Wednesday, June 12, 2013

சிங்களவர்கள் மட்டும்  அல்ல பார்ப்பனர் உட்பட்ட தமிழர்களும் உறவுகள்தான். எல்லா மனிதர்களும் உறவுகள்தான் என்பது புத்த தம்மம். இலங்கை பவுத்தருக்கும்  இந்திய பவுத்தருக்கும் உள்ள உறவு என்பது புத்தம் எனும் கொள்கை அடிப்படையில் ஆனது. குடும்ப உறவுகளில் கூட நன்பன் யார் எதிரி யார் என்று நிர்ணயிப்பது நம்முடைய கருத்துக்களும் கொள்கைகளும்தான். நான் இங்கு கேட்பது சிங்களம் பேசும் பவுத்தர்களை கொள்கை ரீதியாக எதிரிகளாக காட்டுவதும் தமிழ் பேசும் இந்துக்களை நண்பர்களாக காட்டுவதற்கும் அடிப்பட என்ன? சண்ட சிங்களவர்க்கும்  தமிழருக்குமா? இந்துக்களுக்கும் பவுதர்களுக்குமா? இஸ்லாமியர்கள் தமிழர்களா இல்லையா? என்று கேட்டுக்கொண்டே போகலாம். இங்கு நாம் விவாதிப்பது, அண்ணலின் கொள்கைகளை கடைபிடித்து பவுத்தர்களை தனது உறவு என்று கொண்டு  இருந்த விடுதலை செழியன் திருமாவின் கொள்கைகளை கடைபிடிக்க ஆரம்பித்த பிறகு அதை மாற்றிக்கொண்டு பவுத்தர்கள் நமக்கு எதிரிகள் தமிழர் நமக்கு உறவுகள் என்று சிந்திகிக்க ஆரம்பித்துவீடார் என்று திருமா சொல்கிறார். என்னுடைய கேள்வி கொள்கை ரீதியா தமிழர்கள் எப்படி நண்பர்கள் / உறவுகள் பவுத்தர்கள் எப்படி எதிரிகள். 

#மாயாவதி அவர்கள் இந்தியாவின் பிரதமர் ஆகி விட்டால் இந்தியாவுக்கும் சிங்களவருக்குமான பிரச்சனைகளில் இந்தியர் பக்கம்தான் நிற்பார். நிற்க முடியும். எந்த சூழலிலும் 'தொப்புள் கோடி உறவெல்லாம்' கொண்டாடிக்கொண்டு இருக்க முடியாது.#

அரசு ஊழியர் ஆக இருக்கும்போது அரசு எடுக்கும் முடிவுகளுக்கு  கட்டுப்படுவது 


உன் சாத்திரத்தை விட
உன் முன்னோரை விட
உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட
உன் அறிவு பெரிது, அதை சிந்தி - ராமசாமி 

அறிவை பேசும் அவர் நாத்தீகம் அறிவு என்று சொன்னதும் அதையே சாஸ்திரம் வேதம் என்று சில வெங்காயங்கள் நம்புவதும்தான் தமாஷ். 

பகுத்தறிவு என்ற வார்த்தைக்கும் புத்தன் (புத்தி மான் / பகுத்தறிவாளன்) எனும் வார்த்தைய்க்கும் நேரடியாக தொர்பு உள்ளது. நாத்தீகம் எனும் வார்த்தை ராமசாமி கண்டு பிடித்தது இல்லை. நாத்தீகம் எப்படி பகுத்தறிவாகும். பகுத்தறிவோடு கடவுள் உண்டா என்று கேள்வி கேட்பதற்கும். கடவுள் இல்லை என்று நாத்தீகம் பேசுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பகுத்தறிவு என்பது சிந்திக்கும் ஆற்றல் நாத்தீகம் என்பது படைத்தவன் இல்லை எனும் நம்பிக்கை. உண்மையை உண்மை என்று பகுத்து அறியும் அறிவையும் நம்பிக்கையையும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். புத்தன் (பவுத்தன்) என்றால் பகுதரிவாலன். பகுதரிவளர்கள் (பவுத்தர்கள்) நாத்தீகர்கள் இல்லை. உண்டு இல்லை எனும் தேவை அற்ற வேதங்களுக்கு சாஸ்திரங்களுக்கு நம்பிக்கைகளுக்கு அப்பார்ப்பட்டவர்கள். 

