Friday, June 28, 2013

நெஞ்சை நிமிர்த்தி நான் பறையன் நான் பறைச்சி என்று சொல்ல வக்கு அற்றவர்கள் எப்படி பறையர் சமூகத்துக்கு தலைமை ஏற்க்க முடியும். எப்படி இந்த சமூகத்தை முன்னுக்கு கொண்டு வரமுடியும் என்று 100 வருசத்துக்கு முன்னர் தாத்தா இரட்டை மலை பறையனார் கேட்டார். அதைத்தான் இன்னைக்கு நாம் கேக்குறோம். முதலில் நெஞ்சை நிமிர்த்தி நான் பறையன் நான் பறைச்சி என்று சொல்ல கற்றுக்கொள். அப்புறமா எனக்கு தலைமை ஏற்க்க வா. கூனி குறுகி ஜாதி இந்துக்களுக்கு ஜால்ரா அடிக்கும் கூட்டம் எமக்கு தலைமை ஏற்க்க முடியாது. 



தர்மபுரியில் நம்ம வீடுகளை கொளுத்தினவங்க. வன்னியர் இனமா திராவிட இனமா தமிழர் இனமா? அவுங்க எல்லாம் நம்ம உறவுகளா? சொந்தங்களா? ரத்தங்களா? 


மாற்றம் தானா வரும் அது இயற்க்கை. இன்னைக்கு தமிழ் நாளைக்கு ஆங்கிலம். அப்புறம் வேற எதாச்சும் வரும் சாக்கியம் எங்கள் மொழி அடையாளம் இல்லை அது எங்கள் பண்பின் அடையாளம். எங்கள் கருத்து கொள்கை கோட்பாட்டின் அடையாளம். அண்ணன் தம்பி இரண்டு பேரு கூட கருத்து ஒத்து போகலைனா ஒண்ணா இருக்க முடியாது. அது போலத்தான் தத்துவமும். சாக்கியமும் அதற்க்கு எதிரான தத்துவங்களுக்கும் இடையே நடக்கும் போரில் நாங்கள் சாக்கியத்தின் பக்கம். அதனால் நாங்கள் சாக்கியர்கள். சாக்கியம் வெல்லும். சாக்கியர்கள் வெல்வார்கள். சாக்கியர்கள் ஆதியில் பாலி மொழியில் பேசியதால்  அது சாக்கிய நிருத்தியா (சாக்கியர்களின் மொழி) என்று அழைக்கப்பட்டது. 

No comments:

Post a Comment