Thursday, June 13, 2013

உங்க மனுஷ்ய புத்திரன் ஸ்டேட்டஸ்சுக்கு லைக் கொடுக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். நீங்களே அந்த ஆளை பெரிய ஆளா ஆக்கிடுவீங்க போல இருக்கு. 

உணர்ச்சி வசப்பட்டு  நாம அதை எல்லாம் செய்துட்டு நான் பச்சை தமிழன் சிவப்பு தமிழன்னு சொல்லி சுத்திட்டு இருந்தாதானே அவுங்க ஏரியா காலியா இருக்கும் கோல் போட்டுக்கிட்டே இருப்பாங்க. 

போரில் ராம‌னிட‌ம் தோற்கிறான் ராவ‌ண‌‌ன் ...
க‌ற்பில் ராவ‌ண‌‌னிட‌ம் தோற்கிறான் ராம‌ன் ... :)
 

கற்பில் என்பதற்கு பதில் ஒழுக்கம் என்று போட்டு இருக்கலாம். 


#எங்க பள்ளிக்கு ஒரு முறை வந்த பேராசியரை நாங்க சேரி மக்கள் என்று தெரிந்து எங்கள்ளுக்கு அம்பெத்கரை பற்றியும் அவர் தமிழுக்கு செய்த இவ்வாறு ஆதரவு தந்து பேசியதயும் ஆனால் இன்று இந்த தமிழ் நாட்டில் தான் அதிகமாக் சிதைக்க படுகிறார் என்றும் மனம் வருந்தி சொன்னது இது.... எனக்கு அம்பெத்கார் அறிமுகமானதும் அப்போதுதான்...#

யாராச்சும் யதாச்சும் சொன்னா அப்படியே நம்பிடறதா? அண்ணல் உண்மையில் அப்படி சொன்னாரா என்று கிராஸ் செக் எல்லாம் பண்ண மாட்டீங்களா? 

அண்ணல் சொன்னாரு அண்ணல் சொன்னருன்னுதான் நிறைய விஷயங்களை சொல்லி திராவிட தமிழ் தேசிய கோட்டங்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றன. 


ஊழ் வினையால் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் அவதாரங்கள் வேறு மீண்டும் பிறவா நிலையை நிலையை அடைந்த புத்தர் வேறு. கடவுள், இறைவன், தேவாதி தேவன், சிவன், கிருஷ்ணன், கண்ணன், வேலன், கார்த்திகேயன், முருகன், ராமன், ராவணன் என்பதெல்லாம் புத்தனின் பெயர்கள்.


ஆரியர் வருவதற்கு முன்னர் தமிழ் பேசப்பட்டது என்று அண்ணல் சொல்கிறார். அதுக்கு முன்னால சாக்கியம் எனம் பாலி பேசப்பட்டது என்று பண்டிதர் சொல்கிறார். ஆரியர் வருவதற்கு முன்னர் தமிழ் பேசப்பட்டது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் தமிழ் தோன்றுவதற்கு முன்னர் நமது மூதாதையர் பேசிய மொழி பாலி என்கிறார் பண்டிதர். 

No comments:

Post a Comment