#பெரியார் நாத்திகம் பேசிய அளவுக்கு பகுத்தரிவை பற்றியும் பேசியுளார்.#

நாத்தத்தை பேசிய அளவுக்கு பகுத்தறிவும்  பேசி இருக்கறா? அப்பா கூட்டி கழிச்சி கொஞ்சம் மார்க் போட்டுடுவோம். அவர் பேசிய பகுத்தறிவை பேசுங்கள். எதுக்கு நாத்தீக நாத்தத்தை பேசிக்கிட்டு. 

புரியரதுதான் தாய் மொழி. நீ தாய் வயித்துல இருக்கும்போதே கத்துக்கனதுதான்  உன் தாய் மொழின்றான். அப்புறமா புரியாத வார்த்தையை எல்லாம் சொல்லி கொடுத்து நீ தூய தூ தூ மொழி மூத்த மொழி மூத்திர மொழி என்கிறான். 



புரியரதுதான் தாய் மொழி. நீ தாய் வயித்துல இருக்கும்போதே கத்துக்கனதுதான்  உன் தாய் மொழின்றான். அப்புறமா புரியாத வார்த்தையை எல்லாம் சொல்லி கொடுத்து நீ தூய தூ தூ மொழி மூத்த மொழி மூத்திர மொழி என்கிறான். 

டீ, சப்பாத்தி, புரோட்டா, நூடுல்ஸ், கிச்சடி, கேக், சமோசா,  பாயசம், சாம்பார், பஜ்ஜி, பொறை, கேசரி, குருமா, ஐஸ்கிரீம், சோடா, ஜாங்கிரி - ரோஸ்மில்க், சட்னி, கூல்ட்ரிங்க்ஸ், பிஸ்கட், போண்டா, ஸர்பத், சோமாஸ், பப்ஸ், பன், ரோஸ்டு, லட்டு, புரூட் சாலட்.


இதுக்கெல்லாம் புரியாத வார்த்தைகளை போட்டு தூய தமிழ் என்றால் நான் என்ன பண்ணுவேன். ஏதாவது உருப்படியா வாழ்க்கையில் பண்ணுங்கடா? 

=====================

பார்பனன் ஆரியன் என்றால் பறையனும் ஆரியன். பறையன் திராவிடன் என்றால் பார்ப்பனனும் திராவிடன். 
என்று அண்ணல் சொன்னது அவர்கள் ரேஸை (இனத்தை) வைத்து அல்ல அவர்கள் மொழியை வைத்து. வட நாட்டில் உள்ள பறையர்கள்  சமஸ்கிருதம் சார்ந்த மொழி பேசுவதால் அவர்கள் ஆரியர்கள் என்றும் தென்னாட்டு பறையர்கள் தமிழ் பேசுவதால் திராவிடர்கள் என்றும் சொல்கிறார். பறையர்களின் அடையாளம் அவர்கள் ஆரியம் பேசுவதை வைத்தோ திராவிடம் பேசுவதை வைத்தோ அல்ல அவர்கள் அடையாளம் அவர்களுடைய கருத்தியலை கொள்கையை கோட்பாட்டை வைத்ததுதான் என்கிறார். பார்பனர்களுக்கும் பறையர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனை என்பது ஆரியத்துக்கும் திராவிடத்துக்கும் இடையிலான இன பிரச்சனை இல்லை. தமிழுக்கும் சமஸ்திருதுக்கும் இடையில் ஆன மொழி பிரச்சனை இல்லை. அது பார்ப்பணியத்துக்கும்  சாக்கியத்துக்கும் இடையில் ஆன கருத்தியல் பிரச்சனை என்கிறர். 

No comments:

Post a Comment