Tuesday, June 4, 2013

#‘சிங்களவனுக்கு வக்காலத்து வாங்கல பவுத்தர்களுக்கு வக்காலத்து வாங்குறேன்.‘ நல்லது. ஆனால், இலங்கையில் ‘சிங்கள தேரவாத பௌத்தம்‘ என ஒன்றுதான் உருவாகி வருகிறது. அதன் சித்தாந்தத்தையும், புதிய விளக்கங்களை இன்று இலங்கையில் கொடுத்து வருகின்றனர். கவனமாக அவதானியுங்கள்!!#

நான் வாரம் வாரம் இலங்கை நாட்டினர் புத்த விஹாரத்துக்குத்தான் போய்க்கொண்டு இருக்கிறேன். இலங்கை பவுத்தர்களோடுதான் சேர்ந்து புத்த வந்தனம் திரி சரணம் பஞ்ச சீலம் எல்லாம் சொல்கிறேன். நீங்க சொல்ற மாதிரி அவர்கள் வேற்று கிரகத்து மனிதர்கள் போல என்னிடம் பழகவில்லையே. அவர்களில் ஒருவராகத்தான் என்னை பார்க்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை நான் பவுத்தன் மனிதன் என்னை பொறுத்தவரை அவர்கள் பவுத்தர்கள் மனிதர்கள். எனக்கு சிங்களம் தெரியாது அதனால் அவர்கள் என்னிடம் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். குறைந்தது ஒரு மணி நேரம் பாலி மொழியில்தான் சாண்டிங் சொல்கிறோம். எங்களுக்கு மொழி பிரச்சனை இன பிரச்சனை இல்லையே. சிங்களம் பேசும் பவுத்தர்களை மனந்து பவுத்தர்களாக வாழும் தமிழ் பேசும் சிலரும் அந்த விகாருக்கு வருகின்றனர்.  அவர்களுக்கும் எனக்கும் பாலமாக இருப்பது புத்தம், தம்மம் சங்கம். மெத்தா - அன்பு கருணை. இதுக்கு மேலே என்ன மானுடம் வேண்டும். 


பவுத்த பெரியார் மு சுந்தரராசனார் எனும் நம் சமூக தலைவர்.  புலிகள் பெருகி இருந்த காலம் அது. ராஜீவ் காந்தி சாகும் முன்னர்  புலிகள் தமிழகத்தில் துப்பாக்கி தோட்டாக்களுடன் பொரிக்கித்தனம் செய்து கொண்டு இருந்த காலம். அந்த காலத்தில் சிங்களவர்களுடன் பேச பயப்படாமல். சிங்களம் பேசும் பவுதர்களுக்கும் நமக்கும் உள்ள உறவை பலப்படுத்தியவர். தொடர்ந்து பூர்ணிமா பவுத்த கூட்டங்களை இலங்கை நாட்டை சேர்ந்த அந்த புத்த விகாரில் நடத்தினார். அவரை பல முறை சென்னை எக்மோரில் உள்ள மகா போதி புத்த விஹாரில் சந்தித்து உள்ளேன்.  அவரை போன்று இன்றும் நமது சமூக தலைவர்கள் சென்னை மகாபோதி புத்த விகாருக்கு போய்க்கொண்டுதான் இருக்கின்றனர். சிங்களம் பேசும் புத்த பிக்குகளுடன் மக்களுடன் உறவாடிக்கொண்டுதான் இருக்கின்றனர். பவுத்தர்களை பவுத்தர்கள் என்று அடையாளப்படுத்தாமல் சிங்களம் பேசும் இலங்கை பவுத்தர்களை சிங்களவர்கள் என்றும் நம்மை பவுத்தர்கள் என்று அடையாளப்டுத்தாமல் தமிழன் என்று அடையாளப்படுத்தி அரசியல் நடத்திக்கொண்டு இருக்கிறது ஆதிக்க ஜாதி இந்து கூட்டம் அது புரியாமல் நாம் தமிழர் நாற வாய தமிழர் என்று ஜாலரா அடிக்குது நமது ஜாலரா கூட்டம். இதில் ஜாதி இந்துக்கள் சாதித்தது என்ன என்று கேட்கலாம். இந்த அம்பது ஆண்டுகாலம் புத்தம் நமது மக்களிடம் பரவாமல் தடுத்தது. அதை அந்நிய மதமாக எதிரியின் மதமாக காட்டி நம்மை இந்து மத சிறையில் அரிஜனங்களாக திராவிடர்களாக தமிழர்களாக அடிமை படுத்தி அவன் ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொள்வதுதான் ஜாதி இந்து சாதித்தது. 


