Monday, June 17, 2013

அண்ணல் அம்பேத்கர் தம்மத்தை ஏற்ற பிறகு மக்கள் தம்மத்தை பின் பற்ற வழி என்ன புத்த கலாச்சாரத்தை ஏற்க்க வழி என்ன என்று தேடிக்கொண்டு இருந்தார்கள். இலங்கை பவுத்தர்களுக்கு அண்ணல் வழியில் தம்மத்தை ஏற்ற சாக்கிய மக்களுக்கும் இடைய தமிழ் தேசியம் எனும் பெயரில் மிகப்பெரிய பிளவு. அந்த காலகட்டத்தில் ஒரு இயக்கம் ஒரு அமைப்பு அண்ணலின் வழியில் புத்தத்தை ஏற்ற மக்களோடு ஒருங்கிணைந்து பணியாற்றியது என்றால் அது வெஸ்டர்ன் ஆர்டர் புத்திஸ்ட் இயக்கம். அது முழுக்க முழுக்க சம்ஸ்கிருத இலக்கியங்களை அடிப்படையாக கொண்ட மகாயான இயக்கம். பவுத்தர்களுக்கும் பாலி மொழிக்கும் எவ்வளவு தொடர்பு உள்ளதோ அந்த அளவுக்கு பவுத்தர்களுக்கும் சமஸ்கிருதம் மொழிக்கும் தொடர்பு உண்டு. பவுத்தர்கள் சமஸ்கிருதம் மொழியில் பவுத்த இலக்கியங்களை எழுதும் முன்னாள் பார்ப்பனர்களால் எழுதப்பட்ட ஒரு இந்து இலக்கிய நூலை ஆதாரமாக காட்ட முடியுமா. இதே கேள்வி தமிழுக்கும் பொருந்தும் 
பவுத்தர்களான கலப்பரையர்கள் காலத்தில் எழுதப்பட்ட தம்ம (அற) இலக்கியங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு தமிழ் இலக்கிய நூலை சொல்ல முடியுமா? 

No comments:

Post a Comment