Monday, June 3, 2013

அறியாமையை அகற்றி அறிவை பெருக்க ஆசைபடு. துன்பத்தை நீக்கி மகிழ்ச்சியாக இருக்க ஆசை படு. பிறப்பு இறப்பு எனும் ஊழ் வினை சக்கரத்தில் இருந்து விடுபட்டு நிப்பான நிலையை அடைய ஆசை படு அதற்க்கான முயற்சியை செய் என்பதே புத்தர் காட்டிய வழி. வாழும் வாழக்கைக்கு பொருள் ஈட்டாதே என்று சொல்லவில்லை நல்ல வழியில் பொருள்தேடு என்கிறார். அறியமையை  அகற்று என்கிற புத்தரின் தத்துவத்தை மறைத்து அது துறவிகளின் தத்துவம் புத்தர் எல்லாவற்றையும் துறக்க சொன்னார் ஆசையே படக்கூடாது என்று சொன்னார் என்று அதை விரக்தியின் தத்துவமாக காட்டி அதை மக்களின் வாழ்வியலில் இருந்து பிரிக்க கற்பிக்கப்பட்ட கருத்தே "புத்தர் ஆசையே துன்பத்துக்கு கரணம் என்றார். புத்தர் ஆசை படதே என்றார்" எனும் பொய் பிரச்சாரங்கள். 

No comments:

Post a Comment