Saturday, June 1, 2013

சிங்களம் பேசும் பவுத்தர்களும் தமிழ் பேசும் பறையர்களும் பூர்வீக சாக்கிய குடிகளே.  இலங்கை சாக்கியர்களின் நாடு என்று நான் இப்ப ஒன்னும் புதுசா சொல்லல 100 வருஷத்துக்கு முன்ன என் முப்பாட்டன் பண்டிதர் அயோத்திதாசர் சொல்லிட்டு போயிருக்கார். 

அயோத்திதாச பண்டிதர், "சமஸ்கிருதத்தில் எழுதியுள்ள வால்மீகி ராமாயணம் சந்தரகாண்டம் பதினைந்தாவது அத்தியாயம் பதினைந்தாவது வாக்கியத்தில் கூறியுள்ளவை யாதெனில்; அனுமாரானவர் இலங்கா தீவிற்கு சென்று சீதாபிராட்டியை எங்கும் தேடிக்காணாமல் ஆரன்னியத்தில் உள்ள ஊர் கோபுரத்தின் மீது உட்கார்ந்து இது பவுத்தர்களின் சிறப்பு பெற்ற மடமென்று கூறியதாக வரைந்திருக்கின்றது. அனுமாரின் வாக்கியத்தைக்கொண்டே அக்து பவுத்தர்களின் நாடென்றே வாசித்துணர்ந்த அருணாசலக் கவிராயர்கள் தான் இயற்றியுள்ள ராம நாடகத்தில் சுந்தர காண்ட செய்யுளில்,
"நிறை தவச்சுக்கு குறை யிவரென்று / 
நினைந்து கைவிடுவாரோ /
பறையர் ஊரிலே சிறையிருந்த வெண்ணை/
பரிந்து கை தொடுவாரோ"
எனுஞ் செய்யுளாதரத்தில் பவுத்தர்களை பறையர்கள் என்று கூறியுள்ளார் என அறியலாம். (அயோத்திதாசர் சிந்தனைகள - I, பக்கம் 590). 

No comments:

Post a Comment