Sunday, June 16, 2013

ச்சே சமத்துவத்துக்கு போராடினாராம். உனக்கும் சேவுக்கும் என்ன சமத்துவம். அப்புறம் அவருக்கு என்ன அவ்வளவு புகழாரம். இதுல என் கிட்ட வேற வந்து உனக்கு தகுதி இல்ல உனக்கு தகுதி இல்லன்னு சொல்லிட்டு இருக்கீங்க. தகுதி உள்ளவன் தலைவன் தகுதி இல்லாதவன் தொண்டன் அப்புறம் எப்படி சமதுவம் வரும். ரூம் போட்டு யோசிச்சி சொல்லுங்க. நீங்க சொல்ற அந்த சமத்துவம் பாசிபிலான்னு? 

பாரதிராஜா மணிவண்ணனை சாகடிச்சாராம். இப்பா இவுங்க எல்லோரும் சேர்ந்து செத்த மணிவன்னனுக்காக சாகப்போற பாரதிராஜாவை சாகடித்துக்கொண்டு இருக்கிறார்கள். விடுங்கப்பா.  

படைப்பு என்று ஒன்று இருந்தால் படைத்தவன் என்று ஒருவன் கண்டிப்பா இருப்பானாம். சரி உலகத்தை கடவுள் படைத்தான். கடவுளை யார் படைத்தான்.  

கடவுள் உலகத்தை படைத்தாராம். சரி உலகத்தை படைக்கும் முன்னர் கடவுள் எங்கே இருந்தார். கேட்டா நாம பயித்தியக்காரன். 

உலகத்தை கடவுள் படைக்கவில்லையாம். உலகம் அதுவா தோன்றியதாம். அப்ப கடவுள் அவரா தோன்றி உலகத்த அப்புறம் படச்சாருன்னு சொல்ற மாதிரியே இருக்கு. ஒண்ணுமே இல்லாம உலகம் எப்படி வந்துச்சி. கொஞ்சம் லாஜிக்க பேசுங்கப்பா.

கடவுள் மனுசன படைக்கவில்லையாம். மனுஷன் குரங்கில் இருந்து வந்தானாம். அப்படியே நேர்ல பாத்த மாதிரி எப்படி கரெக்டா சொல்றீங்க. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்ன உலகம் தோன்றியது மனிதன் தோன்றியதை எல்லாம் வீடியோ படம் எடுத்து வைத்து இருக்கிறீர்களா? இருந்தா அனுப்பி வையுங்க. எனக்கு ஒரு சந்தேகம் மனுஷன் குரங்கில் இருந்து வந்தானா? குரங்கு மனுஷனில் இருந்து வந்ததா? டார்வினுக்கே ஆப்பு வைப்போம் நாங்க. 

இந்த லூசுங்க பேச்சை கேட்டா நம்ம லூசா ஆயிடுவோம். ஆஸ்திகம் நாஸ்திகம். வேலைய பாருங்கடா வெண்ணைகளா. 

அறிவை வளர்ப்போம். உலகை வெல்வொம். 


மூளை இல்லாதவர்கள் அண்ணலை மூலையில் போடுகிறார்கள். 

No comments:

Post a Comment