Sunday, June 2, 2013

ஆயிரம் வருடம் நான் செத்துக்கிட்ட இருந்த போது என்னை காப்பாத்த முடியாத இந்த மொழி இப்ப என்ன கிழிக்க போகுதாம். ஆங்கிலம் வரலானா அந்த ஆங்கிலேயன் வரலனா திண்ணை பள்ளியில் கூட என்னை இந்த தமிழ் நாய்கள் தமிழ் படிக்க விட்டு இருக்காது. 

சமூக அடிப்படையில் இட ஒதிக்கீடு எவ்வளவு அவசியமோ அது போலவே பொருளாதார இட ஒதுக்கீடு அவசியம்தான். ஆனா சமூக அடிப்படையில் இட ஒதுக்கீடே வேணாம் தகுதி மட்டும்தான் வேணும்னு சொல்லிக்கிட்டே பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கும் லாஜிக்தான் புரியல. அப்படின்னா பொருளாதரத்தில் தாழ்ந்து உள்ள ஜாதி இந்துக்கள் திறமையானவர்கள் பொருளாதரத்தில் உயர்ந்து இருந்தாலும் சாக்கிய (தலித்) மக்கள் திறமை அற்றவர்கள் என்று சொல்ல வருக்கிரீர்களா? 


நான் சிங்களம் பேசும் பவுத்தர்களை பற்றி சொன்னேன். சிங்களத்தை பற்றி சொல்லவில்லை. 


அப்ப ரூபா நோட்ல வராத நீங்களும் நானும் இங்க பதிவு போடுற நாம் எல்லோரும்  முட்டாளா? 






#பாலியிலிருந்து தமிழ் வந்ததாகவே ஏற்றுக் கொண்டாலும் ஒருவனால் பாலியில் சிந்திக்க முடியாது. பாலியும் இந்தி ஆங்கிலம் போல் அயல்மொழிதான் இன்றைக்கு. மனித உறவுக்கு ஒன்று, மதத்திற்கு ஒன்று, அறிவியலுக்கு ஒன்று, தேசத்திற்கு ஒன்று என்று ஒருவன் வாழ்நாள் பூராவும் மொழிக்கற்பதிலேயே செலவிட முடியுமா?#3

மலேசியா சிங்கபூர் ஹாங்காங் அமெரிக்கா ஐரோப்பா கர்நாடகா ஆந்திரா இங்கே எல்லாம் தமிழே தெரியாம ஆனாலும் தமிழர்களா தங்களை சொல்லிக்கொண்டு நிறைய பேர் திரிகிறார்கள். அவர்கள் எல்லோரும் எந்த மொழியில் சிந்திக்கிறார்கள். அவர்களுக்கு தாய் மொழி தமிழா மலாயா? ஆங்கிலமா? அவர்களுக்கு தாய் மொழியா வேற்று மொழியா? தமிழ் அவர்களின் சொந்த மொழியா அயலார் மொழியா? அவர்களின் பூர்வீக மொழி தமிழ் அவர்களின் அடையாளம் தமிழர் என்றால். எங்கள் எங்களின் பூர்வீக மொழி சாக்கியம் (பாலி) எங்களின் அடையாளம் சாக்கியர் என்று சொல்லுவதும் லாஜிக்தானே.   தமிழ் தெரியாத அவர்களுக்கு தமிழ் சொந்த மொழி சமஸ்கிருதம் தெரியாத பார்ப்பனர்களுக்கு சொந்த மொழி சமஸ்கிருதமாக இருக்கும்போது. பாலி தெரியாத பாலியில் சிந்திக்க முடியாவிட்டாலும் பாலி எங்கள் மொழிதானே.  


அவுங்க கல்யாணம் பண்ண மறு நாளே குழந்தை பிறந்தா ஆக்ஸ்போர்டு அனுப்பலாமா? கொலம்பியா அனுப்பலாமா? என்று யோசிக்கிறான். இவரு தாய் மண் தமிழ் மண்ணுன்னு பேசிட்டு கடைசியில  இவரு செய்யுற அதே கிளாஸ் கழுவுற வேலைக்கு புள்ளைய அனுப்பி வைப்பாறு. 

