Sunday, June 2, 2013

#புத்தன் அரச பரம்பரையில் வந்தவன். ஆட்டையப் போட்டவனுக்கு அமைதி ஒரு கேடா? (இது கோபமில்லை. இயல்பாகத்தான்)#

காமராஜர் எம்ஜிஆர் கருணாநிதி இவுங்க எல்லாம் முதல்வரா இருந்தாங்க. இவுங்கள்ள யார் ஆண்ட பரம்பரை.
சித்தார்த்தரின் அப்பா ராஜாவா இருந்தாறு அவுங்க தாத்தா ராஜாவா இருந்தாரா? 
இன்னைக்கு பாராளுமன்றம் போல அன்னைக்கு சாக்கிய சங்கம். இன்னிக்கு ஜனாதிபத்தி, பிரதமர், முதல்மந்திரின்னு சொல்றமாதிரி அன்னைக்கு மக்களால் தேர்ந்த்டுக்கப்பட்ட  மக்களின் பிரதி நிதிக்கு பெயர் ராஜா. அவுங்க தாத்தா எப்படி அரசர் இல்லையோ அது போல அவுங்க அப்பாவுக்கு அப்புறம் இவர்தான் ராஜா என்பதும் நிச்சயம் கிடையாது. மக்கள் தேர்ந்தெடுத்தால் அவர் ராஜாவா ஆகி இருக்கலாம்.  சாக்கிய சமூகத்தில் ராஜாவா ஆவது அவரது உரிமை இல்லை. மக்கள் தேர்ந்து எடுக்க வேண்டும். கோளியர்களுக்கு எதிராக சாக்கியர்கள் போர் தொடுக்க கூடாது என்று அவர் சாக்கிய சங்கத்தில் சொன்ன பொது ஆஹா அரசர் மகனே சொல்கிறார் என்று சங்கம் அவர் சொன்னதை கேட்கவில்லை. மாறாக சங்கம் சொன்னதை ஏற்க்க வேண்டும் அல்லது சங்கம் கொடுக்கும் தண்டனையை ஏற்க வேண்டும் என்று சொன்னது சங்கம். அரசர் மகனாகவே இருந்தாலும் ஜனநாயக கொள்கையை ஏற்க்கும் நிலையில் சித்தார்த்தர் இருந்தார். 

போரை தடுக்க முடியாமல் சங்கம் சொல்வதை ஏற்க்க முடியாமல் குடும்பத்தை சாக்கிய சமூகத்தை  காக்கும் கடமைகளை மனதில் கொண்டு அவர் வீட்டை நாட்டை துறந்து  காட்டுக்கு போனார். விரக்தியில் இரவோடு இரவாக தனது துணைவியையும் மகனையும் குடும்பத்தையும் நாட்டையும் விட்டு ஓடவில்லை. 

No comments:

Post a Comment