Sunday, June 2, 2013

#தாய்மொழியில் படிப்பதால் சிந்திக்கும் திறன் வளர்கிறது என்பது உண்மையே.# 

பாலன் நீங்க சொல்ற மத்தது எல்லாம் உண்மைதான். இதை மட்டும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க? தமிழை மட்டும் படித்து இருந்தா எனக்கு இருக்கும் சிந்திக்கும் திறனும் போய் புலி வேஷம் போட்டுக்கொண்டு ஜாதி இந்துக்களுக்கு ஜாலரா போட்டுக்கொண்டு இருந்து இருப்பேன். என் சிந்திக்கும் ஆற்றலை வளர்த்தது அண்ணலின் எழுத்துக்களே அவை அனைத்தும் ஆங்கிலத்தில் படித்தது. 

அண்ணல் சித்தார்த்தா கல்வி அறக்கட்டளை ஆரம்பித்து கல்லூரிகள் ஆரம்பித்தபோது. இந்த கல்வி நிலையங்களில் ஆங்கில வழியிலே பாடங்கள் இருக்கும் என்கிறார். ஆங்கில வழி கல்வி நமது விடுதலைக்கு அவசியம் என்கிறார்.

#ஆனால், உங்கள் அருந்ததிய ஆதரவு நிலைத்தகவல்கள் என்பது நேரடியாக அருந்தியர் உரிமை கோருவதாக அல்லாமல்..தமிழ்த்தேசியத்தின் பெயரால் சாதிவெறிக்கு எதிராக துணிச்சலாக குரல் எழுப்ப முடியாத so called 'தமிழ்த் தேசிய ஆளுமைகளுக்கு’ முட்டுக் கொடுக்கவே உங்கள் கருத்து பகிர்வுகள் பயன்படுகின்றன....அதுவே உங்கள் நோக்கமென்பதையும் நாங்கள் அறிவோம்...#

வெல் செட் மகிழ் திராவிடம் எப்படி திரா விஷத்தை கக்குகிறது என்று அருமையாக விளங்கி விளக்கி இருக்கீங்க. நன்றி. ஜெய் பீம். 

தினம் தினம் என்னை ஒடுக்கும் எனக்கு எதிராக வன்கொடுமைகள் செய்யும் ஜாதி வெறி பிடித்த வன்னியன் தமிழ் பேசுரதனாலே  உனக்கு உறவு எனும்போது. ஆயிரம் ஆண்டுகள் ஜாதி வெறியர்களிடம் மத வெறியர்களிடம் போராடி புத்ததம்ம சாசனத்தை அதை சார்ந்த தம்ம கலாச்சாரத்தை காத்து எனக்கு திருப்பி கொடுத்த சிங்களம் பேசும் பவுத்தன் எனக்கு உறவுதான். 

#Don Ashok : "நாசமாப் போ.. கட்டைல போ.. பாடைல போ" என்றெல்லாம் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு முகநூலில் போஸ்டர் அடிக்கத் துவங்கியிருக்கும் பிணத்திற்காக ஏங்கும் கழுதைப் புலிகளுக்கு....#


கருணாநிதியின் ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் இந்த மனிதம் அற்ற கொலை வெறி பிடித்து அலையும் கழுதை புலிகளுக்கு மானுடத்தை சொல்லிக்கொண்டுக்க வேண்டி இருக்கிறது. அவரும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். முதுமையின்  வலியும் மரணத்தின் வலியும் இல்லாமல் அவர் வாழ வாழ்த்துக்கள். புத்தனின் அன்பு கருனை அவருக்கு துணை இருக்கட்டும். 

No comments:

Post a Comment