அவன் வாழ அவன் மொழியை பயன்படுதுறான். மொழி தேசியம் பேசுறான். அவன் வாழுறான். நாம மொழி வாழணும்னு நம் வாழ்வை அழிச்சிக்கிறோம். அவன் மொழிய பயன்படுத்துரான். நாம் நம் வாழ்வை மொழி வாழ பயபடுதுறோம். அதுக்கு தாய் கடவுள் தெய்வம் என்று உயிர் கொடுத்து நமது தலைக்கு மேல அதை தூக்கி வைத்து ஆடுறோம். மொழி ஒரு ஊடகம் அதுக்கு குங்குமம் போட்டு நாமம் பட்டை எல்லாம் போட்டு வணங்குவதை விட்டு விட்டு அதை எப்படி பயன்படுத்தி உருப்படுரதுன்னு பாருங்க. நாம உருப்பட உதவாத எதுவும் நமக்கு தேவை இல்லை. 100 வருஷம் தமிழ் மதம் தமிழ் கடவுள் என்று சொல்லி ஏமாற்றினான் இப்ப தமிழ் மொழி தாய் மொழின்னு ஏமாத்துறான். நான் தமிழன் என்று சொல்லிட்டு இருக்கும் எத்தனை பேர் அவன் புள்ளைகளை தமிழ் மீடியத்தில் படிக்க வைக்கிறான். எத்தனை பேர் அவன் புள்ளைகளை அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் படிக்க வேலை தேட அடுப்பரான்னு பாருங்க. வாழ வழிய தேடுங்க. பெத்த ஆத்தாளுக்கு சோறு போட வழி என்னனு பாருங்க. அப்புறமா போயி தாய் மொழி தாய் மண்ணுன்னு அவன் வாழ வேலை செய்யலாம். 

யார் தமிழர்? தமிழர் எனும் அடையாளத்துக்கு தகுதி என்ன? 

நீங்க என்ன ஜாதின்னு சொல்லுங்க நீக்க ஆதி தமிழரா? பாதி தமிழரா? மீதி தமிழரா? ஈழ தமிழரா? தமிழர் நலம் காக்க போராடியதால் தமிழர் ஆன தமிழரா? 5000 வரூஷத்துக்கு முன்ன ஆப்பிரிக்காவில் இருந்து வந்த தமிழரா? லெமூரியா தமிழரா? புலம் பெயர்ந்த தமிழரா? சேரி தமிழரா, ஊர் தமிழரா? தலித் தமிழரா? ஒடுக்கப்பட்ட தமிழரா? ஆண்ட தமிழரா? பேன்ட தமிழரான்னு சொல்றேன். மொத்ததுல நீங்க பிறந்த ஜாதிதான் உங்கள் தமிழ் அடையாளத்தை நிர்ணயிக்கும் முக்கிய தகுதி. 



#ஆதித்தனார் செய்த பிழையை அவர் பிள்ளைகள் நாங்கள் ஒரு போதும் செய்ய மாட்டோம். சீமான் #

நல்லா சொன்னீங்க அண்ணாச்சி. உங்கா நாடா உறவின் முறை இப்ப சரியாதான் செய்துட்டு இருக்கீங்க. 


அது என்னப்பா அது இனம் பொனம்ன்னு  ன்னு பேசிக்கிட்டு. காடு வெட்டி கூட இனம் இனம் ன்னுதான் பேசிட்டு இருக்கார். அவன் வன்னியர் இனம் பத்தி பேசுறார். நீங்க நாடா  இனம் பத்தி பேசுறீங்களா? தமிழர் இனம் பத்தி பேசுறீங்களா? திராவிடம் விதைத்த "இனம்" இப்ப திராவிடத்துக்கே ஆப்பு வைக்குது. 

No comments:

Post a Comment