Tuesday, June 25, 2013

மார்கிஸியமும் புத்தமும் இணைய முடியாது. மார்க்சியத்தில் தனி மனித சமூக ஒழுக்கங்களுக்கு  இடம் இல்லை. அறம் ஒழுக்கம் தம்மம் என்பதெல்லாம் மார்க்ஸிய கொள்கைக்கு எதிரானவை. மார்க்சியத்தை பொறுத்தவரை இவை எல்லாம் ஆளும் வர்க்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கோட்பாடுகள். அது போல மார்க்ஸிய தத்துவம் சொல்லும் ரத்த புரட்சி பொது உடமை தத்துவத்தை மக்கள் மீது திணிப்பது தனி மனித உரிமைகளை பறிப்பது ஜன நாயகத்துக்கு எதிராக சர்வாதிகார கம்யுனிச அரசியல் அமைப்பை நிறுவுவது என்பதெல்லாம்  புத்தத்துக்கு எதிரானது.  இரண்டு வேறுபட்ட கோட்பாடுகளை இணைப்போம் என்பது குரங்கு கையில் பூமாலையை கொடுப்பது என்பது போல. அதனால ஒன்னு கம்யுனிசம் பேசுங்க இல்லை புத்தம் பேசுங்க. இரண்டையும் போட்டு குழப்ப வேண்டாம். ஒன்னு அந்த பக்கம் போங்க இல்லை இந்த பக்கம் வாங்க. 


#பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நாத்திகர்தான்.#
 
என்ன கொடுமை சார் இது. பிறக்கும் குழந்தை எப்படி சார் நாத்தீகராக பிறக்கும்? ஆத்தீகம் என்று ஒன்று இல்லாத காலத்தில் நாத்தீகம் என்று ஒன்று இருக்க அவசியமே இல்லையே. ஆத்தீகம் என்று ஒன்று உருவான பிறகு அதை எதிர்க்க உருவானதுதானே நாத்தீகம். குழந்தை வளர்ந்த பிறகு அது கடவுள் உண்டு என்று ஆத்தீகர்கள்  பேசுவதையும் அதை எதிப்பவர்கள் நாத்தீகம் பேசுவதையும்  கேட்டு அது மனதுக்கு ஆதிகம் சரி என்று பட்டால் ஆத்தீகராகவும் நாத்தீகம் சரி என்று பட்டால் நாத்தீகம் ஆகிறது. பிறக்கும் குழந்தை ஆத்திகம் நாத்தீகம் எனும் பேதங்கள் ஆற்று சுதந்திரமாக உள்ளது.  குழந்தையை சுதந்திரமா வாழ விடுங்கப்பா? உண்டு இல்லை எனும் உங்கள் கோட்பாடுகளை குழந்தைகள் மீது திணிக்காதீர்கள். 


###தீவிரவாதிகளுக்கு ஒரு வேண்டுகோள் : அப்பாவி மக்களை கொள்வதை விட்டுவிடுங்கள் .
# டேய் தைரியம் இருந்தா எங்க அரசியல் தலைவர்களை கொன்னு பாரா !! 
(உங்களுக்கு புண்ணியம்மா போகும் )#####


ராஜீவ் காந்தியை கொள்ளும்போது ஒரு அப்பாவி கூட இறக்கவில்லையே. 

#எல்லா தத்துவத்திலும் குரைகள் உண்டு மார்க்ஸியத்திலும் உண்டு என்பதை மறுப்பதர்க்கில்லை#

அண்ணல் அம்பேத்கர் தத்துவத்தில் என்ன குறை. புத்தத்தில் என்ன குறை. வாங்க வாதம் பண்ணுவோம். 

 
அண்ணல் அம்பேத்கர் ஜனநாயக வாதி மார்க்சிய வாதியோ பொது உடமை வாதியோ இல்லை. 

மார்க்சியத்தில் குறை உள்ளது.  அதனால் மார்க்சிய வாதிகளுக்கு அண்ணலும் புத்தரும் தேவை. அண்ணலின் தத்துவத்தில் புத்தரின் தம்மத்தில் குறை இல்லை எனவே நமக்கு மார்க்ஸ் தேவை இல்லை. 

 #எந்த முடிவு அண்ணா# 

நீங்கள் சொல்லும் : தனி மனித வாழ்க்கைக்கு பௌத்தமும் இன்றைக்கு நிலவும் முதலாளி துவ அரை காலனிய துவத்தை எதிர்பத்ர்க்கு மார்க்ஸியமும் நமக்கு தேவை இந்த இரண்டுமே ஒன்றோடோண்டு பினைந்துள்ளது. 


#யார் இல்லை என்று சொன்னார்கள்#

அண்ணலே சொல்கிறார். 


ராஜீவை கொன்னது தீவிரவதிகள். உலகமே சொல்லுது உங்க ஆட்கள்தான் கொன்னாங்கன்னு. 

பாண்டி சேரி. புது சேரி. இதெல்லாம் என்ன கெட்டவார்த்தையா? சென்னை கூட ஒரு காலத்தில் பெரிய பறை சேரி என்று அழைக்கப்பட்டது. வரலாறு சொல்லது. 

புத்தத்தில் எங்கே இருக்கு ஜாதி வித்தியாசம். 


இல்லைன்னு அவரே சொல்கிறார். 

புத்தத்திற்கு மாறிய பிறகு அவர்கள் பவுத்தர்கள். எப்படி இந்து மதத்தில் உள்ள  மத்த ஜாதியில்  ஆண் / பெண் எடுப்பார்கள் கொடுப்பார்கள். 

உங்களை யார் ஏற்றுக்கொள்ள சொன்னது. 

அதான் நானும் சொல்கிறேன். 

பரந்தாமன் என்பது என்ன மதம். 


பேசாம உங்க பெயரை 107 என்று மாதிக்கொளுங்களேன். 



இந்துவாகவே இருந்து கொண்டு புத்தத்தை நக்கல் அடிப்பீங்க. கேட்டா நான் மனித நேய மானுட விரும்பி எனக்கு மதம் இல்லை நான் ஆத்திக வாதி  நாத்தீக வாதின்னு சொல்லுவீங்க. எப்பா எப்பா எப்பப்பா. 




முதல்ல போயி உங்க கேள்விய எல்லாம் உங்க இந்து சகோதர்கள் கிட்ட கேளுங்க. அப்புறம் வந்து புத்தத்துக்கு நக்கல் அடிக்கலாம். 

#மதம் இல்லாத சமூகம் படைப்போம்.#

முதல்ல இந்து மதத்த ஒழிச்சிட்டு வாங்க. அப்புறமா புத்த மதத்த ஒழிச்சி மதம் இல்லாத சமூகம் படைப்போம். எதுக்கு பவுத்தர்களுக்கு உங்க போதனை. 

#மார்க்சியத்தில் குறை உண்டென்று ஒத்துக் கொள்வதுதான் மார்க்சியத்தில் உள்ள நிறை..#

வியாபாரிகளுக்கு தங்கள் பொருளை விக்க அப்படியெல்லாம் வியாபார தந்திரங்கள் அவசியம்.  எங்களுக்கு அப்படி எல்லாம் அவசியம் இல்லை. அப்படி எல்லாம் சொல்லி எங்களை நிறையாக்கி கொள்ள வேண்டிய வியாபாரம் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு  இல்லை. ஏக்கயோ மக்கோ (விடுதலைக்கான ஒரே வழி). நாங்கள் சொல்லுவது எல்லாம் வாருங்கள் வந்து பயன் பெறுங்கள். 

No comments:

Post a Comment