்ராஸ் பாஷா என்றாலே இவர்களுக்கு அப்படி ஒரு அருவருப்பு. வந்து அம்பது வருஷம் ஆச்சு நூறு வருஷம் ஆச்சு இன்னும் கூட மெட்ராஸ் பாஷைல பேசாம எதுக்கு "நார்மல்" தமிழ்ல பேசிட்டு இருக்கீங்க? அந்த மண்ணுக்கு சொந்தமான மொழியில் பேசணும்னு கன்னடனுக்கு தெலுங்கனுக்கு மலையாளிக்கு புத்தி சொல்லும் உங்களுக்கு புத்தி இல்லையா? வந்த இடத்துல அவன் பேசுற மொழிய பேசாம அவன நக்கல் அடிக்கிறீங்க. 

No comments:

Post a Comment