Sunday, June 16, 2013

#பிரதர் அண்ணல் ஏன் சமஸ்கிருதத்தை முன்மொழிந்தார் என்பதற்கு விளக்கம் கொடுங்க.. ஒரு வாரமா தேடிகிட்டு இருக்கேன்...#

எனது விளக்கம் (யூகம்னு கூட சொல்லலாம்)

சமஸ்கிருதம் தற்காலத்தில் பேச்சு மொழி அல்ல. அது இந்திய மொழி என்பதால் அதை பொது மொழியாக வைக்கும்போது அனைவரும் தனது முதல் மொழியுடன் இரண்டாம் மொழியாக சமஸ்கிருதம் படிப்பார்கள். இப்போது இந்தி பேசும் பெரும்பான்மை மக்களுக்கு "முதல் மொழியும்" "ஆட்சி (அலுவல்) மொழியும்" ஒன்றாக இருக்கு. தமிழ் பேசுபவர்களுக்கு "முதல் மொழி" தமிழாகவும் "ஆட்சி (அலுவல்) மொழி" இந்தியாகவும் இருக்கு. இந்த வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இரு மொழி கொள்கை மூலம் சமமாக இருந்து இருப்போம். 

மற்றவர்கள் சொல்லுவது போல சமஸ்கிருதம் பார்பனிய மொழி அல்ல. அது முழுக்க முழுக்க மகாயானா பவுத்தர்களால் உருவாக்கப்பட்ட மொழி. பாலி மற்றும் தமிழ் மொழிகளில் உள்ளதை விட அதிகமான பவுத்த இலக்கிய நூல்கள் சமஸ்கிருத மொழியில் உள்ளன. சமஸ்கிருதம் இலக்கிய இலக்கனங்கள் மிகுந்த பொக்கிஷம் என்று அண்ணல் அறிந்து இருந்தார். பாலி நமது பூர்வீக மொழியாக இருந்தாலும் சமஸ்கிருதம் பிற்காலத்தில் தம்மம் வளர பரவ மிகவும் பயன்பட்டது. அது பவுத்த தத்துவ ஞானிகளின் சிந்தனையாளர்களின் அறிவு சுரங்கமாக இருந்தது. சமஸ்கிருதம் புத்த நாலந்தா வளர்த்த மொழி அது.  

இதையெல்லாம் விட மிகப்பெரிய அரசியல். பார்ப்பனியத்துக்கு மிகப்பெரிய சாட்டை அடி. எந்த மொழியை பார்பனர்களை தவிர மற்றவர்கள் கருக்கொள்ளக் கூடாது என்று மத தடை விதித்து இருந்தனோரோ அந்த மொழியயை நாட்டு மக்கள் அனைவரையும் ஜாதி மத வர்ண பாகுபாடு இன்றி படிக்க வைத்து. பார்பணிய நமபிக்கையை சுக்கு நூறாக்கும் மிகப்பெரிய ராஜ தந்திரம். சமஸ்கிருத அறிவு இல்லாததனால்தான் பார்ப்பனன் எழுதிய அசிங்கங்களை எல்லாம் அறிந்து அவனை வீதிக்கு இழுக்கும் சக்தி அற்று மக்கள் உள்ளனர். மக்கள் அந்த மொழியை அறிந்தால் அனைத்து பார்ப்பனிய வண்டவாலங்களும் வீதிக்கு வரும் என்று அண்ணலுக்கு தெரியும். 



---------------------------
#நீங்கள் எந்த கேல்விக்கும் பதிலலிக்காமல் தொடர்ந்து விமர்சனம் மட்டுமே செய்வது. பிராமணர்கள்,காந்தி DR.ய் எதிர்க்கும்போது கையாண்ட யுத்தியை ஒத்தது.#

உங்களுக்கு பதில் சொல்லனும்னா ஒரு வார்த்தைக்கு 10$. சம்மதமா? 

No comments:

Post a Comment