Saturday, June 8, 2013

#ஜெய் பீம் சொன்னாதான் ஒத்துப்பீன்களோ.#

ஜெய் பீம் என்பது தலித் மக்களின் அடிப்படை தாரக மந்திரம். உரிமைக்குரல். அதைக்கூட சொல்ல முடியாதவர்கள் தலித் இயக்கத்தை வழி நடத்தவோ காக்கவோ சீர் தூக்கவோ முடியாது. ஜெய் பீம்ன்னு சொன்னா அண்ணன் வாயில் இருக்கும் முத்து சிந்திடுமா என்ன?

#அண்ண! நீங்க இந்த கருத்த பதிவு செய்ய அடிப்படை நோக்கம் என்ன? சாதி மறுப்பு திருமணம் கூடாது என்பதா இல்ல வேரு எதாவதா ??????????#

அது இன்னாப்பா ஜாதி மறுப்பு திருமணம். வன்னியச்சிய கல்யாணம் பண்ணி கவுண்டன் கவுண்டன் குடியிருப்பில் குடியேரி வன்னியச்சியை கவுண்டச்சி ஆக்குவதா? செட்டியை கல்யாணம் பண்ணி நாயக்கன் செட்டி பெண்ணை நாயக்கன் குடியிருப்புக்கு கொண்டு போயி நாயக பெண்ணா ஆக்குவதா? சும்மா ஜாதி ஒழி ஜாடி ஒழிப்ப்புன்னு திராவிட கூட்டம் தமாஷ் பண்ணிக்கிட்டு இருக்கு, நாம சமூகத்தில் இருக்கும் சில பன்றிகள் இருக்கிற வேலையை எல்லாம் உட்டுட்டு வெள்ளை தோலை பார்த்துக்கொண்டு லோ லோ என்று அல்யுதுங்க. கேட்டா ஜாதிய ஒழிக்க காதல் பன்றான்கலாம். பண்ணிட்டு அதுல பெருமை வான்னிய பொன்னை பிடிச்சிட்டேன் என்று. சில தடிமாடுகள் நீ வன்னியாச்சி இப்ப நான் பறையன் சொல்றதைதான் கேக்கனும்னு எக்காலம் வேற.  கல்யணம் பண்ணிட்டு போய் ஜாதி இந்து தெருவில் குடியேற வேண்டியதுதானே எதுக்கு வந்து சேரிய நாசம் பண்றீங்க. ஒரு சில பன்றிகள் செய்யும் இந்த வேலையால் அந்த ஜாதி வெறி பிடிச்ச நாய்கள் வந்து சேரிய கொளுத்துது. இவுங்களுக்கு ஆசை வந்தா  சேரிக்கு வந்து குடியேருவாங்க ஆசை முடிஞ்சவுடன் டாட்டா காட்டிட்டு ஊருக்கு திரும்பி போயிடுவானாக. என்ன புரட்சிடா உங்க புரட்சி. காதல் செய்யாதீங்க கத்திரிகா செய்யாதீங்க வன்னியச்சிய தேவச்சிய கல்யானம் பண்ணாதீங்கன்னு சொல்லல. பண்ணிட்டு அப்படியே ஓடி போங்க வந்து எங்க உயிரை வாங்காதீங்க. அதான் தமிழனா திராவிடனா  டிரேட் மார்க் வாங்கிட்டீங்க இல்ல அப்புறம் என்ன? ஆசை பட்டு கொழுப்பெடுத்து காதல் காமம் எல்லாம் பண்ணுறது ஆப்புறம் அதுக்கு புரட்சின்னு லேபல் குத்துறது. வன்னியச்சிய கல்யானம் பண்ணவுடன் எதோ ஐ எ எஸ் அதிகாரியா ஆகி சேரிகுள்ள அரசு வாகனத்தில் வந்து இறங்குற மாதிரி ஒரு திமிர். ஏண்டா வெண்ணைகளா நம்ம சமூகத்தில் உங்களுக்கு சமமான பொண்ணுகளே இல்லையா. ஒரு பத்து இருபது வருஷத்துக்கு முன்ன ஆம்பளை மட்டும் படிச்சான் படிச்ச பொண்ணுக இல்லைன்னு பாப்பாத்திகளை புடிச்சி கல்யணம் பண்ணான். இப்பத்தான் நம்ம சமூகத்தில் பெண்கள் படிக்க ஆரம்பிச்சிட்டாங்களே. அப்புறம் எதுக்குடா சூத்திர பொண்ணுங்க பின்னால லோ லோ ன்னு அலையிறீங்க. படிச்சி பட்டம் வாங்கி அல்லது பெரிய தொழில் அதிபரா ஆகி இளையாராஜா ரஞ்சித் மாதிரி திரை துறையில் சாதனை பண்ணி நமது சமூகத்துக்கு பெருமை சேருங்கள் காதல் கதிரிக்கான்னு உன் சொந்த பிரச்சனையை சமூக பிரச்சனை ஆக்கி சமூகத்தை பாழ் பண்ணாதே அடுத்த ஜெநெரேஷனை உருப்பட விடு. (தம்பி பதில் உங்களை நோக்கியது அல்ல)


அண்ணன் தனி மனிதன் இல்லை அரசியல் கட்சியின் தலைவர். அவர் ஏன் ஜெய் பீம் என்று சொல்ல மறுக்கிறார் என்று கேட்பதற்கும் அவர்ஏன் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று கேட்பதற்கும் வித்தியாசம் உள்ளது. 


