Saturday, June 15, 2013

#எல்லா சாதியினராலும் ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டு வீழ்ந்து கிடக்கும் எங்கள் இனம் வீதியில் இறங்கி போராடவேண்டிய நேரத்தில் ஒரு MP சீட்டுக்காக ஆதிக்க சக்திகளின் அடிவருடிகொண்டிருக்கும் தலைவனை பெற்றுள்ளோம் புரிந்துகொள்ளுங்கள் எது முக்கியம் என்று.#


தலைவனை நாம் பெறவில்லை. அவரை நமது தலைவன் என்று இவர்கள் நம் தலை மீது சுமத்துகிறார்கள். அவரே தன்னை தலித்துக்களின் தலைவர் என்று சொல்லிக்கொள்வது இல்லை. அவர் தமிழ் சமூகத்தின் தானை தலைவர். 

#நீங்கள் ஏன் மக்களிடம் போகக் கூடாது?#

நான் எப்போ காட்டுக்கு போனேன். மக்களோடுதானே இருக்கிறேன். 

#மக்கள் சரியானவர்களை தேர்ந்தெடுக்க வில்லை என்று உங்களுக்கு தோன்றினால் மக்களிடம் போங்கள். மக்களிடம் மற்றத்தை கொண்டு வாருங்கள். மக்களை தெளிவு படுத்தி சரியான பிரதிநிதிய தெரிந்தெடுக்க வையுங்கள். அதை விட்டு விட்டு ஆயுதம் காட்டி உங்கள் வழியை மக்கள் மீது திணிக்காதீர்கள்.#


அண்ணே மேலே உள்ள கருத்து என்னது இல்லை. ஐயா (அண்ணல் அம்பேத்கர்) கிட்ட வாங்கியது. அத என் இஸ்டைலில் சொல்கிறேன். அவ்வளவுதான். இப்ப ஐயான்னு அண்ணலை சொல்றேன். பாருங்க நமக்கு அமெரிக்கவுல இருந்து எதிர்ப்பு வரும். 


#முகனூலில் முகம் காட்டினால் போதுமா?#

முக நூலில்தான் முகம் காட்டுவதில்லை மக்களிடம் முகத்தை காட்டிக்கொண்டுதான்  இருக்கிறேன்.

உங்கள் முகம் எங்களுக்கு தெரிய வேணாமா அண்ணா?

முக நூலை மூடி விட்டு வெளியே மக்களோடு மக்களா வாங்க. என்னையும் பார்க்கலாம். 


அம்மா ராமதாஸ தைரியமா பிடிச்சி உள்ள போடுது. வன்னியர் ஒட்டு கிடைக்கலன்னா கூட பரவாயில்ல சட்ட ஒழுங்கு முக்கியம் (தலித்) மக்கள் பாதுகாப்பு அவசியம் என்கிறது. ஆனால் தேர்தலில் அம்மா கூட கூட்டணி வைக்க திராவிட கொள்கை ஈழ இழவு கொள்கை தடுக்குதாம். அம்மா செய்தது தவறு. தவறுகள் இரண்டு தரப்பினரிடமும் உள்ளது ராமதாசை உள்ள போட்டது தப்பு. மறைமுகமா திருமாவையும் உள்ள போட்டு இருக்கனும்னு தாத்தா சொல்லுவாராம். அப்படி சொன்னாலும் அவர் தலித் மக்களுக்கு எதிராக நடந்து கொண்டாலும் குப்பை மேட்டில் தூக்கி வீசி இருந்தாலும். திராவிட கொள்கைக்கா ஈழ விடுதலைக்காக அண்ணான் தாத்தாவின் அன்பு தம்பியாக தி மு க விலேயே இருப்பாராம். 

அரசியலில் நமக்கு யாரும் நண்பர்கள் இல்லை. எல்லோரும் எதிரிகள்தான். எதிரியின் நன்பன் நமக்கு நண்பன்னு நினச்சிக்கிட்டு மாறி மாறி போயிட்டு இருக்கணும் அதான் அரசியல். நான் காலத்துக்கும் பண்ணையார் கிட்டேயே ஒட்டிக்கிட்டு இருப்பேன் என்பது தலித் அரசியல் அல்ல அது பண்ணை அடிமை அரசியல்.

மறைமுகமா இல்லை. வெளிப்படியாதான் இருக்காரு. இன்னைக்கும் அவர் தி மு க உறுப்பினர்தான்.


அவர் பழசை எப்போது மறக்க மாட்டார். நன்றி விசுவாசத்தோடு காலமெல்லாம் பனி செய்து கிடப்பார். 

சும்மா மாத்தி போட்டேன். எப்படி போட்டாலும் லாஜிக் உதிக்கும். லாஜிக்கெல்லாம். பாக்காம அரசியல் பண்ணனும். அதான் பி எஸ் பி யின் தலித் அரசியல்.

நமக்கு எதிரி. எதிரிக்கு எதிரி. நமக்கு நண்பன். - லாஜிக் உதைக்கும் பாருங்க. 


நான் பி எஸ் பி இல்லை. ஆனா நான் பி எஸ் பி மாதிரி. லாஜிக் உதைக்கும் பாருங்க. 

நான் விசு மாதிரி, ஆனா அவ்வளவு கிறுக்கு இல்லை. 

No comments:

Post a Comment