Friday, June 28, 2013

சாக்கியர்கள் எப்படி தீண்டதகாதவரா ஆனார்கள் என்று  பண்டிதர் அண்ணல் அம்பேத்கர் எழுதிய வரலாற்றை படித்தவர்களுக்கு  நான் என்ன சொல்கிறேன் என்று புரியும். தீண்டத்தகாத  மக்கள் தீண்டா மக்கள் ஆக காரணம் அவர்கள் பேசிய மொழியோ இனமோ அல்ல அவர்கள்  சாக்கியத்தின் பக்கம் இருந்ததால் என்று அண்ணல் அம்பேத்கர் சொல்கிறார். பூர்வ சாக்கிய குடிகளே இன்றைய தீண்டா குடிகள் என்கிறார். எங்க வரலாற்றை எங்க அடையாளத்தை நாங்க சொல்லிட்டு இருக்கோம். மத்தவங்க நாங்களும் சாக்கியர்கள்தான் என்று சொல்லும் காலம் வரும் பொறுமையா வரலாற்றை அனுபவியுங்கள். இப்பத்தான் நாங்க எங்க வரலாற்றை திருப்பி பாக்குறோம். அதுக்குள்ளே எவ்வளவு எதிரப்பு பாருங்கள். நாங்களும் சாக்கியர்கள்தான் என்று சொல்லிக்கொண்டு யார் வந்தாலும் சாக்கியம் அவர்களை வா வா என்று வரவேற்கும். 

#பண்புக்கும் மொழிக்கும் என்ன சம்பந்தம். ஒரு குறிப்பிட்ட பண்புள்ளவன் ஒரு குறிப்பிட்ட மொழிதான் பேசுவானா ? #

மாற்றம் தானா வரும் அது இயற்க்கை. இன்னைக்கு தமிழ் நாளைக்கு ஆங்கிலம். அப்புறம் வேற எதாச்சும் வரும் சாக்கியம் எங்கள் மொழி அடையாளம் இல்லை அது எங்கள் பண்பின் அடையாளம். எங்கள் கருத்து கொள்கை கோட்பாட்டின் அடையாளம். 

மூணாவது வரிய படிக்கும்போது முதல் இரண்டு வரிகள் மறந்துடுதுன்னு நினைக்கிறேன்.  


No comments:

Post a Comment