காமரூனியன் தமிழ் பேசுறானா? நீங்க காமரூனினியன் பேசிக்கிட்டு இருக்கீங்களா? நீங்க அங்க இருந்து இங்க வந்தீங்களா? இல்லை அவுங்க இங்க இருந்து அங்க போனாங்களா? 

இவனுங்க லெமூரியான்னு சொன்னா  நாம ஒத்துக்கணும். ஆப்ரிக்கான்னு சொன்னா ஒதுக்கணும் ஆஸ்திரேலியான்னு சொன்னா ஒத்துக்கணும் இந்தியாவின் ஒரிஜினல் மொழி தமிழ்ன்னு சொன்னா ஒத்துக்கணும் ஆப்பிரிக்காவின் ஒரிஜினல் மொழி தமிழ்ன்னு சொன்னா ஒத்துக்கணும். தமிழ் 50000 ஆண்டுகளுக்கு முன்ன இருந்துச்சின்னு சொன்னா ஒத்துக்கணும். முதல் சங்கம் அமைத்தபோது அதன் தலைவர் பரமசிவன் அவர் கழுத்தில் இருந்தது நாகம் என்றால் ஆமாம் சாமி போடணும். முருக கடவுளே தமிழ் சங்கத்தில் இருந்தார் என்றால் ஒத்துக்கணும். தமிழ் பாற்க்கடலில் அமிழ்து எடுக்கும்போது தோன்றியது என்றால் ஒத்துக்கணும். சிந்து சமவெளி மக்கள் பேசியது தமிழ் என்றால் ஒத்துக்கணும். அசோகருக்கே எழுத கத்து கொடுத்தது தமிழர்கள் என்றால் ஒத்துக்கணும்.     எப்பா எப்பா எப்பா இவனுங்க புராணத்துக்கு அளவே இல்லைடா சாமி. இராமயணம் மகாபாரதம் புராணம் எனும் பார்ப்பான புளுகுகள் எல்லாம் இவனுங்க கிட்ட தண்ணி வாங்கணும். பொய்யை எப்படி திருப்பி திருப்பி  சொல்லி உண்மை வரலாறு சரித்திரம் ஆக்குவது என்று இவனுங்க கிட்டத்தான் கத்துக்கணும். 



உங்க கட்சியில் அடிப்படை உறுப்பினரா இருக்கணும்னா மது அருந்த கூடாது என்று அறிக்கை விட முடியுமா? அரசு கடை வைப்பது சரி என்று சொல்லவில்லை. ஆனால் உங்க கட்சிகாரர்களை குடிக்க வேண்டாம். குடித்தால் அவர்கள் எமது கட்சியில் இருக்க தகுதி அற்றவர்கள் என்று ஒரு அறிக்கை கொடுத்தால் நல்லா இருக்குமே. அரசு கடை வைக்கவில்லை என்றால் என்ன உங்க கட்சிகாரர்கள் சாராயம் காய்ச்சி கள்ளசாராயம் விற்ப்பார்கள் கள்ள சாராயம் குடித்து சாவார்கள். உங்க கட்சிகார்கள் குடிப்பதை நிறுத்த நடவடிக்கை எடுத்து விட்டு அரசை அதை பின்பற்ற வேண்டும் என்று சொல்லி அறிக்கை விட்டால் நல்லா இருக்கும்.எதுவோ உங்கள் மது ஒழிப்பு பிரச்சாரத்துக்கு எங்கள் வாழ்த்துக்கள். 

No comments:

Post a Comment