Monday, June 3, 2013

#ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்கிறார் புத்தர்.#

 அப்படி புத்தர் சொன்னார் புத்தர் சொன்னாருன்னு சொல்லிட்டு இருக்காங்களா? இல்லை புத்தரே சொன்னாரா? அரை குறையா புத்தரை படிச்சிட்டு அவர் ஆசை பட கூடாதுன்னு சொன்னார் என்றால் என்ன அர்த்தம். துன்பத்துக்கு காரணம் ஆசை என்று புத்தர் சொல்லவில்லை. துன்பத்திற்கு மூல முதற் காரணம் அறியாமை என்கிறார். தனக்கு கிடைக்க கூடிய பொருள் மீது ஆசை பட்டு அதை அடைவது அறிவு. கிடைக்காத பொருளுக்கு ஆசை பட்டு அது கிடைக்கவில்லையே என்று துக்கபடுவது அறியாமை. ஆசையை விட்டால் துன்பம் போகாது. அறியாமை எனும் இருளை நீக்கி அறிவு எனும் அக ஒளி பெறுவதே துன்பத்தை நீக்கும் வழி. 



#ஆசை பாடமலிருக்க புத்தருக்கு ஆசை.#

இப்படிதான் அடுத்து சொல்வார்கள்ன்னு எனக்கு தெரியும். ஆசையை விட புத்தருக்கு ஆசை இல்லை. உலக துன்பத்தை நீக்க வழி கண்டுபிடிக்க சித்தார்த்தர் எனும் மனிதர் ஆசை பட்டர் அதை கண்டு பிடித்து புத்தர் ஆனார். 


ஒளி வராமல் இருள் நீங்காது. 

அறிவு வராமல் அறியாமை அகலாது. 

சூரிய ஒளித்தான் இருளை நீக்குகிறது என்பது விஞ்ஞானம். 

No comments:

Post a Comment