Sunday, June 9, 2013

ஜாதி ஒழிப்பு திருமணம் அண்ணல் சொன்னார். திராவிடம் அண்ணல் சொன்னார். தமிழ் தேசியம் அண்ணல் சொன்னார். நமது தாய் மொழி தமிழ் அண்ணல் சொனார்.  அண்ணல் சொன்னாரு அண்ணல் சொன்னாருன்னு சொல்றீங்களே எந்த அண்ணல்? 



வாழ அவுங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கோ பிரியவும் அவுங்களுக்கு உரிமை இருக்குப்பா. உங்க டார்ச்சர் தாங்காமத்தான் பிரஞ்சி போயிடிச்சி அந்த புள்ள. இப்ப வந்துடு வந்துடு ன்னு டார்ச்சர் பண்ணா எப்படி. கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்கப்பா. 

#அண்ணல் அகமண முறை குறித்து என்ன சொல்கிறார்?#

சும்மா கலப்பு திருமணம் சமபந்தி போஜனம்னு சீன் காட்டாதீங்க. அதெல்லாம் வேலைக்கு ஆகாது. மதம் மாற்றம் ஒன்றே சரியான வழி என்கிறார். 


அந்த புத்தகத்தின் தலைப்பை மட்டும் படிச்சிட்டு பேசக்கூடாது. முழுசா படிங்க. 




ஜாதியை ஒழிப்போம் எனும் தலைப்பில் மாநாடு நடத்திய இந்துக்களுக்கான உரை அது. அதில் கலப்பு திருமணமும் சம்பந்தி போஜனமும் பயன் தராது சாஸ்திரங்களில் உள்ள நம்பிக்கையை உடைத்தெரியுங்கள் என்கிறார். 



மதம் மாறிய பிறகு நாங்கள் பவுத்தர்கள். நேற்று ஒரு சகோதரர் எனக்கு மெசேஜ் போடுறார். அண்ணா நான் நம்ம பவுத்த பெண்னைத்தான் மணப்பேண். எனக்கு தமிழ் நாட்டில் பெண் கிடிக்காவிட்டால் நாக்பூரில் இருந்து கல்யாணம் பண்ணிக்கொண்டு வருவேன் என்று. 



மதம் மாற்றம் மூலம் இந்து மத நம்பிக்கையை அவன் மனதில் இருந்து உடைத்தெரி. அவன் மனதை தூய்மைப்படுத்து. அதன் பின் கலப்பு திருமணம் ஜாதி ஒழிப்பு திருமணம் என்று நீ சொல்லத்தேவை இல்லை அவனே செய்வான் என்பதே அண்ணலின் வழி. 



தனி மனித மதம் மாற்றம் இல்லை சமூக மத மாற்றம். மாதம் மாறிய பின்னர் பவுத்தர்கள் பவுத்தர்களையும் கிறிஸ்துவர்கள் கிறிஸ்துவர்களையும் திருமனம் செய்து கொள்ளலாம். அண்ணல் சொன்ன மத மாற்றம் பேப்பர் மதம் மற்றம் வெறும் பெயர் மற்றம் இல்லை. உண்மையான மத மாற்றம். மன மாற்றம். இந்து நம்பிக்கைகளை மனதில் இருந்து உடைத்து எரியும் மாற்றம். 

இந்து மதத்தில் தீண்டத்தகாதவனாகவே இருந்து கொண்டு சூத்திரப்பென்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டால் காதில் கொதி நீரைத்தான் ஊத்தி கொள்வார்கள். 


பேரை மட்டும் மாத்தினால் போதாது உண்மையான கிறிஸ்துவரா? 



உண்மையான கிறிஸ்துவர் என்றால் அவர் ஒரு உண்மையான் கிறிஸ்துவ பெண்ணை பார்த்து காதல் செய்து இருக்க வேண்டும் கல்யாணம் செய்து இருக்க வேண்டும். 

அதுதானே அவர்கள் மத நம்பிக்கை. ஒரு நான் பிளிவரை அவர் திருமணம் செய்ய அவர் மதம் ஒத்துக்காதே. 

No comments:

Post a Comment