Wednesday, February 20, 2013

எங்களுக்கு தெரிஞ்சது பஸ்ஸுதான். பேருந்துன்னு நீங்க புதுசா ஒரு வார்த்தைய கண்டு புடுச்சி எங்க மேல திணிச்சா நாங்க என்ன பண்றது. பேருந்து மக்கள் மொழியா இல்லை பல்கலை கழக பண்டிதர்களின் மொழியா? 

பண்டிதர்கள் படிச்சுட்டு பேசுவாங்க பாமரர்கள் இயற்கையா பேசுவாங்க. எங்களை இயற்கையா பேச விடுங்க உங்க பண்டிதத்தனத்தை எங்க கிட்ட திணிக்காதீங்க. 

அயோத்திதாசர் அன்னைக்கு பேசியது பாமர்களின் மொழி. அன்றைக்கு செந்தமிழ் பேசிக்கிட்டு இருந்த பொது இவர் வித்தியாசமா பேசி இருப்பார். "பாலி பாஷையாம் மகடத்தினின்றே சகலபாஷைகள் தோன்றிய ஆதாரத்தால் திராவிட பாஷையாம் தமிழ் மொழிகள் பல பாஷையிலும் கலப்புற்றிருக்கின்றது." இது பண்டிதர் அயோத்திதாசர் எழுதியது. இதில் மொழி கலப்பு இருப்பதை பாருங்கள். இவர் காலத்தில் வாழ்ந்த வாழ்ந்த டுமில் ஆசாமிகள் தனித் தமிழ் செந்தமிழ் என்று மக்களுக்கு புரியாத மொழிகளை எழுதிக்கொண்டு இருந்தனர். 

என்ன பண்றது. பண்டிதரோடு பேசிட்டு இருக்கேன். பண்டிதர் மொழியில் பேசுகிறேன். வெடல எங்கப்பா எங்க அம்மா கிட்ட இப்படி பேசுனா செருப்படி விழும். எங்க அப்பாவ வாங்க போங்கன்னு கூப்டலே. என்னடா நீ ஒரு ஆளு கிட்ட பேசுறியா ரெண்டு ஆளு கிட்ட பேசுறியா? அது என்ன உங்க உங்கன்னு சொல்றே. உனக்குன்னு சொல்லு என்பார். 

காலைல டீ கொடுங்கன்னு சொலதுக்கு பதில் தேநீர் கொடுங்கன்னு கேட்டா டீ கிடைக்காது உதைதான் கிடைக்கும். டீயாவது பரவாயில்லை அது என்னமோ காப்பி க்கு புதுசா ஒரு பேரு வச்சு அதுதான் டுமில் அப்படின்னு சொல்லிட்டு இருக்கீங்களே அது என்ன? எனக்கே தெரியல. எழுத படிக்க தெரியாத பாமர மக்களுக்கு எப்படி தெரியும். பல்கலை கழகத்தில் புத்தகத்தில் இருப்பது ஆதிக்க தமிழ். மக்கள் பேசுவது பாமர தமிழ். 


அப்பநா  வாங்க சிங்கார சென்னையில் சும்மா தகர சேர்ல குந்திக்குனு ஸ்டாராங்க ஒரு டீ அச்சிக்கினே பேசுவோம். நாட் பேசுவோம். கலாய்ப்போம். அதுல கிடைக்குற சுகம். உங்க தூய்மையான தமிழ்ல பேசும்போது சத்திமா கிடைக்காது நைனா. 

No comments:

Post a Comment