ஒரு நாயக்கர் பொன்னை புடிச்சி கல்யானம் பண்ணவுடன் இவர் மனசுல ராமசாமி நாயக்கர் நாயகன் வேலு நாயக்கர் மாதிரு ஒரு நினைப்பு உடனே நாலு  பேருக்கு நன்மை செய்யணும்னா என்ன வேணும்னாலும் செய்யலாம்னு பண்ணியார் மாதிரி ஆகி. நானும் தலித் மக்களுக்கு வேலை செய்கிறேன்னு மாடி மேல நின்னுக்கிட்டு நமக்கு படி அளக்கிற சாமி மாதிரி பேசிட்டு இருப்பார். இதுங்க நாம பறையன் தலித்துன்னு கேவலாமா இருக்கிர மாதிரியும் இவுக பறையன் தலித் இந்த அடையளத்தை எல்லாம் விட்டுட்டு பெரிய ஜாதிய (திராவிடன் தமிழன்னு) ஆயிட்ட மாதிரி ஒரு நினைப்பு. இந்த காம்ப்ளெக்ஸ் புடிச்ச்சதுங்கத்தான்  நம்மகிட்ட வந்து பறையன்ணு  ஏன் சொல்ற தலித்துன்னு ஏன் சொல்ற ன்னு கேள்வி கேக்குதுங்க. 

காதலிச்சியா? வன்னியச்சிய நாயக்கச்சிய கல்யாணம் பண்ணியா? அது உன் தனிப்பட்ட பிரச்சனை பண்ணிட்டு மூடிக்கினு வீட்ல இரு. அதை உட்டுட்டு ஜாதிய ஒழிக்க பண்ணேன் பறையர் பட்டத்தை ஒழிக்க பண்ணேன்னு சூத்திர திராவிட பேசாதே. பறையன் என்பது அசிங்கம் அல்ல அது எமது அடையாளம். ஆயிரம் ஆண்டுகள் எமது மூதாதையார் ஜாதி  வருணம் எனும் அசிங்கதுக்குள் போகாமல் எமது சமூகத்தை காத்ததின்  அடியாளம் அப்படி அவர்கள் காக்காமல் இருந்து இருந்தால் இன்று புத்தரையும் பண்டிதரையும்  போதிசத்துவர்  அண்ணல் அம்பேத்கரையும் எமது சமூகம் அடையாளம் காணமல் புலி வாலை பிடித்துக்கொண்டும்  நாத்திக ராமசாமி நாத்தத்தையும் மோந்து கொண்டு இருந்து இருக்கும். 


சேரிகளில் பிறந்து விட்டு சேரி தலைமயில் ஜாதி இந்துக்களை ஒருங்கினைப்போம் என்று சொல்லாமல் சூத்திர  புலியை சேரிக்கு  தேசிய தலைவர் ஆக்குவது சரியா? 


சின்னா ஜெய் பீம் சொல்றவர்தான் ஆனால் அவர் அண்ணா ஜெய் பீம் சொல்ல மாற்றார். 


ராஜபக்சேவை போற்ற சொல்லவில்லை அண்ணல் போற்றிய புத்தரைத்தான் ராஜபக்ஷேவும் போற்றுகிறார். எனவே ராஜபக்ஷே போற்றும் புத்தரை நாமும் போற்றுவோம் என்கிறோம். ராஜ்பெக்ஷேவுக்கும் நமக்கும் பொதுவானவர் புத்தர் என்கிறோம். 


ஆயிரம் வருஷம் தமிழால் நாம் இனையவில்லை இன்னும்  ஆயிரம் வருஷம் தமிழ் பேசிட்டு இருந்தாலும் நாம் இணையப்போவது இல்லை. அண்ணல் அம்பேத்கர்  நம்மை இணைக்கிறார் ஜெய் பீம் எனும் மந்திரம் நம்மை இணைக்கிறது. நாடு தேசம் மொழி இனம் கடந்த ஒரு பாச உணர்வு நம்மை நமது உறவுகலோடு இணைக்கிறது. ஜெய் பீம் என்று சொல்லிப்பாருங்கள். அந்த உணர்வு உங்களுக்கு புரியும். மொழியே தெரியாத பிரதேசங்களில் வெரும் ஜெய் பீம் எனும் வார்த்தையில் எமது உணர்வுகளை பகிர்ந்து கொண்ட நிகழ்வுகள் உண்டு. 


இரண்டு பேரும் வீழ்ந்து வணங்கியவர்கள்  பகவான் புத்தர் என்பது பொய்யா? இந்த விஷயத்தில் இருவரும் சமம்தான். 

No comments:

Post a Comment